Sunday, September 13, 2020

உடையார் பாகம் 1- கதை சுருக்கம் by Vidhya Nivash


 உடையார் - பாகம் 1
by Vidhya Nivash

அனைவருக்கும் வணக்கம்,

பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம்பமாகிறது.ஒவ்வொரு வரிகளையும் ரசித்து வடித்துள்ளார்.என்னால் முடிந்த வரை  விளக்கி உள்ளேன்.

உடையார் நாவலின் முதல் பாகம் சுருக்க உரை, பழமார்நேரி கிராமத்திலேயே குயிலின் ஓசையுடன் நாவல் ஆரம்பமாகிறது. அந்தக் குயிலின் ஓசை கேட்டு பிரம்மராயர் காலையில் கண் விழித்து எழுகிறார். ஊர் எங்கும் மழை பெய்து வரும் காரணத்தினால் தன்னுடைய வீட்டிற்கு பின்புறம் சென்று தீவிர சிந்தனையில் இருக்கிறார். அங்கே குதிரை வரும் ஓசை கேட்கிறது அவருடைய வலது கை ஒற்றர் ஆன கமலக்கண்ணன் வருகிறார். இருவருமாக ஒன்று சேர்ந்து மழை வெள்ளம் பற்றி கலந்தாலோசிக்கிறார்கள். ஆளுக்கொரு குதிரையுடன் ஊரை வளம் வர செல்கிறார்கள். இரண்டு தேவரடியார்கள் ஓலையுடன் தாங்கள் சிதம்பரத்தில் இருந்து குடிபெயர வந்துள்ளோம் என்று கூறுகிறார்கள். அப்படியா தங்கள் உடைமைகள் எங்கே என்று கேட்கிறார்கள். அவை பின்னே மாட்டுவண்டியில் வருகிறது என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மூன்று மாட்டுவண்டிகள் அக்கரையிலிருந்து இக்கரை கடப்பதற்காக ஆற்று வெள்ளத்தில் போராடிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் இருவரும் விரைந்து கரையை நோக்கி செல்கிறார்கள். சத்தம் கேட்டு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி விடுகிறார்கள். கடுமையான போராட்டத்திற்கு இடையில் அதில் இருந்த ஆறு தேவரடியார்கள் மீட்க படுகிறார்கள்.


பிறகுதான் கேட்கிறார் பிரம்மராயர், "அம்மா நீங்கள் சிதம்பரத்திலிருந்து வருகிறீர்களா?" என்று. "இல்லை ஐயா நாங்கள் திருவக்கரையில் இருந்து வருகிறோம்."

 "அவ்வளவு தொலைவில் இருந்து வருகிறீர்களா!!" என்றார்.


"ஆம் ஐயா இளவரசர் ராஜேந்திரனின் கட்டளையின்படி கோயில் கட்டுவதற்கான வரைபடங்களை கொண்டு வந்துள்ளோம்."என்றனர்.

 "எங்கே அந்த வரைபடங்கள் என்று கேட்கிறார்.அவை மாட்டுவண்டியில் உள்ள பெட்டியில்தான் இருக்கிறது என்கிறார்கள். 

"அப்படியா !!மன்னனின் கோபத்துக்கு அல்லவா ஆளாக உள்ளோம்"என்றார்.


உடனடியாக விரைந்து மாட்டு வண்டியை கரை சேர்க்க கலந்தாலோசிக்கிறார்கள். மாட்டு வண்டியோ பாதி மூழ்கிய வண்ணம் உள்ளது. அப்பொழுது அங்கே குதிரைகள் வரும் சத்தம் கேட்கிறது கதையின் நாயகனான ராஜராஜசோழன் அவர்கள் அங்கே வருகிறார். அவரும் நிலவரம் கண்டு களத்தில் உடனடியாக இறங்குகிறார். கடைசியாக பனை மரத்தில் கயிறு கட்டி மாட்டு வண்டி அழகாக கரைக்கு இழுத்து வரப்படுகிறது.


ராஜராஜீ பெட்டியில் உள்ள மூன்று ஒலைகளை எடுத்து, அதில் ஒன்று மன்னருக்கான ஓலை, மற்றொன்று பிரம்மராயருக்கான ஓலை. மற்றொன்று அந்த தேவரடியார்கள் பற்றிய அறிமுக ஓலை எனத் தருகிறாள். மன்னர் ஓலையைத் திறந்து படிக்கிறார் "திருவொற்றியூர் எல்லையில் 6000 ஆட்கள் வளைத்து வைத்திருக்கிறேன். கங்கபாடி நாட்டைச் சேர்ந்தவர், வலுவான வீரர்கள் இன்னும் இரண்டு தினத்தில் தஞ்சை நோக்கி நடக்க உள்ளார்கள். இது அவசியமா" என ராஜேந்திரன் எழுதியிருந்தார்.


மன்னர் பிரம்மராயர் பக்கம் திரும்பி, "தங்களுடைய ஓலையில் என்ன இருக்கிறது என்று கேட்டார். அதிலும் இந்தக் கோயில் "கட்டுவதில் எனக்கு விருப்பமில்லை "என ராஜேந்திரன் எழுதியிருந்தார்.

தெற்கே ஈழமும், மேற்கே சேர தேசமும் ,வடக்கே கங்கபாடியும் ,நுளம்ப்பாடியும் கைப்பற்றப்பட்டு விட்டது. கிழக்குப் பகுதியில் கடல் கொள்ளையர்கள் யாவும் அடக்கப்பட்டு வணிகர்களுக்கு நல்ல பாதுகாப்பும் வசதியும் தரப்பட்டு, சீரும் சிறப்புமாக வணிகம் நடைபெறுகிறது. அப்படியிருக்க சோழ தேசத்தின் புகழ் பரப்ப நான் கோயில் கட்டியே ஆகவே வேண்டும் என்று மன்னர் தனக்குள் பேசிக் கொண்டார்.


