Monday, November 30, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"ஊஞ்சல்" by Jaya

 


அசைந்தாடும் ஊஞ்சலுக்கிணையாக

அழகாய், ஆசையாய்

இன்பமாய், ஈடகமாய்

உற்சாகமாய், ஊக்கமாய்

எழிலாய், ஏகாந்தமாய்

உள்ளத்தின் எண்ணமும் 

வண்ணமாய் ஆடுகிறதே என்னுள்!!!!


இன்றைய அவசர உலகினில்

நில்லா அலையும் 

வாழ்வில்

மனமேங்கும் 

மழலை நினைவுகளை

நின் தாலாட்டும் 

மடிதனில் 

முழுவதுமாய்

நனைகிறேன் 

சுகமாய்!!!

Saturday, November 28, 2020

சிந்தனைக்குரிய பகுதி - "பென்சில்" by Vidhya Nivash

 


எந்த வயதிற்கும் ஏற்ற நண்பன்,

அவரசத்தில் எழுத கை கொடுப்பான்.

Some interesting facts about Pencil from Google





சிந்தனைக்குரிய பகுதி - "ஊஞ்சல்" by Rajaram

 


உன்னை காணும் போதெல்லாம் குழந்தையாய் ஆகிறேன் - நான். 

உன்னோடு நான் ஆடும் போது என் மனம் இல்லை - என்னோடு. 

உன்னோடு நான் செல்லும் போது அன்னையின் மடியை உணர்கிறேன் - நான்.

 மீண்டும் மழலையாய் மாற உன்னை தேடுகிறது-என் கண்கள் ._வளர்மதி.

 என்னை சூழ்ந்து  இருக்கும் - தென்றல் காற்றை எனக்கு அறிமுகம் செய்தவள் நீ. 

                                                         _ Rajaram.



சிந்தனைக்குரிய பகுதி-"ஊஞ்சல்" by Vishalini

 


விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் 

இன்னல்களை மறந்து ஆனந்தப்பூங்காற்றாய் தவழ்ந்திடுவர் சிறுமியர், இவ்வூஞ்சலில்

                         -Vishalini

சிந்தனைக்குரிய பகுதி - "ஊஞ்சல்" by Veena Shankar

 


வாழ்வில் உண்டு ஏற்ற இறக்கம், சிறு வயதில் அறியேன், ஊஞ்சல் தான் என் முதற் படி ( பாடம்) என்று

Wednesday, November 25, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"பென்சில்" by Jaya

 
எத்தனை முறை திருகப்பட்டாலும், தீண்டப்பட்டாலும்
கரைந்தாலும் 
தன் கூர்மையால்
பிறரை சான்றோராக்கும்
உன்னத படைப்பாளி!!!

ஒவ்வொரு மழலையின் முதல் காதல் நீ !!!

நாச்சியாரின் பயணம் by Nachammai

                      நாச்சியாரின் பயணம்

                                                                       -நாச்சம்மை

    பயணித்தல் என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. இரயில், கார் ,விமானம் கப்பல் என பயணிப்பது ஒரு வகை. மனதளவில் எந்த தூரத்துக்கும் சென்று வந்து பயணிப்பது ஒரு வகை. இந்த இரண்டாவது பயணம் நமக்கு மகிழ்ச்சி, வருத்தம் என கவலையான உணர்வுகளை தருவது. இந்த எண்ணங்களை நாமே அசை போடாமல் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்த வேண்டும்.


எனக்கு தெரிந்த பூக்கள், மரங்கள் ,காய்கறிகள், சமையல்,கடல் ,வானம் ,விளையாட்டு ,அரசியல் ,நாடகம் ,சினிமா, கடவுள்,இசை என எல்லாவற்றைப் பற்றியும் என் பேரன் பேத்திகளுக்கு சொல்லி வருகிறேன். பெரும்பாலான விஷயங்களை கடவுள் பெயரைச் சொல்லி நம்மை செய்ய வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாமாவது இதற்கு இது தான் காரணம் என பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் ,தமிழ்நாட்டின் பெருமையை நிலைநாட்ட முடியும். இணையம் என்பது ஒரு நொடியில் எல்லாவிதமான தகவல்களை கொட்டுகிறது . எனவே நமக்குத் தெரிந்த நல்லதை மக்கள் பயன் பெறும்படி கூறுவது நமது கடமை.


