Friday, June 25, 2021

இந்த வாரம் -"தாய்மை"

 


கட்டித் தங்கம் எட்டி பார்க்கிறது ஆட்டுக் குட்டியை, தட்டி கூப்பிட்டாலும் கேட்காது, வயிறு முட்ட பால் சாப்பிட்ட பின் தான் திரும்புவேன் என்றது தன் தாய் மடியைக் காட்டி

பூமழை தூவுகிறது தாய் , தவிக்கிறது பால் குடிக்க இரு குட்டிகளும் ஏக்கத்தில்

பால் அருந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்து பயிற்சி எடுக்கிறதோ இந்த மழலை

தாய் மடி எனக்கும் சொந்தம் என்கிறதோ இந்த குட்டிக் குழந்தை?

உனக்கு மட்டும் எங்கேயிருந்து பால் வருகிறது என ஆட்டுக்குட்டியிடம் சுட்டிக் குழந்தையின் கேள்வி

இந்த குட்டியை விட்டு அடுத்த மழலைக்கும் பால் தர நான் தயார் - இது ஆடு

தியாகத்தின் மொத்த உருவம் தாய்மை.

வாழ்வின் முதல் தேடல் தாய் பால்

                                               -Veena Shankar 


குடிச்சுட்டியா......அடுத்து நானு......😀😀


தாயின் மடி வேறாயினும்

மழலையின் மொழி ஒன்றே!!!

                                               - Jaya 


இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத அழகு 😘😍

                                       - Suaila



ஆடே எனக்கும் பசிக்கறதே.தருவாயா உன் பாலை

                    - Vedavalli Ramani 


“ம்ம்ம்… very good… அப்படித்தான்… அருமையான ஆட்டுக்குட்டி… நான் சொல்லிக் கொடுத்த மாதிரியே குடிக்கிறே!” - பாப்பாவின் பாராட்டு ஆட்டுக்குட்டிக்கு😬


தாயின் மடி வேறாயினும்

மழலையின் மொழி ஒன்றே!!!


பிறப்பு எப்படியானாலும், சின்னஞ் சிறுசுகளின் ஒரே தேடல்- தாய்மடி😍


குழந்தை கொஞ்சலுடன் கெஞ்சல் : 

“கொஞ்சம் மிச்சம் வைடா ஆட்டுக்குட்டி… எங்க மொத்த குடும்பத்துக்கும் உங்க அம்மா பால் தான் இரவு உணவு😊”

                                         - Akhiladevi Kumaran

 


குழந்தை பால் குடிக்கிறதை படம் எடுத்து போடுறீங்க என்று முரைத்து பார்க்கும் தாய்

நான் எழுந்து நிற்க பத்து மாதம் ஆகும்,உனக்கென்ன பிறந்தவுடனே எழுந்து நின்று விடுவாய்..

வேலை முடித்து என் தாய் வந்து என்னை எடுத்தால் தான் உண்டு!!!குழந்தையும் ஆடும் இருக்கும் வீடா?? இவ்வளவு சுத்தமாக இருக்கிறது!!!

                                  - Vidhya Nivash 



Sunday, June 20, 2021

அப்பாக்கள் by Susila

அப்பாக்கள்

பத்து மாதங்கள் சுமந்து

இந்த உலகத்தை காட்டிய நம் தாய் தெய்வம் என்றால்,

காலமெல்லாம் குடும்பத்தை சுமந்து

நமக்கு இந்த உலகத்தை வழிகாட்டிய

நம் தந்தை தெய்வத்தின் தெய்வம் அல்லவா !!!


அப்பாக்களின் கோபத்தில் அன்பை

கண்டிப்பில் அக்கறையை

கட்டுப்பாட்டில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.


அப்பா-விடாமுயற்சி, வீரம் ,

உழைப்பு ,தன்னம்பிக்கையின்

மறு உருவம்

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அயராது அல்லும், பகலும் உழைத்து அவர்களின் மகிழ்ச்சியில் ,மகிழ்ச்சியை காணும் மெழுகுவர்த்தி

பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்ற அப்பாக்களின் பல இரவுகள் தூங்காமல் தொலைந்தது உண்டு .