அன்றிரவு பழமார்நேரி கிராமத்திலேயே தங்க முடிவு செய்தார்.அன்று மாலை மன்னர் அங்கே உள்ள சிவன் கோயிலில் மக்கள் அனைவரையும் சந்தித்தார். ஒவ்வொருவருடைய ஆலோசனையும் தீர விசாரித்துக் கொண்டிருந்தார், மிக ஆவலாக எப்படி ஐந்துபனையுர கோயில் கட்டப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். மன்னர்பல குழப்பங்களுடன் உடன் பேசிக்கொண்டிருந்தார். ஊரில் இருக்கும் ஒவ்வொரு மக்களும் தங்களால் ஆன உதவியை கண்டிப்பாக புரிவோம் என்று ஆரவாரம் செய்தார்கள். மிகுந்த சந்தோசத்துடன் கூட்டம் கலைந்து சென்றது.


அந்த மூன்று ஓலைகள் மட்டுமில்லாமல் மற்றொரு வணிகரிடம் இருந்தும் பிரம்மராயர்க்கு ஒரு ஓலை வந்திருந்தது. அதில் இளவரசர் வடக்குநோக்கி போரிட ஆவலாக உள்ளார் , மற்ற திசைகளிலும் போருக்கான அறிகுறிகள் இருக்கின்றன. இந்த நிலையில் கைதிகள் தஞ்சைக்கு வருவது நியாயமா என்று சிந்திக்க வேண்டும் என ராஜேந்திரன் எழுதியிருந்தார்.. 

இளவரசன் ஒற்றன் கடுவன்காரி இதை ஒட்டு கேட்டுக்கொண்டிருந்தான்.


சோழ எல்லையை பலப்படுத்தும் நோக்கத்துடன் இளவரசன் காஞ்சியில் குடியிருந்தார். சுந்தரர் வாழ்ந்த இடமான திருவாலங்காடு அவருக்கு மிகவும் பிடித்த இடம். ஒரு சிவத்தொண்டர், அவருடைய படைவீரர்களுக்கு எப்பொழுதும் போருக்கு செல்வதற்கான பயிற்சிகளும், இலக்கிய சொற்பொழிவுகளும், கோவில் வழிபாடு, எப்பொழுதும் பயணத்துக்கு ஆயத்தமாக பழக்கப் பட்டிருந்தனர். இளவரசன் தனக்கென ஒரு பெரும்படையை காஞ்சியில் உருவாக்கிக் கொண்டிருந்தார். அனைவரிடமும் சமமாக பழகுவார்.


ராஜராஜீ பக்கத்தில் உள்ள குமுதினி வீட்டில் தங்கி காயங்களுக்கு மருந்து போட்டு கொண்டார். தஞ்சை வீட்டை கண்டு மிகவும் வியந்தாள் அழகான சித்திரங்கள் வரையப்பட்ட சுவர்கள், ஆங்காங்கே விளக்கு வைப்பதற்கான மாடங்கள் , துளசி மாடம், பின்புறமும் அழகான தோட்டம் ஒவ்வொன்றாக கண்டு வியந்து கொண்டிருந்தாள். 

"யாரேனும் ஓவியர் இருக்கிறார்களா?" என்று வினாவினாள்.

குமுதினி, "பொழுது போகாத வேளையில் சித்திரம் வரைவேன் என்று கூறினாள். என்னுடைய கணவரும், மாமனாரும் ஊருக்காக இறைவழிபாடு,ஜெபிப்பது மட்டுமே முழு நேர தொழிலாகக் கொண்டுள்ளனர் அதற்கு மானியம் உண்டு.நீங்கள் தலைக்கோலி அல்லவா" என்று ராஜராஜீ பார்த்து கேட்டாள். தலைக்கோலி என்றால் அவருக்கு கீழே 10 பேருக்கு பயிற்சி கொடுக்கும் அளவிற்கு திறமை பெற்றவர். 

"ஆம்.. நான் ஒரு தலைக்கோலி தான்!"எண்றாள் ராஜராஜீ. 

"உங்களுக்கு மானியம் உண்டா?" என்று குமுதினி கேட்டாள். 

"ஆம்.. எங்களுக்கு மானியம் உண்டு எங்களை போல் இன்னும் பலரும் ,பல சிற்பிகளும் பல ஊரில் இருந்து இங்கே வர உள்ளார்கள்" என்று கூறினாள் ராஜராஜீ. 

வேலையில் சிற்பிகளுக்கு களைப்பு தெரியாமல் இருக்க நாங்கள் அழகான திருத்தொண்டர் புராணம் நடனம் புரிந்து அவர்களை உற்சாகப்படுத்த போகிறோம்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே பிரம்மராயர் நுழைகிறார். மும்முடி சேனாதிபதி, கிருஷ்ணன் ராமன் என்னும் பிரம்மராயர், மூன்று பெரும்சோழப் பேரரசு களான சுந்தர சோழன், உத்தம சோழன் ராஜராஜ சோழன், ஆகிய மூவருக்கும் பல ஆண்டு காலமாக சேனாதிபதியாக சேவை செய்து வருகிறார்.

நன்றி,

முதல் பாகம் தொடரும்..



Click the link here to hear the audio by Vidhya Nivash:

 Audio book-Udaiyar-Part1


8 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...