கடற்கரைக்கு (பீச்)செல்வது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. மாதம் ஒருமுறை எங்கள் தந்தை காரில் கடற்கரைக்கு அழைத்துச் செல்வார் . தண்ணீரில் ,கடல் அலையில் கால்கள் நனைய நிற்பது மகிழ்ச்சி ஏற்படுத்தும், அடுத்து மணல் வீடு கட்டுவது. அடுத்து சுண்டல் வாங்கி சாப்பிடுவது . "மெட்ராஸ் காபி" என்ற பெயருடன் ஒரு வேன் மெரினா பீச்சில் நிற்கும். என் தந்தை காபி வாங்கி குடிப்பார். என் தம்பிக்கு 3 வயதிருக்கும் போது காலில் சிரங்கு வந்து விட்டது அதனால் கடற்கரையில் மண்ணை தோண்டி அந்தக் குழியில் ஊறி வரும் நீரில் நிற்க வைப்பார்கள். கால்கள் பலம் பெறும் அந்த மாதிரி நிற்க வைப்பார்கள்.



வாத மரத்து இலைகளை எண்ணெய் தடவி நெருப்பில் வாட்டி காலில் வைத்து கட்டுவார்கள். இவை இயற்கை வைத்தியம். மெரினா பீச்சில் கூட்டமாக இருப்பதால் 60 வருடத்துக்கு முன்பே எலியட்ஸ் பீச்சுக்கு கூட்டிப் போவார். அங்கிருக்கும் அஷ்டலட்சுமி கோயில் , அறுபடைவீடு கோவில் எல்லாம் பிறகு வந்தவை ஆகும்.



ஆந்திராவில் இருந்து மாங்காய் ஒரு மூட்டை வரும். அதை ஆவக்காய் ஊறுகாய் ,உப்பு ஊறுகாய் ,உரைப்பு ஊறுகாய் ,வற்றல் என வழி செய்வார் என் தாய். பெரிய பெரிய ஜாடியாக வரிசைகட்டி இருக்கும் . நார்த்தங்காய் ,எலுமிச்சை ,கடாரங்காய் ,உப்பு ஊறுகாய்கள் ஜாடி ஜாடியாக இருக்கும்.தகர டின் களில் தான் மளிகைப் பொருட்கள் இருக்கும். மண்ணெண்ணையிலிருந்து எல்லா எண்ணெய்களும் டின்டின் ஆகத்தான் வாங்குவார்கள் . கார்த்திகை மாதம் பிறப்பதற்கு முன்பே வீடு சுத்தம் செய்வார்கள். என் தந்தை சைவம் என்பதால் கறி சமைக்க என்றே தனி பாத்திரங்கள் இருக்கும். கார்த்திகை மாதம் சாப்பிடுவதற்கு என்று தனித் தட்டுகள் வைத்திருப்போம். அவரவர் தட்டில்தான் சாப்பாடு சாப்பிடுவோம் .


திருவிழா மே மாதம் வரும். அப்போதுஊருக்கு செல்வோம். பக்கத்து ஊர்களில் இருக்கும் சொந்தபந்தம் நம் வீட்டிற்கு வந்து இருப்பார்கள். நாங்கள் ஊருக்கு செல்லும் வழியிலேயே சமையல்கார அண்ணனையும் அவர் மனைவியையும் அழைத்து செல்வோம். நாங்கள் திரும்பி வரும்வரை எங்களோடு இருந்து நாங்கள் ஊருக்கு திரும்பும்போது அவர்களை வீட்டில் கொண்டு விடுவோம். அவர் என் தந்தையுடன் சிறு வயதில் ஒன்றாக விளையாடியவர். அவர் தந்தை என் பாட்டிக்கு சமையல் வேலை பார்த்தவர். எங்கள் ஊர் ஊருணி தண்ணீர் அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த அக்கா தண்ணீர் எடுக்கப் போகும்போது நானும் போவேன் . அம்மியில் அரைக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து கொள்வேன். பித்தளை டபரா டம்ளரில் காபி குடிப்போம்.