காலமெல்லாம் சுமந்த அந்த சுமைதாங்கியை- நாம்

அன்பாலும், அரவணைப்பாலும் தாங்கி வணங்குவோம் .


தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்


என்றும் அன்புடன்,

ந.சுசீலா.



Friday, June 18, 2021

Weekly one -liners-Deforestation

 


Man’s challenge to Mother Earth: Cut-down and 

Mother earth’s revenge to manhood: Lock-down 🙇‍♀️


<< Request to Mother Earth: please forgive us🙏, you give us normalcy- we will give back more 

greenery>>


On your marks.. Get. Set…Go! C’mon friends let’s chase the poachers and enemies of nature to 

Antarctica🤩🤩😎😎


TOLET: Forests! We are relocating to another planet😎Marching towards greenery: Miles to go…. 

To create awareness on deforestation 💖

                                      - Akhiladevi Kumaran 


Yes, there somebody inside the forest. Follow me.

                                - Valarmathy

படம் பாருங்க கருத்தை பதிவிடுங்க

 


சுவாசங்களை அள்ளித்தந்த எங்கள் 

அன்னையரை.....வெறும் தக்கையாக்கி தூக்கி 

செல்லும் மானிடா!


பின்னால்....

நாங்களும் பயணிக்கிறோம்.....

சுவாசமேயில்லாமல்.....

நடைபிணங்களாய்என் மரத்தாயின் இறுதி

 யாத்திரையில் கலந்து கொள்ள எம்மினமே 

திரண்டு வருகின்றனர்.....

ஆனால் உன் இறுதி

யாத்திரையில் கலந்துக் கொள்ள இருபது

 பேருக்கு மேல் அனுமதி இல்லை எனும் நிலை

 வந்தும்.....

இன்னும் மாறாமல் இருக்கும் மானுடமே.....

உன்னை மாற்றிக்கொள்ளடா.....


சுவாசத்தை காசு கொடுத்து வாங்கும் நிலை 

வந்தும் மாறாமல் இருக்கிறாய் மானிடமே?

                                  - Kanchana 


மரம் தான் மரம் தான் எல்லாம் மரம் தான்... 

மழைக்கும் நீ தான் வேண்டும் 

மண்ணிற்கும் நீ தான்வேண்டும்.. 

 உயிரினங்கள் வாழ்வதற்கும் நீ

 தான் ஆதாரம் என்பதை மறந்தான் மனிதன்...

                                              - Kamatchi 



 ஏய் யாராவது உள்ள இருக்கீங்களா?

அந்த மரம் கூட நல்லா இருக்கே....

உரிமையை இழந்தோம்

உடமையை இழந்தோம்

                                - Valarmathy 



மரம் வெட்டிய மனிதனுக்கு பவனி வந்த கூட்டம் அல்ல நாங்கள், காடு அழிந்ததால்

நாட்டிற்கு வந்த கூட்டம்


படமானாலும் நிஜமானாலும் இழப்பு மனிதனுக்கு


மனிதனின் ஆர்ப்பாட்டம் தாங்காமல்

மரத்தினால் ஆன மனித மனம், மரத்தை சுமக்கிறது.

 மனத்தினால் தவறு செய்கிறோம் என்றாலும் நம் மரணத்திற்கு மிஞ்சாது 

என்பதனால் என்னவோ மின் மயானத்தை கண்டுபிடித்தான் மனிதன் ?


