Friday, February 25, 2022
Monday, February 21, 2022
Wednesday, February 16, 2022
Monday, February 14, 2022
Saturday, February 12, 2022
Sunday, February 6, 2022
கலாட்டா கதை by Vidhya Nivash
வடிவேலு: மார்கழி போய் தை பிறந்திருச்சு இப்பவே வெயில் மண்டைய பொளக்குது .ஜில்லுனு ஏதாவது குடிக்கலாம்னு பார்த்தா.. எந்தப் பக்கம் பார்த்தாலும் ஜுரம்னு சொல்றாங்க ரிப்பீட்...
சின்ரெல்லா: அட ஆமாண்ணே.. பொங்கல் முடிந்தாலும் முடிஞ்சுச்சு அழையாத விருந்தாளியாக மிஸ்டர் .கொரோனா வந்தார் எங்க வீட்டுக்கு.
எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. சைலண்டா என்ட்ரி குடுத்துட்டாரு .குடும்பதலைவனுக்கு எடுத்த ரிப்போட்டர் தப்பா மகளுக்கு கொடுத்துட்டாங்க.
வடிவேலு:அட அப்படியா..இது என்ன கலாட்டா!
சின்ரெல்லா: ஆமாண்ணா ...அதுக்கு இடையில வேற மகளுக்கு அறிகுறியும் வந்துருச்சு.
தனிமைப்படுத்துதல் டைம் முடிஞ்சு டெஸ்ட் எடுத்தோம் .மகளுக்கு மீண்டும் வந்தது பாசிட்டிவ் எடு திரும்ப டெஸ்ட ஒரு வழியா நெகட்டிவ் வந்துருச்சு .
பள்ளிக்கு அனுப்பலாம் என்று குடும்பத்தோட திருப்பி டெஸ்ட் எடுத்தோம் .குடும்பத் தலைவிக்கு பாஸிட்டிவ் .
அடுத்த டெஸ்ட் நெகட்டிவ் வந்தது .அதுக்கப்புறம் திருப்பியும் ரிப்பீட் ஆயிடுச்சு.
வடிவேலு:இது என்ன வரும்... ஆனா வராது !என்ற மாதிரி இல்ல இருக்கு.
சின்ரெல்லா: அப்படி இப்படின்னு 20 நாள் ஆச்சு.. கடைசியா ஒரு வழியாக கொரோனா எங்களுக்கு விடுதலை கொடுத்தது.
வடிவேலு:ஆனா... உன்ன பார்த்தா கொரோனா வந்த மாதிரி இல்லையே!!
சின்ரெல்லா:ஆமாண்ணா.. அதைத்தான் நாங்களும் சொல்லிட்டு இருக்கோம் .எங்களுக்கு எதுவும் இல்லன்னு நல்லா இருக்கோம் என்று. அதுமட்டுமா உங்க வீட்டு சாப்பாடா எங்க வீட்டு சாப்பாடா பிரெண்ட்ஸ் எல்லாம் நல்லா சமைச்சு கொடுத்தாங்க .நல்ல சாப்பிட்டு தூங்கி, தூங்கி எந்திரிச்சு பிரஷ்சாக இருக்கேன் .அப்பப்ப கணவரும் நல்ல டீ போட்டுக் கொடுத்தார்.
வடிவேலு: அது சரி.எதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும் இல்ல.
சின்ரெல்லா: கலாட்டா கொரோனா!! நடந்ததை நினைத்து சிரிப்பதா? என்று தெரியவில்லை. ஏறின எடையைக் குறைக்கனும் இல்ல.. அடுத்தது அந்த வேலைதான்.
வடிவேலு: சரி நானும் அடுத்த வீட்டை பார்க்கிறேன்.
கலாட்டா கவிதை by Veena Shankar
ஆட்டத்தில் நாட்டம் கொண்டதால் வாழ்க்கையே கலாட்டாவாகி, சிரிப்பை தொலைத்த நம் நாயகி மீண்டு வர சிரத்தையுடன் வேண்டுவோம் அவளை நோட்டமிட்ட, வாட்டத்தை போக்கும் கடவுளிடம்
கலாட்டா கவிதை by Kanchana
மார்கழி பனியில்... போர்வைக்குள் சுருண்டிருந்த தன்னை...... முகத்தோடு முகத்தை உரசிக்கொண்டிருக்கும் பூனையினை பார்த்து சிரித்த சின்ட்ரெல்லா....
