Friday, November 26, 2021

இந்த வாரம் படம் பேசுகிறது by Vidhya Nivash

 


என் மீது எறி உல்லாசமாக செல்வீர்கள், சுமைகளை தூக்க சொல்வீர்கள்..

இதோ நான் உல்லாசமாக, சுமைகள் இன்றி படகு சவாரி செய்கிறேன்.

நிழலும் அழகு நிஜமும் அழகு

போகும் இடம் தெரியவில்லை

இருக்கும் இடத்தை ரசிப்போம்

வாழ்க்கை பயணத்தில் படகில் பயணிக்கும் குட்டி யானை..


இந்த வாரம் படம் பேசுகிறது by Akhiladevi Kumaran




 

இந்த வாரம் படம் பேசுகிறது by Veena Shankar

 

 முன்னேறி செல் என்கிறது நிஜம் நேர் பார்வையில்

உன் பாதையில் நீ புகழுக்கு அடிமையானல் பின்னேறவும் பழகிக் கொள் என்கிறது நிழல்

தலைகீழாய் பார்த்தால், உண்மையும் அதுதான்.

எதில் பயணிக்கிறோம் என்பதை விட எது நம்மை தாங்குகிறது என்பதை அறிய நாம் மறந்துவிடுகிறோம். யானையானாலும், பூனையானாலும் , மனிதனானாலும் படகிருந்தால் மட்டும் போதாது. துடுப்பும் அதை இயக்க மனிதனும், பாதையை கடக்க வழியும் வேண்டும். பாதை கரடு முரடானாலும் நம் எண்ணத்தில் நேர்மை இருக்க வேண்டும். பிறருக்கு அறிவுறுத்தும் முன் நாம் நம்மை சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

இந்த வாரம் படம் பேசுகிறது by Valarmathy


 

Nambikkai manithan yanaiyen methum, yanai manithanin methum 

Ulla nambikkai,

Entha payanathin arambam.


Thursday, November 18, 2021

கடற்கரை சிந்தனை by Vedavalli Ramani

 


கடல் போல் மனது பெரியதாக இருந்தாலும் அலைகள் போல் இன்பமும் துன்பமும் வந்து வந்து போவதுதான் மனித வாழ்க்கையின் நியதி

கடற்கரை சிந்தனை துளிகள் by Vidhya Nivash

 



கடற்கரை சின்ன வயசிலிருந்தே பார்க்கணும்னு ரொம்ப ஆசை எங்கள் ஊரிலிருந்து அது ரொம்ப தூரம் எப்பயாவது எங்காவது வெளியே போனாலும் அப்பா தண்ணி பக்கம் ஆத்து பக்கம் போக விடமாட்டார்.


அந்த ஆசை எல்லாம் இந்த கொரோனா வந்து தீர்த்து வைத்தது.


செயற்கையை விடுத்து இயற்கைக்கு வந்தோம் வாரவாரம்

எத்தனை அழகு சூரியன் உதிக்க

கடற்கரையிலிருந்து ரசிக்க 

சுண்டல் இல்லை என்றாலும்

கடல் அலைகள் இல்லை என்றாலும்

குதூகலத்திற்கு பஞ்சம் இல்லை

பச்சிளம் குழந்தை முதல் பல்லில்லா குழந்தை வரை மிதக்க இந்த தண்ணீரில்

எத்தனை அதிசயம் கொண்டாய் நீ

சிலநாட்கள் உள்ளே செல்கிறாய்

சிலநாட்கள் பொங்கி எழுகிறாய்

பருவத்திற்கு ஏற்றார் போல் உயிரின விருந்தாளிகள் பல...

முதுகில் அடித்து செல்லும் மீனை கண்டேன்

அடங்கி போய் உன்னை ஆரஅமர ரசித்தேன்

ஆள் உயர அலைகள் அதிலே மீன்களை போல மிதந்து வரும் மக்கள்..

விட்டதை மீண்டும் மடியில் தருகிறாய்

அப்பா நீ எழுப்பும் சத்தத்தில் எண்ண ஓட்டங்கள் நின்று இதைவிட வேறென்ன வேண்டும் அமைதிகொள்

துள்ளி வந்து அள்ளிச்சென்று மீண்டும் கரை சேர்க்கிறாய் என்னையும்,மெய்மறந்து ரசிக்க இரு கண்கள் போதவில்லை,அள்ளி அணைக்க இரு கைகள் போதவில்லை...உன்னை கடக்க கால்கள் பறக்க,மனமோ விரிகிறது...

