Friday, March 25, 2022

குழந்தை by Veena Shankar

                                        குழந்தை



                         கோயில் திருவிழா என்றால் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அன்றும் அத்திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல கடைகள் புதிதாக முளைத்து, எப்போதும் இருக்கும் கடைகளுக்கு போட்டியை உண்டாக்கியது. இது இப்படி இருக்க கோயில் வாசல் அருகே மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை அழுதபடியே நின்றுக் கொண்டிருந்தது.திருவிழாவின் போது குழந்தைகள் காணாமல் போவதும் பிறகு பெற்றோரால் மீட்டு எடுப்பதும் ஒரு சுவாரசியமான நிகழ்வு.

                        அன்றும் அப்படித்தான். குழந்தையை யார்? எவர்? என்று விசாரிக்க சென்றாலும் அந்த குழந்தை அழுதபடியே இருந்ததே தவிர வாயைத் திறக்கவில்லை . ஒருவர் சாக்லேட் காட்டிப் பேச வைக்க முயல, மற்றவர் பொம்மையைக் காட்டி சிரிக்க வைத்து விஷயத்தை வாங்க நினைத்தார். ஆனால் அவர்களுடைய பேச்சுக்கும் கேள்விகளுக்கும் செவிமடுக்காமல் குழந்தை நிற்க,சமாதனம் செய்ய வந்தவர்கள் அவரவர் பாதையில் சென்றனர். பக்கத்தில் இருக்கும் போலீஸ் பூத்தில் சொன்னால் அவர்கள் குழந்தையை பார்த்துக் கொள்வார்கள் என்று கூட்டம் பேசிக்கொண்டாலும் யாரும் அங்கு சென்று சொன்னதாக தெரியவில்லை .

                       அப்போது கோயிலுக்கு வந்த வெங்கட் குழந்தை தனியாக நிற்பதைப் பார்த்து, குழந்தை யின் அருகே செல்ல வாயை மூடிக்கொண்டிருந்த குழந்தை , அழத்தொடங்கியது. இது என்ன வம்பாக போய்விட்டதே என நினைத்து வெங்கட், அங்கே ஒன்றும் நடக்காதது போல கோயிலுக்கு உள்ளே சென்று விட்டான். ஆனால் அவன் திரும்பி வரும்வரை இந்த குழந்தை தன் இடத்தை விட்டு நகரவில்லை . வெங்கட் வருவதை குழந்தை பார்த்தது. வெங்கட்டும் ஏதேச்சையாக குழந்தை இருக்கிறதா என பார்க்க, குழந்தை தன்னைப் பார்ப்பதை அறிந்த அவன், மறுபடியும் குழந்தை இடம் சென்று, தன் செல்போனை காட்ட, இப்பொழுது குழந்தையின் முகத்தில் புன்னகை வருவதை கவனித்து, அதன்பக்கத்தில் சென்றான். செல்போனை வாங்கிய குழந்தை அப்படி இப்படி திருப்பி பார்த்து “ அப்பா! அப்பா! “ என்று சொல்லியது.

                       குழந்தையின் அப்பாவிடம் இந்த மாதிரியான செல்போன் இருக்கும் போல என நினைத்தான் வெங்கட். செல்போனில் பாஸ்வேர்டு ஏதுமில்லாததால் செல்போன் திரை திறந்து, அதில் தன் அப்பா அம்மாவின் போட்டோவை தேடியது அக்குழந்தை . மெல்ல குழந்தையுடன் பேச்சு கொடுத்தான் வெங்கட். அப்பா யார்? எந்த ஊர்? என்று வெங்கட் கேட்க, குழந்தை தன் மழலை மொழியில் பேசியது. என்ன பேசியது என்பதை துளிகூட யூகிக்க முடியவில்லை . இருந்தாலும் அந்த குழந்தையை அப்படி விட்டுச்செல்ல மனம் இல்லாததால் என்ன செய்வது? குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது? என்று தெரியாமல் நின்றான்.

