Thursday, August 12, 2021

இந்த வாரத்தலைப்பு "தூக்கம்"



மயிலும் மெத்தை மேல் மையல் கொண்டு துயில வந்ததோ

வயிற்று பசியோடு இருக்கும் போது தூக்கம் என்பது கனவு

தூக்கம் துறந்து போயின் துக்கம் விழிக்கும். மனதில் துக்கம் ஆட்கொண்டால் தூக்கம் துறக்கும்.

மழலையின் தாய் மடி தூக்கம்

தாலாட்டு கேட்டபடியே வரும் பிள்ளையின் தூக்கம்

மாணவனின் வகுப்பறை தூக்கம்

தாரத்தின் /கணவனின் அன்பினால் வெளிப்படும் தூக்கம்

பூனையைப் போல் வரும் குட்டி தூக்கம்

அம்மா தலை வருடும்/வாரும் போது வரும் தூக்கம்

விடியலில் கண் விழிக்காமல் சூழும் தூக்கம்

நிலவின் ஒளியில் வரும் மொட்டைமாடி தூக்கம்

தென்றல் வருடுவதால் வரும் தூக்கம்

அசதியால் வரும் மெய் மறக்கும் தூக்கம் 

கடமையாற்றிய பிறகு வரும் ஆனந்த தூக்கம்

பிறர் திட்டும் போது காது கேட்காது போல் நடிக்கும் போது வரும் தூக்கம்

நித்திரை மாத்திரை சாப்பிட்டும் சில நேரங்களில் மட்டுமே வரும் தூக்கம் 

இதையெல்லாம் புறம் தள்ளி சாப்பிட்டவுடன் வரும் அழகான தூக்கம் 

இவையாவும் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் அமையாதது.

                                 - Veena Shankar 

ஏழை மக்களுக்கு பணம் இல்லாததால் தூக்கம் இல்லை.

நடுத்தர மக்களுக்கு எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து தூக்கம் இல்லை.

பணக்கார மக்களுக்கு அதிகமாக பணம் இருப்பதால் தூக்கம் இல்லை.

                                - Shruthy

நல்ல தூக்கத்திற்கு எந்த அலங்கரித்த படுக்கையும் தேவையில்லை உடல் சோர்வும், மன அமைதியை தவிர..

தூக்கம் இல்லாத மனிதன் நடைபிணம்..

நினைத்தவுடன் துயில் கொள்ளவதே மிகப்பெரிய பாக்கியம்..

துயிலை தொலைத்து சம்பாரித்த சொத்தை வைத்து துயிற்கு ஏங்கதே..

துயில் இல்லையேல் வேண்டாத விருந்தாளி வருவான்

வேண்டியவற்றை இழப்பாய்..


கனவுலகின் சொந்தக்காரி தூக்கம்..

குழந்தை முதல் முதியோர் வரை அடக்கம் தூக்கத்தில் சிரிக்க, அழுக,நடுங்க,அலற,சமைக்க,குளிக்க,ஓட,ஆட,பாட,பேச அதுவும் வேற்றுமொழியில்,நடக்க... நினைவின்,எண்ணத்தின்,ஏக்கத்தின் மாற்றுமொழியாக தூக்கத்தில் கனவு..

சில நேரம் ஹீரோ,பல நேரம் வில்லன் வர,

சில நேரம் நாய்,பல நேரம் யானை துரத்த,

சில நேரம் துக்க வீட்டில்

பல நேரம் கல்யாண வீட்டில்,

சில நேரம் திருவிழாவில்

பல நேரம் துணிக்கடையில்


பிரிந்தவர் பல நேரம் நேரில் போல் உரையாட...

பல நேரம் கனவிலே சமைக்க கணவர் வந்து எழுப்பும் வரை

பேருந்தை விட்டு பல நேரம் அலைய

பரீட்சைக்கு தாமதமா போவது..

மீண்டும் வகுப்பறையில் தோழிகளுடன்,

பலநேரம் பாதை மறந்து அலைந்து திரிய..

பலவிதமான அனுபவங்களை தந்தாய் தூக்கமே..

கனவு இல்லாத தூக்கம் தான் நல்ல தூக்கம் என்பார்🤔

தூக்கும் முன் அமைதியான, மனதிற்கு இதமானவற்றை பார் கேள்

இங்கு அதுவும் online school 12 மணிக்கு கூட குறுஞ்செய்தி 

தூக்கத்திற்கு முன் பின் கைபேசியின் துணையே!!!

துயிலின்றி துவளாதே மனமே..

மனஅமைதிக்கு பின் தென்றல் வந்து தீண்ட இமைகள் சொல்லாமல் கதவடைக்க உலகமே கொஞ்சம் கொஞ்சமாக மறைய நினைவலைகள் கனவாக மாற துயில் கொள்...

                                  - Vidhya Nivash 




                               - Akhiladevi Kumaran 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...