அந்தி மயங்கும் மாலைப்பொழுதில் உப்பு கலந்த ஈரக்காற்று எங்கும் பரவ கதிரவன் மெல்ல உள்ளே செல்ல, ஒரு பக்கம் வெண்ணிலா வெளியே வர .இரண்டு மீனவ நண்பர்கள் அவர்களின் ஈ மொய்க்கும் வலையைதட்டி தோளில் போட்டு மெல்ல நடக்க.பறவைகள் எல்லாம் தங்கள் கூட்டிற்கு செல்ல .அலைகள் வந்து மெல்ல மோதி விளையாடிக் கொண்டிருக்கும் படகின் கயிற்றை கழட்டி இதோ வருகிறேன் உன்னை கிழித்து நான் பறந்து செல்ல என்று படகு கூற ...தங்களுடைய தேடல் வேட்டையில் இறங்குகிறார்கள் அந்த நண்பர்கள்.
வானில் காய்ந்து கொண்டிருக்கும் வெள்ளி நிலவோ அவர்களுக்கு தோள் கொடுத்து பாதை காட்டி கூடவர.. சலசல என்ற மெல்லிய ஓசையை எழுப்பி படகு அலைகளை கீரி பாய்ந்து செல்ல மீன்கள் துள்ளி ஓட . படகுகளின் துடுப்பு இரண்டும் மேலும் கீழுமாக உள்ளே சென்று வெளியே வர கண்ணாமூச்சி ஆட..
ஒவ்வொரு பயணத்திலும் செத்துப் பிழைக்கும் தேடல் வேட்டையில் சென்ற கணவன்மார்கள் பத்திரமாக வீடு திரும்ப வானில் உலாவும் நிலாவிடம் சேதி சொல்லி அனுப்பி அகல் விளக்கு ஏற்றி வைத்து உறங்காமல் காத்திருக்கும் மீனவ பெண்களும்...
நடுக்கடலில் அலைகளின் சத்தம் அடங்கி எங்கும் அமைதி நிலவ.. கடல் கன்னியை வணங்கி மீனவ நண்பன் வலையை எடுத்து கடலில் வீச.படகு மெல்ல மிதந்து மிதந்து நகர பல நேரத்தேடலுக்குப் பிறகு வலை கொள்ளும் அளவுக்கு மீன் வந்து உயிர் கொடுக்க. அப்பாடா என்று உயிர் மூச்சு விட்டு மீனவர்கள் அழகான பாடல் பாடி வந்த வழி கடக்க. திடீரென்று ஒரு பேரலை வந்து திணறடிக்க பழைய ஞாபகம் வந்தது . படகைத் தள்ளும் மீனவ நண்பனுக்கு வருத்தம் உள்ளம் கொள்ள அந்த இடத்தை நெருங்கும்போது படக் படக் என்று அச்சம் கொள்ள அதேஇடம் ,அதே அலை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் படகை தள்ள..
கீச்கீச் என்று படகு பாறையில் மோதும் சத்தமும் கேட்க.. வருத்தமும் அச்சமும் அவனை ஆட்கொள்ள மறுபுறமோ நண்பன் தேடல் வேட்டை முடிந்த சந்தோசத்தில் உல்லாசமாக பாடி அங்கிருக்கும் சூழ்நிலைக்கேற்றவாறு இன்பத்தில் மூழ்கி இருக்க .அதே அலை ,அதே இடம் ,உனக்கு மட்டும் எப்படி இப்படி ஆனந்தமாக இருக்கிறது என்று அவன் ஓலமிட.. அடேய் இவ்வளவு ரம்யமான ஈரக்காற்றிலே துள்ளிக்குதித்து ஓடிவந்த இந்த மீன்களின் மத்தியில் உள்ளம் கொள்ளை போகும் நிலவொளியில் பாடி உல்லாசம் அடையாமல் உன்னை போல் முடிந்ததை எண்ணி வருந்தவும் வருவதை எண்ணி அச்சம் கொள்ளவும் நான் தயாராக இல்லை .முடிந்தால் என்னுடன் கலந்து உல்லாசத்தில் ஒன்றாக இணைவோம். வா நண்பா உன் அச்சத்தையும் ,வருத்தத்தையும் தூக்கி எறிந்து நிகழ்கால உல்லாசத்தில் இணைவோம் நாம்.. மீண்டும் எங்கும் ஒரே அமைதி அலையடிக்க ... படகு மிதந்து மெல்ல நகர்கிறது.

ஆம். எதிர்கால இன்பத்திற்காக நிகழ்கால இன்பத்தை துறக்கும் மக்கள் நாம்.
ReplyDeleteநன்றி வீணா🙏
ReplyDelete