Sunday, January 30, 2022
Thursday, January 27, 2022
இந்த வார சிந்தனை - Vidhya Nivash
நம்பிக்கையின் உச்சம்
ஒரு கையில் பாரம் மறுக்கையில் ஊன்றுகோலுடன் இருந்தாலும் உன்னை தாங்குகிறேன் என்ற நம்பிக்கையுடன் நிமிர்ந்த நடையுடன் ,உன்னுடைய துணையுடன் எவ்வளவு தூரம் வேண்டுமென்றாலும் நடக்க தயார்.
கொஞ்சம் மெதுவாக போங்க.. இங்க தான் அந்த பூக்கடை இருக்கு,அந்த பக்கம் பாருங்க மாம்பழக்கடை.....
இந்த வார சிந்தனை - Akhiladevi Kumaran
“வீட்டுக்கு கீர்த்தி சுரேஷ் வந்திருக்காங்க… சீக்கிரம் போய் அவங்களுக்கு பிடிச்ச சிறு கீரை சமைச்சுத் தரணும்… வேகமா வா வரு” என்று தன் ஆசை மனைவி வரலட்சுமியை கெஞ்சி கொஞ்சினார் வேலு தாத்தா❤️
இந்த வார சிந்தனை -Veena Shankar
மரத்தினால் ஆன ஊன்றுகோல் நடுவில்
மனத்தினால் ஆன ஊன்றுகோல் நம் கரங்கள்
நீ எனக்கு நான் உனக்கு
பரபரப்பான வாழ்க்கை முடிந்தது
படபடத்த தருணங்கள் ஓய்ந்தது
தனித்திருந்த காலம் போதும்
இனித்திருப்போம் அடுத்தவருக்கு உதாரணமாய்
கரம் பற்றுவதென்பது திருமண நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்நாளின் வெற்றியும் கூட
வெற்றி கொடி கட்டி பறந்த மணவாளனை பற்றும் கொடி போல படர்ந்தேன் என் கரங்கள் கொண்டு.
தட்டி கட்ட பிள்ளைகளை மறுத்து
எட்டி நின்று வாழ நினைத்து
டாட்டா காட்டி செல்லும்
சிட்டுக்குருவிகள் இவர்கள்.
Saturday, January 22, 2022
படைப்புகள் by Vidhya Nivash
படைப்புகள் இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் தொலைந்து போகும் தருணங்கள்.
வானமும், கடலும் சந்திக்கும் இடம் எத்தனை எத்தனை முறை வர்ணித்தாலும் சலிக்காதவை!!
அவை கடலும், கடல் அலைகளும் அவற்றின் முன் நிற்கும் பொழுது சத்தமே இல்லாமல் ,கடல் அலைகளின் இடிக்கும் முழக்கத்தின் இடையே அப்படி ஒரு அமைதி, நிசப்தம் மனதில் .... மனம் எங்கும் நிறைந்து மகிழ்ச்சியில் தள்ளாடி செயலற்று நிற்கும். அங்கே கடலும் வானமும் சங்கமித்து உற்று பார்க்கும் தருணம் பிரமாண்டம்.
வெண் புகை மூட்டத்தில் காய்ந்து கொண்டு,ஆவி பறக்கும் வெண்ணிலாவும் பல கதை சொல்லும் தனிமை மறந்து கைக்கோர்த்து உலா வருவோம்..
சூரியனையும் காணும்பொழுது வெப்பத்தை காண முடியாமல் கண் கூசி நிற்கிறோம்!
எங்கும் பரவியிருக்கும் இருளில் பயத்தில் மூழ்கி தொலைந்து விடுகிறோம்!
கலைஞரின் கைவண்ண படைப்புகளான ஓவியம், கற்சிலைகள் அந்த பிரம்மாண்டத்தின் முன்னே நாமும் ஒரு நிமிடம் மயக்கி விடுகிறோம் ..
வடிகாலை தூர்வார தண்ணீர் ஊறிக்கொண்டே போகும் அதுபோல் புத்தகம் எனும் திறவுகோல் கொண்டு திறக்கத் திறக்கத் தான் எண்ணங்கள் ஊறும்.. திறக்கும் சாவி பொருந்தாவிடில் இறுக்கும்.திறக்கும் சாவியை நாம் தேடித்தேடி படிக்க படிக்க விரியும் மனமும், எண்ணங்களும்..