                      போலீஸ்காரர்களுக்கு இருக்கும் திருவிழா வேலையில் குழந்தையை நன்றாக பார்த்து கொள்வார்களா என்ற சந்தேகம் வெங்கட்டுக்கு வர, அந்த குழந்தையை தன்னனோடு அழைத்துச் செல்ல முடிவு செய்து,குழந்தையின் கையைப் பற்றி இழுத்தான். ஆனால் குழந்தை வர மறுத்து,மறுபடியும் சிணுங்கியது. ஆனாலும் வெங்கட்டின் செல்போனையும் தர மறுத்தது. இப்படியே இருவருக்குமான போராட்டம் தொடர, ஒரு வழியாக வந்து சேர்ந்தார் குழந்தையின் அப்பா. “சார்! இது என் குழந்தை. எங்கே நின்று கொண்டிருந்தாள் என் ஜனனி?” என்று தன் குழந்தையை உச்சிமுகர்ந்து, தன் பாசத்தை காட்டினார். நீண்ட நேரமாக இங்குதான் அழுது கொண்டிருக்கிறாள் என்று சொல்லி, குழந்தையின் அப்பா அவர்தான் என்பதை யோசித்த வேளையில், குழந்தையும் வந்தவரை அப்பா என்று கூப்பிட்டது. வேறு வழியில்லாமல் ஜனனி குழந்தையை அவரிடம் ஒப்படைத்தான். “சார்! ரொம்ப நன்றி” என்று சொல்லி வெங்கட்டின் செல்போனை குழந்தையிடமிருந்து வாங்கி கொடுக்க குழந்தையின் அப்பா முயல, குழந்தை செல்போனை தர மறுத்தது.உடனே தன் சட்டைப்பையில் இருந்து தன் செல்போனை காட்டியதும் வெங்கட்டின் செல்போனை அவனிடமே திருப்பிக் கொடுத்து, மழலை சிரிப்பை உதிர்த்தது குழந்தை ஜனனி.

                      தன் மனைவிக்கு குழந்தைப் பேறு இல்லை என்பதால் குழந்தை ஜனனியை தானே வளர்க்கலாம் என்று எண்ணி கொண்டிருந்த வெங்கட்டுக்கு அது நடக்காமல் போனது ஏக்கத்தை தந்தாலும் அந்த குழந்தை , தன் அப்பாவிடம் போய் சேர்வது தான் சரி என்பதை உணர்ந்தான்.

                     குழந்தைப்பேறு இருந்தாலும் இல்லை என்றாலும் உண்மையான பாசம் என்பது பிரிவு ஏற்படும் போது ஏக்கத்தை ஏற்படுத்தும்.

