Saturday, April 4, 2026

படமும் கருத்தும் by winmeengal

 

 Veena Shankar: 

எவனுக்கு எவன் இரையோ?

 இறையாண்மை காக்காத நேரத்தில்

Akhila : 

ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே🙏🙏🙏நாங்க escapppppeeee!!!!

Veena Shankar: 

ஓட்டம் ஓட்டுக்கானதல்ல

பண மோசடி செய்து

ஓடும் கூட்டம்

Akhila : 

இது கூட்டு முயற்சி...

மூன்று கட்ட கூட்டணி

எங்க பரிசு உறுதி!!! 

ஆளுக்கு ஒரு பங்கு‍ மூணுல ஒரு பங்கு🥰

 Veena Shankar:

 தலைவன் ஓட

தளபதி சவாரி செய்ய

சிப்பாய் போரிடுகிறான்

போராட்டம் என்பது

எவருக்கும் உண்டு வாழ்வில்

ஒருவரை ஒருவரை

மிதித்து மேலே வராமல்

பற்றிக் கொண்டு

கடப்பதே அழகு

 Veena Shankar: 

பங்கு போட முடியாத

பாசத்தில் 

கிடைத்த பாடம் முயற்சி

 Vidhya Nivash: 

அண்ணன் வரான் அண்ணன் வரான் வழியவிடுங்க 

இந்த சுட்டிகளுக்கு விடுமுறை விட்டாச்சு செல்லம்,பட்டு என்று சொல்லி செய்யும் சேட்டை இருக்கே அவங்க கையில மாட்டினீங்க அம்பேல், 

அண்ணா ஓடுங்க வேகமா,எதாவுது தீவுக்கு போலாம்!


 Veena Shankar: 

சீறிப்பாயும் வேகத்தில்

கண்டது எதனை?

மூவருக்கும் எதிரியான

 உயிரினம் தான்

எதுவோ?

இயற்கையின் கண்

கொண்ட வியப்பா?

செயற்கையின் பால்

கொண்ட வெறுப்பா?

விலங்குகளின் ஒற்றுமை

பறைசாற்றுகிறது

ஒருவனுக்கு ஒருவன்

எதிரி என்றாலும்

நட்பின் பால்

எதுவும் சிறப்பே?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by winmeengal

 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...