இசையும் ,நடனமும் பிரிக்கமுடியா தோழிகள் அதைப் பார்க்கும் பொழுதே நாம் அதில் ஒன்றுர கலந்து விடுகிறோம். குயிலின் குரலை கேட்க நம்மை எங்கோ இழுக்கும்...
இசை, நடனத்தை ரசிக்கும் பொழுது மெய்மறந்து, நம் மயிற்கால்கள் சிலிர்க்கிறது. அந்தப் படைப்புகளின் முன் வெறும் காற்று குமிழ்களே நாம்.
கோயிலின் கருவறையில் நுழையும் போதும் வீட்டின் கற்பகிரகத்தை பிரியும் போதும் மனம் கனத்து கண்களில் நீர்வடியும் அதை என்னவென்று சொல்வது!!!
படைப்புகளிள் முன் கரைந்து விடுகிறோம் ,கலந்து விடுகிறோம் ,கலங்கி விடுகிறோம் ,கனத்து விடுகிறோம்...கடைசியில் நிறைந்து நிற்கிறோம்.
Friday, January 21, 2022
நீ அறிவாயா by Vidhya Nivash
சின்னச்சின்ன சிறு அரும்பு வருமா என்று காத்திருந்து..
வாடாமல், அழுகாமல் விழித்திருந்து ,
தேன் துளி போல,இலை நுனியில் நீரை பார்க்கும் போது மனம் குதூகலிக்கும்,
பூவில்லை, பழமில்லை இருந்தாலும் பூக்கிறாய், இனிக்கிறாய் உள்ளுக்குள்,
உயிர் பிறப்பது போல் உணர்கிறேன் ஒவ்வொரு இலையும் முழுமையாக விரியும் போது . ..
என் பாசம்,நம் உறவு
பிறர் அறியார்
நீ அறிவாயா!!!
Thursday, January 20, 2022
மனத்தில் பட்டது by Vidhya Nivash Nivash
வேரூன்றி ஆலமரமாக நிற்க எண்ணி விடாமுயற்சி,கடின உழைப்பு,தன்னம்பிக்கை ,தங்களுடைய ஆசைகள் விடுத்து,வறுமையில் கடன் இன்றி,நேர்மையுடன்,கண்டிப்புடன் கூடிய கட்டுப்பாட்டில்,பேதமை பார்க்காமல்,சிக்கனத்தில் ஒரு குறையும் இல்லாமல் வளர்த்தீர்கள்!
கிடைத்ததே போதும் என்று எண்ணி பிறர் முன் நிற்க வேண்டுமென்ற கனவை மறந்து, பின் நின்று !
வளர்ந்த பாதை வடுவாக்கி,வந்த பாதை தடமாக்கி, புதிய பாதை தேடி..
தினமும் கோபம் கொண்டு,கோபத்திற்கு காரணம் இயலாமையோ! இல்லாமை போய் இது என்ன புதிது,என்று எண்ணி,
தன்னிலை மறந்து, பதில் தேடி, தினம் தன்னம்பிக்கை தரும் பிறர் வார்த்தை தேடி,பெற்றோர் சொன்னதை மறந்து...மீண்டும் அதை திரும்பி பார்க்கும் போது..
வலிகளில் தான் படைப்புகள் பிறக்குமோ,
வறுமை,வருத்தம்,தனிமை,வளர்ந்த சூழ்நிலைகள், மனதை இறுக்கிய நிகழ்ச்சிகள் ...என்று செயல்களில் பிறர் சுட்டிக்காட்டும் போது....
ஆம் ,இவையே நேர்மை,காலம் தவறாமை, மனதிடத்தையும் கொடுத்தது அல்ல
பல கலைஞனும் இந்த சுமைகளை சுமந்தே படைப்புகளை படைத்து பலரில் தன்னை காண நினைத்தானோ!
என்றும் தோன்றுகிறது..