வரைந்தவர் யாராகிலும் காட்டு விலங்குகளை கட்டுக்குள் வைத்த கலைஞனின் 

கைவண்ணம் 


இது மரங்களை வெட்டிய மனிதனுக்கு வண்டியை தள்ள மறுக்கும் மனங்கள்


தலைமை பண்பின் உதாரணம் - தலைவர் இல்லாத சிறந்த அணிவகுப்பு


காட்டு அரசரை காணவில்லை, கை நீட்டி கம்பி நீட்டிவிட்டாரோ நம் மனிதர்களைப் 

போல😂


இந்த வண்டியை பின் தொடர்ந்தால் தச்சர் கடையிலாவது வேலை கிடைக்குமா? - 

வேலையில்லா திண்டாட்டத்தின் எதிரொலி


மரத்தின் மரண ஊர்வலம், மனத்தின் மௌன ஊர்வலம்


நாட்டிலிருந்து வந்து காட்டையழித்து விலங்குகளின் சீட்டை கிழித்த 

வேட்டைக்காரன்
                                    - Veena Shankar 



 
மனிதனே! எங்கள் மனதில் ஈரமுண்டு…உங்கள் எதிர்கால சுவாசத்திற்கு

 மரமுண்டா???

நண்பர் கூட்டத்தின் நினைவஞ்சலி… பூலோகத்தின் ஆணிவேரின் இழப்பிற்கு!

மரமே கேள்! இனியும் மரம் மாதிரியே இருக்காதே- யாரேனும் கிட்ட வந்தால் 

சூறாவளியென கூக்குரலிடு- நாங்கள் ஓடி வருகிறோம்- இப்படிக்கு உன் 

நண்பர்கள்!


“Jurassic park படம் பார்க்க நாங்களெல்லாம் கிளம்பிட்டோமே…அமைதியா வரிசையில 

வந்தா தான் டிக்கட் வாங்குவேன்னு அண்ணன் சொல்லிட்டாரு🙇‍♀️”“


எல்லோரையும் பத்திரமா நம்ம காப்பகத்துக்கு இருட்டுறதுக்கு முன்னாடி 

கூட்டிக்கிட்டு வாங்க“ என்று கைபேசியின் மறுமுனையில் கூறிய மனைவிக்கு 

“சரிம்மா..சரி” என்றார் காட்டுத்தீயில் தப்பித்து திரும்பும் படையுடன் பூவரசன்!

                                                            -Akhiladevi Kumaran 



உறைவிடம் எங்கேயோ

எங்கள் உயிரும் அங்கே..


போகதே போகதே தோழியே

சோர்ந்து போய் தூங்க வரும் மடியை விட்டு செல்லூங்க...

நேற்று வைத்த என் உணவு பொந்திலிருக்கு எடுத்துட்டு, என் தோழியை கொடுங்க .....

என் காதலி வருவா விழுது ஊஞ்சலில் ஆட என்ன செய்வேன்..

உன்னை சுற்றி சுற்றி விளையாடியதில் தெரியாமல் நகம் பட்டு விட்டது மன்னித்துவிடு தோழியே...

ஏய் இந்த கரடி அண்ணன் ஒவ்வொரு கட்டையாக உருவி கொடுத்த நாம நட்டு விடுவோம் இல்ல...

மக்கள்தொகையை தான் குறைக்க சொன்னாங்க, 

தப்பா இந்த ஆளு மரத்தொகையை குறைக்க வந்துட்டான் ...

எங்க நம்ம நரி அண்ணன் காணோம் ,தந்திரமாக சொன்னாத்தான் அந்த மரமண்டைக்களுக்கு புரியும்..

அதை வி்ட்டு விட்டு தலைய தொங்கவிட்டு போன நம்மளையும் சேர்த்து உப்புகண்டம் போட்டுவிடு வாங்க..


இறந்த கால நன்றியுமில்லை..

எதிர்கால அக்கறையுமில்லை..

இரண்டிற்கும் சாட்சியாக நிற்கும் நிகழ்கால நிழல் கொடுப்பவைகளை வேரறுத்து

 எதை சாதிக்க போகிறார்கள்???


                                - Vidhya Nivash 


Friday, June 11, 2021

ஒரு வரி வாரம் -வரிகுதிரை

 


என்னை வரைவது பார்த்து ஆனந்தம் இந்த பெண்ணிற்கு

                                                        -Vedavalli Ramani 


வரிந்து கட்டிக் கொண்டு வரிகள் கொடுத்தாய்.. எனினும்-

எனக்கு எண்ண தான் தெரியலயே..!!??...