தனது பிஞ்சு பாதங்களை பூமியில் பதிய வைத்து.... சோம்பலான
நடையுடன் வெளிவரும் தன்னை வரவேற்க காத்திருக்கும் பைரவனையும்,
காமதேனுவையும் பார்த்து சிரித்த சின்ட்ரெல்லா.....
பச்சரிசி போன்ற பற்களை தேய்த்துக்கொண்டிருந்த தன்னை பார்த்து உழுதுகொண்டிருந்த பொக்கைவாய் தெரிய சிரித்த தாத்தாவை பார்த்து சிரித்த சின்ட்ரெல்லா.....
சூரியனின் கதிர்களின் வண்ணங்களை பிரதிபலிக்கும் அளவிற்கு எண்ணெய் தேய்த்து....
பின்னலிட்டு....
கார்மை தீட்டி....
யார்கண்ணும் படக்கூடாது என்று திருஷ்டி பொட்டினை வைத்து....தன் கைகளால் சடக்கொடித்து தன் அரவணைப்பை வெளிபடுத்தி தன்னை பார்த்து சிரித்த அன்னையை பார்த்து சிரித்த சின்ட்ரெல்லா......
ஒற்றையடி பாதையின் இருமருங்கிலும்
ஓங்கி வளர்ந்த கம்பு, சோளக்கதிர்களினை கொத்திக்கொண்டிருக்கும் சிட்டு குருவிகளின் ஓசையோடு....
மிதிவண்டியில் சுமந்து கொண்டு தன் வியர்வை துளிகள் ஒற்றியெடுத்து தன்னை அனுதினமும் சுமக்கும் தந்தை வெளிபடுத்திய சிரிப்பினை பார்த்து சிரித்த சின்ட்ரெல்லா.....
நாளை புலம் பெயரும் இடம் எவ்வாறிருக்கும் என்ற சிந்தனையுடன்...... இன்று நடந்த இன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே....வானில் நட்சத்திரங்களையும்,நிலவின் ஒளியினையும், தவளைகளின் கரகர குரல்களை காதுற்று.....
தன்னை தானே பார்த்து சிரித்த கிராமத்து சின்ட்ரெல்லா.....
பனியின் குளுமையை உணரமுடியாமல்...மின்விசிறியின் சூழலின் வெட்கையான காற்றினால்.....
உறக்கமில்லாமல் தவித்த சின்ட்ரெல்லா....
தன் வருகையை வரவேற்க காத்திருக்கும் பூனை,பைரவன்,காமதேனுவின் அருகாமை இன்றி தவித்த சின்ட்ரெல்லா......
தன்னை பார்த்து ரசிக்க யாருமில்லாமல் இயந்திரமாய் ஓடிக்கொண்டிருப்பவர்களை பார்த்து தவித்த சின்ட்ரெல்லா.....
கண்ணாடியில்
நாகரீகம் என்று வெட்டிய தன் கூந்தலை பார்த்து தவித்த சின்ட்ரெல்லா.....
எங்கு திரும்பினாலும் வாகனங்களினால் ஏற்படும் புகை மண்டலம்....
பொறுமையினையிழந்து முன்னேறி செல்வதற்காக எழுப்பப்படும் வாகனங்களின் அநாயாசமான ஒலிகளை கேட்க முடியாமல் தவித்த சின்ட்ரெல்லா.....
புலம் பெயர்ந்த இடத்தினால்.... இன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே.....
வானினை ரசிக்க முடியாமல் வானுயுர்ந்த கட்டிடங்களும்....
வண்ணங்களால்
நிலவினையும்
நட்சத்திரங்களையும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் தன் அறையினுள்.....
தன்னைத்தானே பார்த்து தன் சிரிப்பினையே மறந்து போனால் இந்த நகரத்து சின்ட்ரெல்லா.....