Tuesday, January 18, 2022
Sunday, January 16, 2022
சிந்தனைத்துளிகள் by Veena Shankar
நிஜமான ஈபிள் கோபுரம் மண்ணில்
பொய்யான கோபுரம் கயிற்றில்
வண்ண வண்ண கிளிப்களே மனிதர்கள்
பற்றியிருக்கும் கயிறே மனிதனின் ஆசைகள்
நீ கடித்தாலும் உன்னை நாடும் மனிதர்கள் கோடையிலும் மழையிலும்
நீ பற்றும் பொருள் ஏதாகிலும் பரம் பொருளே உன் கீழ் ஃபோட்டோ கடையிலே
வாழ்வின் பற்றுதலுக்கு சாட்சி நீ. உன் நிலை நேரானாலும் தலைகீழானாலும்
வடிவம் மாறினாலும் நிறம் மாறினாலும் நான் செய்யப்படும் பொருள் மாறினாலும் என் நோக்கம் பொருளை பற்றுவதே
வரிசையாய் வரிந்து கட்டி நிற்பது துணியின் வரவுக்காக..
எங்களிடம் வந்தாரை காய வைப்போம் மொட்டைமாடியில் வெயிலின் வருகையால் காற்றின் வேகத்தால் எங்கள் பிடிவாதத்தால்
எங்களின் நிலை/குரல்
வவ்வால் போல் தொங்கினாலும் துணியை கைவிடோம்
பறந்து செல்லும் பணத்தை சிறை பிடிப்போம்
ஏறும்புகள் கவர்ந்து செல்லும் பொருளை காத்து நிற்போம்
சீறிப்பாயும் காகிதங்களை விளையாட்டாய் பிடிப்போம்
சில்லென்ற காற்றில் மிதக்கும் கேசத்தையும் கட்டியணைப்போம்
Wednesday, January 12, 2022
Thursday, January 6, 2022
ஆரம்பம் by Vidhya Nivash
ஆரம்பம் விடியலின் ஆரம்பம் சுதந்திரத்திற்காக காத்திருக்கும் விடியலின் ஆரம்பம் பலருக்கும் என்றுமே கையில் எட்டாக்கனி கனவுகளாக கலைந்துபோன ஆரவாரமற்ற ஆரம்பங்கள் இரவினிலே..
கனவுகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட வித்துக்கள் எல்லாம் விடாமுயற்சியால் வேரூன்றி படர்ந்து நின்றது ஆலமரமாக...
ஆலமரத்தின் ஆரம்பமாக ஆரம்பித்த விழுதுகளில் நிழல் காய்ந்து கொண்டு எதை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அத்தனை வாய்ப்புகளையும் கையில் வைத்துக்கொண்டு தான் உள்ளோமோ..
இன்று இருக்கும் தலைமுறையோ எதை விடுவது எதை தொடுவது என்று தெரியாத அளவிற்கு பல ஆரம்பங்கள் சிதறிக்கிடக்கின்றன எங்கும் அல்லவா..
ஆரம்பிக்கும் முன் பல முறை யோசிக்க வேண்டும் ஆனால் ஆரம்பித்ததை தோல்வி எனும் முற்றுப்புள்ளி கொண்டு முடித்து வைக்காமல் முடிவு என்ற வெற்றிக்காக காத்திருக்க வேண்டும் அல்லவா..
மனத்திற்கு பிடித்தத்தை ஆரம்பித்து தான் பாருங்களேன் தடையே வராது முடிவே இல்லா இனிமையின் தொடர்ச்சி...
கொடுத்தலின் ஆரம்பம் மகிழ்ச்சியின் ஆரம்பம்..
பல வருடங்களுக்குப் பிறகு குளிர்காலத்தில் தாய்நாட்டிற்கு சென்றேன்..
பசுமையின் ஆரம்பத்தை கண்டேன் !தூய்மையின் ஆரம்பத்தை கண்டேன் !
| தாமிரபரணி |
தளதளவென்று தழைத்து நின்ற வாழை மரத்தோப்புகளும் சாலையில் எங்கும் வழிந்தோடும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் பல வருடங்கள் கழித்து விரைந்தோடும் வைகை ஆற்றையும் காணும் போதே இனிமையாக இருந்தது ..
| வைகை |
பல இடங்களில் இலவச கழிப்பறைக்கு சென்றேன். குறிப்பாக விமான நிலையத்தில் கூட அத்தனை தூய்மையாக இருந்தது தூய்மையின் ஆரம்பம் கண்டு வியந்தேன் . இந்த பசுமை மற்றும் தூய்மையின் ஆரம்பம் என்றும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
ஆரம்பம் by Veena Shankar
ஆரம்பம் என்பது முடிவு அறியா பயணம்
என்னுடைய ஆரம்பம் எது என்று சொல்ல?