கடற்கரை சிந்தனை துளிகள் by Veena Shankar


 

கடற்கரை  நினைவுகள்


                                    என் பள்ளி பருவ காலத்தில்  பொழுதுபோக்கு என்று சொன்னால் அது சினிமா, கோயில்  அல்லது கடற்கரையாகத்தான் இருக்கும். தற்போதுள்ளதுபோல்  பொழுதுபோக்கிற்காக நிறைய  இடங்கள் இல்லாத காலம். 


                         எத்தனை முறை குடும்பத்தோடு கடற்கரைக்கு சென்றாலும் எனக்கு முதலில் நினைவு வருவது எங்கள் பள்ளியில் சென்ற ஒரு நாள் இன்ப சுற்றுலா தான். முதன் முதலில் செல்லும் பள்ளி சுற்றுலா என்பதால் அவ்வளவு சந்தோஷம். அதுவும் கடற்கரை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. சிறிய வகுப்பில் இருந்த போது கடலின் எதிர்புறத்தில் உள்ள தியான மண்டபத்தில்  தியானம் செய்ய  மாணவர்கள்   அழைக்கப்பட்டிருந்தாலும்  கடலையும் கடற்கரையையும் ரசிக்க முடியாத சூழ்நிலை.  


                                          சுற்றுலா தினத்தன்று முதலில் சென்னையில் உள்ள பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலுக்கு செல்வது தான் திட்டம். கோயிலையும் கடலையும் ஒருசேர ரசித்தவாறே இருக்கலாம் என்பதால்  அந்த ஏற்பாடு. பள்ளி குழந்தைகள் என்பதால் கோயிலில் சிறப்பு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும்  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 


                              கோயில் தரிசனம் முடிந்து, கடற்கரைக்கு வந்து அமர்ந்து,  அவரவர் கொண்டுவந்த காலை உணவினை சாப்பிட, அப்போதுதான் பார்த்தேன் என் கிறிஸ்டல் மாலையில் டாலர் இல்லை என்பதை. அவ்வளவு தான். கடலை  ரசிக்க முடியாமல் தொலைந்து போன டாலரோடு நானும் தொலைந்தேன் என நினைத்துகொண்டிருந்தேன். ஏனென்றால் என் அக்காவின் செயினையும், அதில்  கோர்க்க புதிதாக வாங்கிய கிறிஸ்டல் டாலரையும் மன்றாடி வாங்கி  அன்று அணிந்து  வந்திருந்தேன். எது எப்படியோ கடலில் கிடைக்கும் முத்து போல மண்ணில் என் டாலர்  மின்னியது  தான்  அதிசயம். 


                           பிறகென்ன  அடுத்து மகாபலிபுரம் கடலில் ஆட்டம் ஆரம்பித்தது. அலைமோதும் கூட்டத்திலும் காட்சிகள் விரிய ஆரம்பித்தது. எங்கள் பார்வை கடற்கரையை  கோயிலை பார்த்து ரசிக்க,    அங்கேயே மதிய சாப்பாடும் அரங்கேறியது. அந்நிய நாட்டவரின் பிரவேசமும் எங்களை ஆச்சரியப்படுத்தியது.  பலவித பொருட்களை வாங்கியதாகவும் ஞாபகம்.


                           இதேபோலத்தான் மற்றொரு நாள் குடும்பத்தோடு அதே பெசன்ட்நகர் கோயிலுக்கு செல்ல, அங்கே இரண்டாவது முறையாக சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்தது மாநகர காவல்துறை. இதனால் மளமளவென்று கடைகள் அடைக்கப்பட்டு, நாங்கள் செல்லும்  நேரம் கோயிலும்  அடைக்கப்பட்டது. கடலும் மிகுந்த சீற்றமாக காணப்பட்டது.  நேரம் ஆக ஆக கடல்அலைகள் கரையை நோக்கி  ஆக்ரோஷமாக வர ஆரம்பிக்க, அது வரை  கடலை ரசித்து வந்த நாங்கள், நிலைமை மோசம்  என்பதை உணர்ந்து புறப்பட தயாரானோம். உயிர் பயத்திற்கும் அப்பாற்பட்டு,  இன்னும் சிறிது நேரம் கடலை ரசித்து செல்லலாம் என்று நினைத்திருந்த எங்களுக்கு சிறிது வருத்தம் தான் மிஞ்சியது. மாங்காய், சுண்டல், முறுக்கு போன்றவற்றை    ருசிக்காமல் திரும்பியது எங்களுக்கு ஒருவித  ஏமாற்றத்தை தந்தது. 


                            கோயில் அடைக்கப்பட்டு இருந்தாலும் அங்குள்ள சர்ச்சுக்கு சென்று வழிபட்டதையும் மறக்க முடியாது. இந்த  இரண்டும் என்  என் மனதில் என்றும் நீங்கா இடம் பெறும்  நிகழ்வுகளாகும்.

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...