Tuesday, March 22, 2022

மாரித்தாயே by Veena Shankar


 மாரித்தாயே


தாயானவள் என்றும் தரமானவள்

பாசமானவள் என்றும் பரிவானவள்

செயலானாவள் என்றும் செய்கையானவள்

தூணானவள் என்றும் துடிப்பானவள்

கருவுமானவள் என்றும் கருவியானவள்

கடவுளானவள் என்றும் கருணையானவள்

திசையுமானவள் என்றும் தீர்க்காமானவள்

களங்கமற்றவள் என்றும் காட்சியானவள்

நெருப்பானவள் என்றும் நேர்மையானவள்

நீருமானவள் என்றும் நிகரானவள்

மாரியானவள் என்றும் மாரியுமானவள்

போற்றுகிறோம் என்றும் போற்றுகிறோம்

மாரியம்மாவே உன்னை எந்நாளும்

தூக்கம் by Veena Shankar



 தூக்கம்


பசித்தாலும் வாராது தூக்கம் - அதிகம்

புசித்தாலும் வாராது தூக்கம்

அழிற்சியினால் வாராது தூக்கம் - பெரும்

முயற்சி எடுத்தாலும் வாராது தூக்கம்

தனித்து இருந்தாலும் வாராது தூக்கம் - நெஞ்சம் 

கொதித்தாலும் வாராது தூக்கம்

துன்பத்திலும் வாராது தூக்கம் - சில நேரம்

இன்பத்திலும் வாராது தூக்கம்

மெத்தை கொண்டாலும் வாராது தூக்கம் - கடும்

சிரத்தை எடுத்தாலும் வாராது தூக்கம்

சினத்தாலும் வாராது தூக்கம் - கட்டி

அணைத்தாலும் வாராது தூக்கம்

குழப்பங்கள் உதித்தாலும் வாராது தூக்கம் - சிறு

குழந்தையின் சிணுங்களால் வாராது தூக்கம்

தாலாட்டு பாடினாலும் வாராது தூக்கம் - பிறரின் 

பாராட்டு கொண்டாலும் வாராது தூக்கம்

எதிர்பார்த்தாலும் வாராது தூக்கம் - மற்றவர்

மதிக்காததாலும் வாராது தூக்கம்

வயதானாலும் வாராது தூக்கம் - காதல்

வயப்பாட்டாலும் வாராது தூக்கம்

வஞ்சகம் குடிகொண்டாலும் வாராது தூக்கம் - கையினால்

லஞ்சம் வாங்கினாலும் வாராது தூக்கம்

துக்கம் அடைத்தாலும் வாராது தூக்கம் - பிறர்

குறட்டையினாலும் வாராது தூக்கம்

இரவு வந்தாலும் வாராது தூக்கம் - அதிக

பணசெலவு ஆனாலும் வாராது தூக்கம்

எப்போது வரும் தூக்கம்?

இப்போதே என்று சொல்ல முடியாத தூக்கம் வர பிரார்த்திப்போம்.

கண் திறந்த மாரியம்மா by Veena Shankar

 






Tuesday, March 8, 2022

தவிப்பு by Vidhya Nivash

 


கண்கள் காண தவிக்கிறது....

கால்கள் ஆட ,ஓட தவிக்கிறது...

கைகள் எழுத தவிக்கிறது...

மனமோ ஏன் ஏன் என்று பல கேள்விகள் எழுப்ப தவிக்கிறது....

மனதிற்கும் ,அறிவுக்கும் இடையே உள்ள சண்டையில் இதெல்லாம் அறியாமை அல்லவா என்று கேட்க தவிக்கிறது...

சரியான நேரத்தில் கருத்தை வெளியிட முடியாமல் தவிக்கிறது மனம்..

பல தவிப்புகள் உள்ளே கொட்டிக் கிடக்கிறது கைக்கு மட்டுமா விலங்கு மனதிற்கு பெரிய விலங்கு ,கழுத்துக்கு விலங்கு ,காலுக்கு விலங்கு பல அதற்காக நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல்களுடன் சில நேரங்களில் தோன்றும் அலங்காரப் பொருள் என்றோ..

பல தவிப்புகளை முறியடித்து பல துறைகளில் வெற்றிக்கண்டு ...இன்று நாம் சுதந்திரமாக தினமும் கொண்டாட காரணமாக இருந்த பலரின் குறிப்பாக பல பெண்களின் விடாமுயற்சியை எண்ணி மகிழும் நாள் இன்று.




தவிப்பு by Veena Shankar

 



 
மனிதனின் எண்ணத்திற்கும் கடமைக்கும் மன விலங்கு போட முடியாவிட்டாலும் கை விலங்காவது நிலைக்குமா?

 இரும்புக்கரத்திற்கு இரும்பு சங்கிலி . இரும்பு மனத்திற்கு எது சங்கிலி?

இந்த படமே தவிப்பு, அதனால் தவிர்ப்பு?

சங்கிலியின் சாவி என் கையில் பத்திரமாக என்னிடம் இருக்கிறது - கை விரல்களின் செயல்

வளையங்களின் கோர்வையும் விரல்களின் பிணைப்பும் ஒற்றுமை சின்னங்கள்

இரும்பு போர்வையில் இறந்த மனம்

கொள்கையை காப்பாற்ற நினைக்கும் மனிதர்களுக்கு கிடைத்த பரிசு வெற்றியும் தோல்வியும்

கரும்பின் வண்ணமும்(கை) இரும்பின் பாசமும் (சங்கிலி)

 லஞ்சம் வாங்கி துருப்பிடித்த கரங்களுக்கு துருப்பிடித்த சங்கிலியே மாயை, எந்நேரமும் அவிழலாம் நீதியரசர்களின் தீர்ப்பால்

காக்கும் கரங்களுக்கு இரும்பு சங்கிலியால் பிணைப்பு

நற்செயலாற்றிய கரங்களுக்கு, விலங்குகளால் பூட்டப்பட்ட விலங்கு.

 ஆணின் கரத்தையும் மனத்தையும் சுற்றி வளைக்கும் சங்கிலியாய் இருக்கிறது பித்து பிடித்த பெண்ணின் மனம்

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...