இந்த மண்ணில் பெண்ணாய் பிறந்ததையா?
நாவில் வந்த முதல் சொல்லையா?
வீட்டு தரையில் என் கால் ஊன்றியதையா?
முதன்முதலில் பள்ளிக்கு சென்றதையா? ஆசானிடம் பெற்ற அறிவுடைய கல்வியையா?
தாயிடம் கற்ற நிகரில்லா தியாகத்தையா?
தந்தைக்கு அழகு தேவதையாய் மாறியதையா?
மகிழ்ச்சி நிறைந்த பிள்ளைபருவத்தையா?
பூப்பெய்திய நாளில் அடைந்த மாற்றத்தையா?
கல்லூரியில் மாணவியரோடு செய்த குறும்பையா?
திருமணத்திற்கு பின் என் ஆணின் ஸ்பரிசத்தையா?
அதற்கு விடையாய் கிடைத்த பரிசையா?
பரிசினை பிரசிவிக்கும் போது அடைந்த ஆனந்தத்தையா?
பிள்ளையின் கொஞ்சும் மழலை பேச்சையா?
பத்திரமாய் எனை காக்கும் கணவனையா?
பாத்திரமாக விளங்கும் என் மனதையா?
என்மேல் நான் வைக்கும் நம்பிக்கையா?
எது ஆரம்பம் என்று தெரியாத போது
முடிவை எதிர் நோக்கும் என் மனதின் நிழலையா?
இதுவே என் நிலையா?
ஆரம்பம் தெரியாமல் ஓர் முடிவில்லா பயணம்
என்னுடன் பயணிக்க என் எழுத்தின் மூலம் உங்களுக்கு
இதுவே என் அழைப்பின் ஆரம்பம்
குட்டி கதை
கிராமத்தின் தெருவெங்கும் விழாக்கோலம். ஊர் பொது மண்டபத்தில் கூடியிருந்தனர் மக்கள். ' வாசு! இந்தா, இந்த மேஜையை நடுவுல போட்டு, அதற்கு மேலே வள்ளி வீட்டுல வாங்கிட்டு வந்த பட்டுப்புடைவைய நல்லா, அழுத்தமாக விரித்து விடு. அதற்கு மேலே அந்த பெட்டியை வை' என்று சொன்னார் ஊர் பெரியவர். 'அக்கா! இந்தாங்க . சாப்பிட ரொட்டி, முறுக்கு, பொரி எல்லாம் கொண்டாந்திருக்கிறேன். இது முடிஞ்சி போச்சுன்னா நம்ம காளையண்ணன் வெளில பஞ்சு மிட்டாய் கடையும் சின்னக்கா கல் கோனாவும் வித்திட்டுருக்காங்க". என இலஞ்சி சொல்ல, பக்கத்திலிருக்கும் மக்கள் ஆ! என வாய் பிளந்து பார்த்தனர். இதைப்பார்த்த மற்றவர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் தின்பண்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருந்தனர். 'எல்லோரும் அமைதியாய் இருங்க. யாரும் பாதிலே எழுந்து வெளியே போகக்கூடாது. மற்றவர்களுக்கும் மறைக்க கூடாது' என பஞ்சவர்ணம் மக்களை அதட்ட, மக்களும் மௌனம் காத்தனர். இளஞர்களின் கூட்டம் மட்டும் பெண்களை கிண்டலடத்தபடி இருந்தனர். ' வயரு எல்லாம் சரியா இருக்கான்னு பாரு' என பள்ளி ஆசிரியர் சொல்ல வாசுவும் அதை சரிபார்த்து, ஆம் என தலையசைத்தான். 'ஆறு மணிக்கு காட்சி ஆரம்பிக்கும். ஒன்பது மணி வரை யாருக்கும் இடைஞ்சல் பண்ணாம பாருங்க' என மறுபடியும் ஊர் பெரியவர் சொல்ல, மணி ஆறை நெருங்கியது. கூட்டம் அமைதியாக இருக்க, முதல் திரைப்படக்காட்சி ஆரம்பமானது முதன் முதலில், அக்கிராமத்தின், ஊர் தொலைக்காட்சிபெட்டியில்.
Wednesday, January 5, 2022
Tuesday, January 4, 2022
கோலம் by Vidhya Nivash
![]() |
| மகளின் முதல் கோலம் |
இன்றைய சம்பவம் by Veena Shankar
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...
