நாணயத்தின் இருபக்கமோ இவர்கள்.
கொடுக்க கொடுக்க குறையா வளரும்
உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின்
நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும்
கரங்கள் விலகாமல் பின்ன பிணைய
கூடிய கூட்டம்,இனம்புரியாத நட்பாக
வளருதே,மொழி தடையில்லை,ஓத்த
எண்ணங்கள் இணையுதே,உறவாக
மலருதே.இந்த தலைவன் தலைவியை
கண்டு வியக்க,அவர்களின் நிழல் போல்
வளரும் விதைகள் விருட்சமாக ,விதைத்த
இடமெல்லாம் பூத்து குலுங்க, பல
விழுதுகளை ஊன்ற மண்ணில் துடிக்குதே..
முகமறியா மனங்கள் நிமிர்ந்து நடக்க,
இவர்கள் கனவு காண்கின்றனர்.அது
நினைவாக ஓடும் நதியில் பல கிளை
நதிகள் கலக்க சமுத்திரமாக பெருக்கு
எடுத்து ஓட,இனி ஒருவரும் வருந்தா நிலை
வர வேண்டுவோம்.நோக்கம் ஒன்று
என்றால் ஏக்கம் மறையுதே,
வலிகள் குறையுதே.
விரிந்த கரங்கள் விரியட்டும்,இங்கே
நேரத்தை மட்டுமே விலையாக கொடுக்க
பலமடங்காக கிடைக்கும்
தன்னம்பிக்கைக்கு
உத்திரவாதம் !
இன்று அற்புதமான நாள்,சிலரை சந்திக்க
எந்த காரணமும் தேவையில்லை,எதை
விரும்புகிறமோ அது தானாக நம்மை வந்து
சேரும்.அது பிரபஞ்ச சக்தி .எப்படி கூடினோம்
என்பதை விட,எதற்காக கூடினோம் என்பதே
முக்கியம், நிறையை மறந்து குறையை தேடி
திரியும் உலகில், ஆரோக்கியமே
ஆசிர்வாதம்,பலரின் வலிகள்,வடுக்கள்
மறைய நேர்மறை எண்ணத்தோடு
,தன்னம்பிக்கையோடு வாழ்வை நடைபோட,
அன்பான குடும்பத்தின் ஆதரவுடன்
இந்த புற்று நோயில் இருந்து
மற்றும் எந்த நோயிலிருந்தும் விடைபெற,
தள்ளிப்போட முடியும்.என பல அனுபவத்தை
பரிமாறிய தினமும்.சாயிஷா குழுமத்தின்
நிறுவனர்களை சந்தித்த தினம், இந்த குழுமம் 2018 ம்
ஆண்டிலிருந்து மார்பக புற்றுநோயில்
பாதிக்கப்பட்டவருக்கு
தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையில்
பருத்தி நூலால் பின்னப்பட்ட செயற்கை
மார்பகங்களை இலவசமாக கொடுத்து
தொண்டாற்றி வருகின்றனர்.அதில்
அங்கமான அமீரகத்திலுள்ள
தன்னார்வலர்களை நேரில்
வந்து சந்தித்தனர்.முகமறியா பலருக்கு
இவர்கள் மூலம் வலியை மறந்து
தன்னம்பிக்கை பிறக்க
சாயிஷா குழுமம் தொண்டு ஆற்றிவருகிறது.
அதிலிருக்கும் ஒவ்வொரு நல்
உள்ளங்களுக்கும் நன்றிகள் பல,
நம் கூடவே இருக்கும் பலருக்கும் இந்த
நம்பிக்கை தேவைபடலாம்,இந்த ஆதரவை
கொடுத்து பலரை காப்பாற்ற,
எச்சரிக்கையாக இருக்க வைக்க முடியுமே!
முடியும் வரை காப்பாற்ற
முயல்வதும், பலரின் மடிதலை
தடுக்குமே .
- Vidhya Nivash






No comments:
Post a Comment