தூக்கம்
பசித்தாலும் வாராது தூக்கம் - அதிகம்
புசித்தாலும் வாராது தூக்கம்
அழிற்சியினால் வாராது தூக்கம் - பெரும்
முயற்சி எடுத்தாலும் வாராது தூக்கம்
தனித்து இருந்தாலும் வாராது தூக்கம் - நெஞ்சம்
கொதித்தாலும் வாராது தூக்கம்
துன்பத்திலும் வாராது தூக்கம் - சில நேரம்
இன்பத்திலும் வாராது தூக்கம்
மெத்தை கொண்டாலும் வாராது தூக்கம் - கடும்
சிரத்தை எடுத்தாலும் வாராது தூக்கம்
சினத்தாலும் வாராது தூக்கம் - கட்டி
அணைத்தாலும் வாராது தூக்கம்
குழப்பங்கள் உதித்தாலும் வாராது தூக்கம் - சிறு
குழந்தையின் சிணுங்களால் வாராது தூக்கம்
தாலாட்டு பாடினாலும் வாராது தூக்கம் - பிறரின்
பாராட்டு கொண்டாலும் வாராது தூக்கம்
எதிர்பார்த்தாலும் வாராது தூக்கம் - மற்றவர்
மதிக்காததாலும் வாராது தூக்கம்
வயதானாலும் வாராது தூக்கம் - காதல்
வயப்பாட்டாலும் வாராது தூக்கம்
வஞ்சகம் குடிகொண்டாலும் வாராது தூக்கம் - கையினால்
லஞ்சம் வாங்கினாலும் வாராது தூக்கம்
துக்கம் அடைத்தாலும் வாராது தூக்கம் - பிறர்
குறட்டையினாலும் வாராது தூக்கம்
இரவு வந்தாலும் வாராது தூக்கம் - அதிக
பணசெலவு ஆனாலும் வாராது தூக்கம்
எப்போது வரும் தூக்கம்?
இப்போதே என்று சொல்ல முடியாத தூக்கம் வர பிரார்த்திப்போம்.

அருமை வீணா 💐❤️💐
ReplyDeleteNandri
Deleteவார்த்தையில் எளிமை.கருத்தில் வலிமை. மொத்தத்தில் அருமை.
ReplyDeleteதங்கள் வார்த்தையால் எனக்கு பெருமை. நன்றி.
Delete