                                                                       - Kiruthika 


உன் கை விரல் என் உடல் வரிகள் !

                                                                                                                                                                         -Jayanthi 


என் உடல் வரியா? வரமா?


ஒரு கறுப்பு வெள்ளை இன்னொரு கறுப்பு வெள்ளையைப் பார்க்கிறது


தண்ணீரில் (என் பிம்பம்) மூழ்கிய நான் வெளி வர துடிக்கிறேன் - வரிக்குதிரை


என்னை பார்த்து கோடுகள் வரைகிறான் ஒரு மனிதன் 


வண்ண படத்திலும் கறுப்பு வெள்ளை நான்


இந்த பரியின் பொறி இரு வரி

                                                                                                                                                       -Veena Shankar 



யார் இந்த தேவதை??- வரிக்குதிரையின் mind voice 😎



“சீக்கிரம் mask வரைங்க boss.. வண்டலூர்ல girl friend பார்க்க போகணும்!


உயிர் பெற்று வந்த கறுப்பு வெள்ளை ஓவியம், 

ஓவியர் குடிசையில்,

ஏழ்மையின் நிறங்களைப் பார்த்து ஸ்தம்பித்து போனது!!


காகத்திற்கு பிறகு, நான் ஏழை மாணவனின் ஓவியங்களுக்கு முழு வடிவம் 

கொடுக்க உதவுபவன்- என்னை வரைய ஒரே ஒரு பென்சில் போதுமே!!!


வரிக்குதிரையின் தோல் duet song:   

கறுப்பு ராஜா வெள்ளை ராணியிடம்: நீ பாதி நான் பாதி கண்ணே...அருகில் நீயின்றி

 நான் அழகில்லை பெண்ணே!!


பரியின் தங்கை என்னிடம் வரிக்கு பஞ்சமில்லை 😬


                                                                                                                                                   -Akhiladevi Kumaran 


யாரது என்னை உளி இல்லாமல் செதுக்குவது,யாரும் என்னை அடக்க முடியாது 

என்று திமிரும் வரிகுதிரை.


வரைய வரைய உயிர் பெறுகிறேன்,முடிந்தவுடன் வரிகளை வாரி கொண்டு ஓடுவேன்.

                                                                            


                                    
-Vidhya Nivash

Weekly One-Liners -ZEBRA






1.Hey wonderful artist, 

While cars stop moving -seeing my black and white lines, I started moving- seeing your black  and white lines!!!

2.Hey Zebra, Are you the result of 50-50 game between African and British horses   🐎 🐴 ?

3.Zebra, “Black & White” Forest cake for the big cats in the wild!

4.Zebra - Zentangle creation of God in zen mode🧘

5.Zebra- A philosopher teaching “Yin-Yang” theory by its body without words.

6.Wild and Bold Black and white Beauty gifted with natural illusion 😍

7.Dear humans, Be cautious of “Corona crossing” now and then only Zebra Crossing 🤩

8.Waiting for June 15th to cross the ‘borders’ between Dubai and Abu Dhabi without PCR & DPI tests.....

9.Hey magic pencil, Can you add some colours to my life please..?




                                                                            -By AkhilaDevi Kumaran


Zebra - Moving Barcode  -    By Divya.C




                        

Saturday, June 5, 2021

வருத்தம்,அச்சம் தவிர் by Vidhya Nivash




 அந்தி மயங்கும் மாலைப்பொழுதில் உப்பு கலந்த ஈரக்காற்று எங்கும் பரவ கதிரவன் மெல்ல உள்ளே செல்ல, ஒரு பக்கம் வெண்ணிலா வெளியே வர .இரண்டு மீனவ நண்பர்கள் அவர்களின் ஈ மொய்க்கும் வலையைதட்டி தோளில் போட்டு மெல்ல நடக்க.பறவைகள் எல்லாம் தங்கள் கூட்டிற்கு செல்ல .அலைகள் வந்து மெல்ல மோதி விளையாடிக் கொண்டிருக்கும் படகின் கயிற்றை கழட்டி இதோ வருகிறேன் உன்னை கிழித்து நான் பறந்து செல்ல என்று படகு கூற ...தங்களுடைய தேடல் வேட்டையில் இறங்குகிறார்கள் அந்த நண்பர்கள்.