Friday, February 4, 2022
எஸ்.ரா வின் "துணையெழுத்து" by Vidhya Nivash
அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் புத்தகம் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "துணையெழுத்து".பல தலைப்புகளை ஒரிரு வரிகளில்,அவர் கேள்விகளுடன்..
பொம்மைகளை வைத்து வரலாறை கண்முன்னே விளக்கிக் காட்டுகிறார் பொம்மைகளுக்கு உயிர் இல்லை. ஆனால் குழந்தைகளுக்கு அதை பல்வேறு கோணங்களில் பார்க்கும் புத்திசாலித்தனம்... நீயும் பொம்மை நானும் பொம்மை.
புதுமைப்பித்தனின் வாழ்க்கை நினைக்கும் பொழுது இறந்த குழந்தையை கூட பார்க்க முடியாமல் தவிக்கும் நிலை ...பணம்??காலத்தை கடந்துதான் கிடைக்கிறது.
ஒவ்வொருவர் உடலிலும் இருக்கும் வடுக்களும், தழும்புகளும் பல கதை சொல்லும்... படிக்கும் போதே அசைப் போட வைத்தது.
படைப்புகளின் முன் 'புல் வளர்ந்துகொண்டே இருக்கிறது'
புத்தர் 'உலகில் தீப்பற்றி எரியாத இடமே இல்லை 'அது அழியும் பொழுதே உலகின் காட்சிகளின் உண்மை தெரியும்.
வீட்டை இடித்து தரைமட்டமாக்கி...அப்பொழுதும் கொத்து சாவியை பத்திரமாக எடுத்து வந்த பெரியவர் .அதிலிருந்து ஒன்றை வாங்கி என் சுவற்றில் மாற்றி வைத்தேன்.
காசியில் தாய் கங்கை ஆற்றில் விழ தாயை மீண்டும் கரைக்கு கூட்டிவந்து தெரியாமல் நடந்தது.காசியை சுற்றிப் பார்க்க விரும்பி என் தாயின் ஆசையை நிறைவேற்ற வந்துள்ளேன் .சிறிது நேரம் பேசிய பிறகு தான் தெரிந்தது அவருக்கு பார்வை குறைபாடாகி 4 வருடங்கள் ஆகின்றது.
வீராங்கனையாக வேண்டிய பெண்களின் ஆசைகள் எல்லாம் ,என்ன ஆயினர்?
மனிதர்களை தவிர வேறு எந்த உயிரினம் தனது கர்ப்பத்தை அழித்துக் கொள்கிறது .மூன்று கருக்களில் ஒரு கருவை மட்டும் அழிக்கும் நவீன முறைகள்.அணுகதிர்வீச்சுக்கு உள்ளான ஒரு நகரில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை ஓவியம் போல அது பேசும் முறை விசில் அடிப்பது போல் உள்ளது. தாய் தந்தையர் இருவரும் பேசும் தன்மையை மறந்து விசிலை கற்றுக்கொள்கின்றனர். ஒரு தருவாயில் அந்த குழந்தை இறந்து போக இவரும் பேச்சை மறந்து விசிலுடன் வாழ்கின்றனர்.
கிருஷ்ணருக்கு சமைக்கும் துர்வாசர் பற்றி ஏன் எழுதவில்லை என்று என்னிடம் கேட்ட வாசகர். உப்பு மட்டும் போட்டு சரியாக சமைக்கத் தெரிந்தால் அந்த குடும்பத்தில் சண்டையே வராது சார்.ஏன் எழுத்தாளன் ஆனேன் என்று நினைத்தேன், இன்று இப்படிப்பட்ட வாசகர்களை என்னால் சந்திக்க முடிந்தது என்று நன்றி சொன்னேன்.
குடும்பத்தின் பண கஷ்டத்தை விட,உயிராக நினைத்த தொலைந்து போன கூத்தாடிகளின் வாழ்க்கை .
பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு கடைசி வரை மாணவனாக வாழும் மனிதர்கள் .
வேலூர் அருகில் கரடிக்குடியில் உறங்கும் கவிஞன் பிரமிள் கல்லறை.
