Thursday, August 19, 2021

இந்த வாரத்தலைப்பு "திருக்குறள்" by Vedavalli Ramani

 


 திருக்குறள் பற்றி மறந்து யோசித்து நினைவில் வந்ததை சொல்லறேன் .தப்பு இருந்தால் சொல்லவும்.

1.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

கருத்து அன்புள்ளவர்கள் பிறர்க்கு எல்லாம் கொடுப்பார்கள்.அன்பில்லாதவரகள் எதுவும் பிறர்க்கு கொடுக்க மாட்டார்கள்.

2.இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.

கருத்து நமக்கு கெடுதல் செய்தவர்க்கும் அவர்கள் பாடும்படி நல்லது செய்யணும்.

3.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

தொட்டணைத்து ஊரும் மணல் கேணி மாந்த்தர்கு கற்றனைத்து ஊரும் அறிவு.

கருத்து.கிணற்றில் தூறு எடுக்க எடுக்கத்தான் தண்ணீர் ஊறி வரும் அதுபோல் மக்களுக்கு படிக்க படிக்கத்தான் அறிவு வளரும்.

1 comment:

  1. Vidhya Nivash: அழகு ,அன்பே எல்லாம் super amma
    Vidhya Nivash: Super Amma,அருமையான திருக்குறள்கள் 👌🏻
    VeenaShankar: சூப்பர் அம்மா. உங்களுடைய நினைவு திறனும் தாங்கள் மேற்கோள் காட்டிய திருக்குறளும்
    Akhila: மூன்று முத்தான திருக்குறள்கள் அம்மா… நன்றி 🙏🙏🙏

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...