படைப்புகள் இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் தொலைந்து போகும் தருணங்கள்.
வானமும், கடலும் சந்திக்கும் இடம் எத்தனை எத்தனை முறை வர்ணித்தாலும் சலிக்காதவை!!
அவை கடலும், கடல் அலைகளும் அவற்றின் முன் நிற்கும் பொழுது சத்தமே இல்லாமல் ,கடல் அலைகளின் இடிக்கும் முழக்கத்தின் இடையே அப்படி ஒரு அமைதி, நிசப்தம் மனதில் .... மனம் எங்கும் நிறைந்து மகிழ்ச்சியில் தள்ளாடி செயலற்று நிற்கும். அங்கே கடலும் வானமும் சங்கமித்து உற்று பார்க்கும் தருணம் பிரமாண்டம்.
வெண் புகை மூட்டத்தில் காய்ந்து கொண்டு,ஆவி பறக்கும் வெண்ணிலாவும் பல கதை சொல்லும் தனிமை மறந்து கைக்கோர்த்து உலா வருவோம்..
சூரியனையும் காணும்பொழுது வெப்பத்தை காண முடியாமல் கண் கூசி நிற்கிறோம்!
எங்கும் பரவியிருக்கும் இருளில் பயத்தில் மூழ்கி தொலைந்து விடுகிறோம்!
கலைஞரின் கைவண்ண படைப்புகளான ஓவியம், கற்சிலைகள் அந்த பிரம்மாண்டத்தின் முன்னே நாமும் ஒரு நிமிடம் மயக்கி விடுகிறோம் ..
வடிகாலை தூர்வார தண்ணீர் ஊறிக்கொண்டே போகும் அதுபோல் புத்தகம் எனும் திறவுகோல் கொண்டு திறக்கத் திறக்கத் தான் எண்ணங்கள் ஊறும்.. திறக்கும் சாவி பொருந்தாவிடில் இறுக்கும்.திறக்கும் சாவியை நாம் தேடித்தேடி படிக்க படிக்க விரியும் மனமும், எண்ணங்களும்..
இசையும் ,நடனமும் பிரிக்கமுடியா தோழிகள் அதைப் பார்க்கும் பொழுதே நாம் அதில் ஒன்றுர கலந்து விடுகிறோம். குயிலின் குரலை கேட்க நம்மை எங்கோ இழுக்கும்...
இசை, நடனத்தை ரசிக்கும் பொழுது மெய்மறந்து, நம் மயிற்கால்கள் சிலிர்க்கிறது. அந்தப் படைப்புகளின் முன் வெறும் காற்று குமிழ்களே நாம்.
கோயிலின் கருவறையில் நுழையும் போதும் வீட்டின் கற்பகிரகத்தை பிரியும் போதும் மனம் கனத்து கண்களில் நீர்வடியும் அதை என்னவென்று சொல்வது!!!
படைப்புகளிள் முன் கரைந்து விடுகிறோம் ,கலந்து விடுகிறோம் ,கலங்கி விடுகிறோம் ,கனத்து விடுகிறோம்...கடைசியில் நிறைந்து நிற்கிறோம்.
முற்றிலும் உண்மை. படைக்கும் எண்ணம் வந்தால் அருவியாக வந்து விழும் வார்த்தைகள், சிலநேரங்களில் கஞ்சனின் மனம் போலும் இருக்கும். விமர்சனம் நல்லதாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் படைப்பவருக்கு ஊக்கத்தையே தரும் கடலும் வானத்தை போல. அருமையான படைப்பு வித்யா
ReplyDeleteஉண்மை ,நன்றி வீணா🙏
Delete