என் தாய் இறந்தபோது அந்த அக்கா துக்கம் விசாரிக்க வந்தார். எப்படி இருக்கிறீர்கள் எனகேட்டவுடன் கண்ணீர் வழிய என் கைகளைப் பிடித்துக் கொண்டார். உங்கள் அண்ணன் (சமையல்காரர்) இறந்த பிறகு நான் கோழி வளர்க்கிறேன் . வேப்பம்பழம் பொறுக்கி விற்கிறேன் .எப்படியோ என் காலம் போகிறது என்றார். என் மக்க உங்களையெல்லாம் பார்ப்பதற்காக தான் இம்புட்டு தொலைவு (ரெண்டு கிலோமீட்டர் )நடந்து வந்தேன். நீங்களெல்லாம் நல்லா இருக்கணும். உங்க பிள்ளை குட்டி எல்லாம் நல்லா இருக்கணும் என்று என்னை வாழ்த்திய போது நானும் உடைந்து விட்டேன். அப்போதெல்லாம் வேலைக்காரர்களை வீட்டில் ஒருவராகத்தான் எண்ணினார்கள். சட்டென்று என் பர்சில் இருந்த பணத்தை கொடுத்தேன். முதுமையில் வறுமை என்பது அதுவும் புருஷன் இல்லாத பெண்களுக்கு மிகவும் கொடுமை.


பெண் பிள்ளைகள் வயதுக்கு வரும்போது அதை உறுதிப்படுத்துவது தாயல்லாமல் வேறு ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பார்கள். எனக்கு மாடி வீட்டில் இருந்த சீதை ஆட்சிதான் உறுதிப்படுத்தினார். அப்போது 10 நாட்கள் தனியாக உட்கார வைத்தார்கள். ஆண்களைப் பார்க்கக் கூடாது, பேசக்கூடாது. வருகின்ற சொந்த பந்தம் எல்லாம் தாயார் தந்தையரை பார்த்து பேரனுண்டா என்று கேட்பார்கள். பேரன் பெற்றுக்கொடுக்க மகள் தயாராகிவிட்டார் என்பது அதற்கு அர்த்தம். மாதா மாதம் மூன்று நாட்கள் தனியாக உட்கார வைப்பார்கள். தனியாக படுக்க தலையணை, பாய் ,தட்டு ,டம்ளர். 4 ஆம் நாள் தலை குளித்து பிறகு வீட்டுக்குள் விடுவார்கள். இப்போது உள்ள பெண்குழந்தைகள் இதை நம்ப கூட மாட்டார்கள். மூன்று நாட்களிலும் தென்னை ஓலைகளை கிழித்து தென்னை விளக்கமாறு செய்வோம். கதை புத்தகங்கள் படிப்போம் கரப்பான்பூச்சி எலி களோடு சேர்ந்து தூங்க வேண்டியது தான். எங்கள் ஊரில் உள்ள வீடுகளில் அந்த மூன்று நாட்கள் பெண்கள் தங்க வென்றே தனியறை இருக்கும். எல்லா காரியங்களுக்கும் யார் கையாவது எதிர் பார்க்க வேண்டி இருக்கும். திருமணம் வரை இப்படித்தான் இருந்தேன்.


