பெண்களின் முதல் தேடல் புடவை
ஆண்களின் முதல் தேர்வு புடவை
புடவை
உன்னை உடுத்துவதால் மகிழ்ச்சி
நீ எங்களை விட்டு விலகாததால்
விலகி இருந்தாலும் சற்றே அதிலும்
பிறக்கிறது கவர்ச்சி
கவர்ச்சிக்கு மட்டுமல்ல நீ எங்களின் கனவு
கனவு சில நேரங்களில் மறக்கும் ஆனால்
நீ மட்டும் மறையாமல் மலர்கின்றாய்
மலராய் மனதில் உதிக்கிறாய்
நீ உதிக்கும் வண்ணங்கள் யாவும்
நீங்கா வண்ணமாய் இருக்கிறாய் மனதில்
மனதால் தேடித் தேடி உன்னை பிடிக்க வைத்தாய்
பிடித்த உன்னை பிறரின் பார்வை
ஈர்க்கவில்லை என்றால் மனதால் வலுவிழக்கிறாய்
வலுவிழந்த நெஞ்சோடு அடுத்தவரால்
தீண்டப்பட்ட நீயும் எங்களால் கவரப்படுகிறாய்
கவரப்பட்டு உன்னை நாங்கள் தேடும்போது
கண்ணாமூச்சி காட்டி காணாமல் போகிறாய்
காணாமல் போனாலும் பரவாயில்லை நீ
முப்பது வருடங்கள் கழித்து மறுபடியும்
பிறவி எடுக்கிறாய்
மறுபடியும் பிறவி எடுக்கும் உன்னை அணைக்கும் போது
மீண்டும் ஆர்வமாய் எங்களால் ஆட்கொள்ளப் படுகிறாய்
மானம் காப்பாற்ற வருகிறாய் - சிலநேரம்
தன்மானத்துடன் பிறக்கிறாய் தூளியாகவும் ஆடுகிறாய்
கந்தல் துணி ஆகவும் மாறுகிறாய்
உன் ஜோடி ரவிக்கையுடன் வலம் வருகிறாய்
கடைகளில் வற்றாத நதியாகிறாய்
பாந்தமாக அடுத்தவரிடம் தஞ்சம் அடைகிறாய்
உன்னை பற்றுபவருக்குஉரிமை ஆகிறாய்
பயணிக்கும் போது நீ ஒதுங்கி கொள்கிறாய்
சாமானியர்களுக்கு பருத்தி உடையாகவும்
பணக்காரர்களுக்கு பட்டாடையாகவும் இருக்கிறாய்
சில நேரம் இடம் மாறுவதும் உண்டு சீதோஷ்ண நிலையால்
ஓய்வின்றி உழைக்கிறாய் தறியில்
எங்கள் வீட்டில் திரைச்சீலை ஆகிறாய்
சண்டையிட்டு வாங்கினாலும் பெண்களின்
ஜீவன் ஆகிறாய்
ஏழைப் பெண்களுக்கு கடனிலும் விற்கபடுகிறாய்
சில நேரம் இரவல் பொருளாகவும் இருக்கிறாய்
இந்திய பெண்களின் அங்கீகாரம் ஆகிறாய்
உடுத்துவதில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறாய்
மென்மையாக வருடும் கணவர் போல
என் மேனியை சிலிர்க்க வைக்கிறாய்
மாயமில்லை மந்திரமில்லை உன்னிடம்
ஆனால் எங்களை மயக்குகிறாய்
கடைகளின் பெயர்களால் பேசப்படுகிறாய்
கடை பொம்மை உடைத்திருந்தாலும் வாங்க தூண்டுகிறாய்
விலை மீது விலை வைத்துக் சொன்னாலும்
உன்னை அடையாமல் நாங்கள் ஓயமாட்டோம்
- Veena Shankar
![]() |
-Akhiladevi Kumaran |
புடவை என்றவுடன் ஞாபகம் வருவது தாயின் வாடை,
நாம் நழுவவிட்ட பழக்கத்தால்,
நம் குழந்தைகளுக்கு இல்லை அந்த பாக்கியம்.
தொட்டிலில் தாயின் கதகதப்பை தந்த என் அருமை தோழியே...
அங்கே தான் உல்லாசமாக கலவைகளின்றி உறங்கி உன் மடியில் கனவுகள் கண்டேன்..
அறியா வயதில் உன்னை உடுத்தி விளையாடத பூஞ்சிட்டுகள் இல்லை..
பூப்போன்ற உன்னை அள்ளி அனைத்தவுடன் பல வண்ண கனவுகளுடன் பட்டாம்பூச்சி காற்றில் மிதப்பது போல் மனம் பறக்கும் ..
தென்றல் காற்றில் நீ பறக்க என் மனம் பதபதக்கும்..
மழைச்சாரலில் உன்னுடன் நடந்து பேருந்தில் மழைத்துளி சொட்ட சொட்ட நனைந்த நேரம் தேனாக இனிக்கிறது..
என்றும் உன்னுடன் கைக்கோர்த்து இந்த உலகை உலா வர காத்திருக்கும் உன் அருமை காதலி!!!
- Vidhya Nivash