எந்த கவிஞனாவது நன்கொடை கேட்டாரா?? வலிகளுடன் வாழ்ந்தவரை இறந்த பின்னும் கொல்லாதே!
பூரி உருளைக்கிழங்கு,பஜ்ஜி சாப்பிட்டால் ஓடிப்போகும் ஜுரம்.பிடித்த உணவிற்கு வரும் ஜுரம்.
காதற்ற ஊசியை விற்க்கும் விவசாயிகள் அதற்கு நாமும் காரணமோ?
பெரியார் அணையும், பென்னிகுயிக்கும் ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை தான் கேள்விப்பட்டிருக்கிறோம் .தன்னுடைய சொத்தை விற்று அணையை கட்டிய வெள்ளைக்காரர் .
வளர்ப்பு மிருகங்கள்- செல்லப்பிராணிகள் நன்றியோடு இருக்கும் கடிக்காது. ஆனால் இவை அடிக்கும் !!!
நைனிடால் ஏறியும் எழுத்தாளரும்..
வீட்டு செடிகளும் சுயநலமும்..ஆமாம் இல்லை ஊருக்கு போகும் போது தவிக்கும்.
அவன் அவள் ஆக மாறுவது யாரின் குற்றம்??குழந்தையிலிருந்து பாவடை போட்டு அழகு பார்த்து.
விலைமதிப்பில்லா புத்தகத்தை விட சொத்தை எதிர்ப்பார்க்கும் உலகம் !!
கீழ்வாலை குகை ஓவியங்கள்.
காருகுறிச்சியார் சிலை..நாட்டுப்புற இசையை ஏன்? மறந்துவிடுகிறோம்.
வீட்டுக்கு திருட வந்தவன் நண்பனாகிய கதை.அவர்களும் சூழ்நிலையால் அப்படி ஆனவரே.
அருவியில் குளிக்கும் இளைஞர்களிடம் கவனமாய் இருங்கள் !கவனமாய் இருங்கள்! என்று அடித்துக் கொள்கிறது மனது .இளமையில் நண்பனை இழந்த மனம்.
செண்பகத்தோப்பு அணில்கள் சரணாலயம்.
கோபம் மனித குணம் மட்டுமில்லாது தெய்வங்களுக்கும் உண்டு. அது நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் வரை நல்லது .
ஆதி மனிதனுடைய வேட்டையாடுதல் நின்றுவிட்டது என்று யார் சொன்னது??? நாம் மிருகபலி தடை செய்வதை விடவும் மனிதர்பலியை தடை செய்வதுதான் முக்கியமானது.
ஒவ்வொரு தலைப்புகளிலும் மனதை வருடுவது போல்,யாரோ உள் மனதில் சென்று நம் மனதை அப்படியே படிப்பது போல் இருந்தது. இவரின் தேசாந்திரி புத்தகத்தை படித்து பல இடங்களுக்கு சென்று வந்தேன் .(Google )
இதோ துணையெழுத்து புத்தகத்தைப் படித்து சுற்றிப் பார்த்த இடங்களை உங்களுக்கும் காட்சி ஆக்குகிறேன் . ஒவ்வொரு தலைப்பைப் படிக்கும் பொழுதோ ,படித்து முடித்த உடனே அவர் சொன்னஇடங்களை கூகுளில் தேடி கண்டவுடனே மனம் நிம்மதி அடையும் .அத்தனை உயிரோட்டமான எழுத்துக்கள். உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கேன் .
நான் காணாத இடங்கள் இன்னும் எத்தனையோ ???கடைசியில் துணையெழுத்து வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் துணை தேவைப்படுகிறது.அது எதுவானாலும் இருக்கலாம் நட்பாகவும் ,பாசமாகவும், புத்தகமாகவும் என அந்தத் துணை நீண்டுகொண்டே போகிறது.
" துணை இல்லாத வாழ்க்கை சிறகுகள் இல்லாத பறவை போன்றது".
Thursday, February 3, 2022
Tuesday, February 1, 2022
இன்றைய சம்பவம் by Veena Shankar
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...