தி. நகர் பனகல் பார்க் எதிரே உள்ள சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளியில்தான் 6 முதல் 11 வரை படித்தேன். எம் .ஆர் ராதாவின் இரு பெண்கள் இருவருக்கும் ராணி என்று பெயர் என்னுடன் எட்டாவது வரை படித்தார்கள். அந்த சமயத்தில்தான் எம் .ஆர் ராதா எம்.ஜி.ஆரை கழுத்தில் சுட்டு அவரும் தன்னையே சுட்டுக் கொண்ட சம்பவம் நடந்தது. அவரது இரு மனைவியரது பெண்கள் அவர்கள் .அவர் ஜெயிலில் இருந்தபோது அவ்விரு பெண்களும் மாமாக்களையே திருமணம் செய்து கொண்டனர். கஸ்தூரி என்ற தோழி எனக்கு நெருக்கமானவள். அவள் வீடு எங்கள் வீட்டுக்கு அருகில் வாணி மஹால் ஒட்டியிருந்தது.என்னை விட உயரமாக இரண்டு நாய்கள் அவர்கள் வீட்டில் இருந்தன. அவற்றைப் பார்த்துக்கொள்ள ஒரு வேலைக்காரன். அவற்றுக்காக ஒரு வீடு என ராஜ வாழ்க்கை வாழ்ந்தன. என்னை தவிர யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். அவளுக்கு இரண்டு அக்காக்கள். பெரிய அக்காவை அழகாக மாற்ற வேண்டும் என்று மும்பையிலிருந்து பியூட்டிஷியன் வந்து அவர்கள் வீட்டிலேயே தங்கி இருந்தார். பியூட்டிபார்லர் இங்கு இல்லாத காலத்தில் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என அவ்வளவு செலவு செய்தார் அவள் தந்தை. அவளது வீட்டின் மாடியில் சுவரில் பெரிய வால் போஸ்டர் ஒட்டி இருந்தார்கள்.55 வருடம் முன்பு இதெல்லாம் பெரிய விஷயம்.


எனது நாலாவது அண்ணனின் நண்பர் ஜி.வெங்கடேசன்.பிற்காலத்தில் சினமா உலகத்தில் பெரிய மனிதராக விளங்கியவர்.என் அண்ணாவின் பெயரும் வெங்கடேசன்.எனவே அவரது நண்பர்கள் என் அண்ணனை எம்.வி எனவும் அவரை ஜீ.வி எனவும் அழைத்தார்கள். அவரது தந்தை தான் கல்யாணபரிசு படம் எடுத்தவர். அவரது (தந்தையின்) தம்பியின் பிள்ளைதான் டைரக்டர் மணிரத்தினம். ஜீ.வி என்ற பெயர் நிலைத்து விட்டது. மைக்கில் ஜாக்சன் நிகழ்ச்சி மும்பையில் நடத்துவதற்கு எல்லா ஏற்பாடும் செய்திருந்தார். ஆனால் மைக்கேல் ஜாக்சன் வராததால் நிகழ்ச்சி நடைபெறவில்லை. அவர் கடன் வாங்கிய பைனான்சியர் கடனை கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். கோடிக்கணக்கில் வாங்கிய பணத்தைக் கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர் ஆட்களுடன் வீட்டுக்கு வந்து நடுவீட்டில் அமர்ந்துகொண்டு தொல்லை கொடுத்து இவரது மனைவி மக்களை கேவலமாக பேச அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். பிறக்கும்போதே பணக்காரராக பிறந்தவரின் முடிவு இப்படியா இருக்க வேண்டும். என் அண்ணாவின் இன்னொரு நண்பர் பலராமன். அவர் நன்றாக படித்து"பான்ஸ்" கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக உயர்ந்து பெரிய பதவிக்கு வந்து" பான்ஸ்பலராமன் "என்று அழைக்கப்பட்டார். இவர்களது வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதே.

(தொடரும்)..

Tuesday, November 24, 2020

சிந்தனைக்குரிய பகுதி -" பென்சில்"by Susila

 


காலை வணக்கம் தோழிகளே..

சிரம் தாழ்த்தி கரம் பிடித்தால் ,சிந்தனைக்கு உயிர் கொடுப்பான்😊

Monday, November 23, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"பென்சில்" by Kanchana



பென்சில்.......        

எனக்குள் புதைந்திருக்கும் உணர்வுகளை...... எழுத்துகளாக பிரசவிக்கும் தாய்.......



பென்சில்......

வெள்ளை தாளில்.... முத்து முத்தாக கார் எழுத்துகள்...... வெண்ணில வானில் கார் மேகத்தினை நினைவூட்டுகின்றன



பென்சில்......

கூர்மையான வார்த்தைகள் உதிர்ப்பதோடில்லாமல்.....தன் தேகத்தினை(சீவி) உதிர்த்து அழகான பூக்களை பூக்கவும் செய்யும்




Sunday, November 22, 2020

சிந்தனைக்குரிய பகுதி -" பென்சில்" by Jayanthi

 


சீவ சீவ உழைக்கின்ற உழைப்பாளி, குழந்தைகளின் படைப்பாளி.

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...