வானில் காய்ந்து கொண்டிருக்கும் வெள்ளி நிலவோ அவர்களுக்கு தோள் கொடுத்து பாதை காட்டி கூடவர.. சலசல என்ற மெல்லிய ஓசையை எழுப்பி படகு அலைகளை கீரி பாய்ந்து செல்ல மீன்கள் துள்ளி ஓட . படகுகளின் துடுப்பு இரண்டும் மேலும் கீழுமாக உள்ளே சென்று வெளியே வர கண்ணாமூச்சி ஆட..

ஒவ்வொரு பயணத்திலும் செத்துப் பிழைக்கும் தேடல் வேட்டையில் சென்ற கணவன்மார்கள் பத்திரமாக வீடு திரும்ப வானில் உலாவும் நிலாவிடம் சேதி சொல்லி அனுப்பி அகல் விளக்கு ஏற்றி வைத்து உறங்காமல் காத்திருக்கும் மீனவ பெண்களும்...

நடுக்கடலில் அலைகளின் சத்தம் அடங்கி எங்கும் அமைதி நிலவ.. கடல் கன்னியை வணங்கி மீனவ நண்பன் வலையை எடுத்து கடலில் வீச.படகு மெல்ல மிதந்து மிதந்து நகர பல நேரத்தேடலுக்குப் பிறகு வலை கொள்ளும் அளவுக்கு மீன் வந்து உயிர் கொடுக்க. அப்பாடா என்று உயிர் மூச்சு விட்டு மீனவர்கள் அழகான பாடல் பாடி வந்த வழி கடக்க. திடீரென்று ஒரு பேரலை வந்து திணறடிக்க பழைய ஞாபகம் வந்தது . படகைத் தள்ளும் மீனவ நண்பனுக்கு வருத்தம் உள்ளம் கொள்ள அந்த இடத்தை நெருங்கும்போது படக் படக் என்று அச்சம் கொள்ள அதேஇடம் ,அதே அலை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் படகை தள்ள..

கீச்கீச் என்று படகு பாறையில் மோதும் சத்தமும் கேட்க.. வருத்தமும் அச்சமும் அவனை ஆட்கொள்ள மறுபுறமோ நண்பன் தேடல் வேட்டை முடிந்த சந்தோசத்தில் உல்லாசமாக பாடி அங்கிருக்கும் சூழ்நிலைக்கேற்றவாறு இன்பத்தில் மூழ்கி இருக்க .அதே அலை ,அதே இடம் ,உனக்கு மட்டும் எப்படி இப்படி ஆனந்தமாக இருக்கிறது என்று அவன் ஓலமிட.. அடேய் இவ்வளவு ரம்யமான ஈரக்காற்றிலே துள்ளிக்குதித்து ஓடிவந்த இந்த மீன்களின் மத்தியில் உள்ளம் கொள்ளை போகும் நிலவொளியில் பாடி உல்லாசம் அடையாமல் உன்னை போல் முடிந்ததை எண்ணி வருந்தவும் வருவதை எண்ணி அச்சம் கொள்ளவும் நான் தயாராக இல்லை .முடிந்தால் என்னுடன் கலந்து உல்லாசத்தில் ஒன்றாக இணைவோம். வா நண்பா உன் அச்சத்தையும் ,வருத்தத்தையும் தூக்கி எறிந்து நிகழ்கால உல்லாசத்தில் இணைவோம் நாம்.. மீண்டும் எங்கும் ஒரே அமைதி அலையடிக்க ... படகு மிதந்து மெல்ல நகர்கிறது.



இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...