Thursday, August 5, 2021

இந்த வாரத்தலைப்பு " எங்கே"

 


எங்கே?

என்னோட "Me Time" எங்கே?😡


Go Corona Go😫😫

                            - Divya 

 எங்கே அவள்?...

காணவில்லை...

தேடினேன் தேடினேன்..

தேடி கொண்டே இருக்கிறேன்...


ஒரு நாள் அவள் -அருகாமையில்...!!..

மறு நாளோ அவள்-

தொலை தூரத்தில்..!!..

சில நாட்களோ அவள்- 

காணாமலே .. போக-

தவிப்பே இங்கே மிச்சம்...!!!...


நிரந்தரமாய் என்கூட வசிக்க ..

என்ன தருவேன் உனக்கு -

என்னை தவிர..!!!!


அவளை பார்த்தால் கூறுங்கள்..

சுதந்திரமாய் காற்றை சுவாசிக்க...அவளை

அரவணைக்க -இங்கே ...

ஓர் கூட்டமே காத்து கிடக்கிறது என்று ...!!..


அவள் பெயர் ஷாந்தி !!!...

ஓம் ஷாந்தி 😭

                                  - Kiruthika 



                           - Akhiladevi Kumaran 

எங்கிங்கோ தேடினேன். எங்கே என்பதற்கு விடை கிடைத்தது விண்மீன்களில்


எங்கே என்பதன் வாழ்க்கை துணை - தேடுதல்


பறவை தேடியது கூடு கட்ட இடம் எங்கே என்று

மரம் தன்னை காட்டி சொன்னது இங்கே என்றது

கேள்வி தேடியது பதில் எங்கே என்று மனம் சொன்னது பதில் உன்னிடமே என்று

உடல் தேடியது

ஓய்வு எங்கே என்று

காலம் சொன்னது 

பொறுமை என்று

மனிதனின் மனம் தேடியது அமைதி எங்கே என்று

கடவுள் கை காட்டினார் கோயிலென்று

இயற்கை தேடியது நீரும் காற்றும் தோற்றது எங்கே என்று உயிர் சொன்னது மனிதனிடம் என்று


பாசம் எங்கே கோபமும் அங்கே

நேசம் எங்கே பரிதவிப்பும் அங்கே

வீரம் எங்கே விவேகமும் அங்கே

வரம் எங்கே சாபமும் அங்கே

கேள்வி எங்கே தேடலும் அங்கே

வேள்வி எங்கே பலனும் அங்கே

பகை எங்கே பாராட்டும் அங்கே

ஈகை எங்கே பிச்சையும் அங்கே

இழப்பு எங்கே கருணையும் அங்கே

தடுப்பு எங்கே குற்றமும் அங்கே

மாற்றம் எங்கே விடிவு அங்கே

வெற்றி எங்கே

களிப்பும் அங்கே


 எங்கே எங்கே என்று தேடும் சிறுவர்களின் கண்கள்

பொருட்காட்சியில் ராட்டினம் அப்பளத்திற்காக

எங்கே எங்கே என்று தேடும் பாமரன் கண்கள்

அரசியல் கூட்டத்தில் கிடைக்கும் பணத்திற்காக

எங்கே என்று தேடும் கண்கள் பெண்களுக்கு சேர்த்த பணத்தை ஒளித்து வைப்பதற்காக

எங்கே எங்கே என்று தேடும் கண்கள் விடலை பையன்களுக்கு தங்களுடைய மயிலை எண்ணி மையல் கொள்வதற்காக எங்கே எங்கே என்று தேடும் கண்கள் கன்னி பெண்களுக்கு நீளமான கேசத்தை தேடி பெருமை கொள்வதற்காக

எங்கே எங்கே என்று தேடும் கண்கள் முதியவர்களுக்கு தன்னை காப்பாற்றும் பிள்ளை யாரென்பதற்காக

எங்கே எங்கே என்று தேடும் கண்கள் இறைவனின் அனுதாபத்திற்காக

எங்கே எங்கே என்று தேடும் கண்கள் பக்தர்களின் உண்மையான பக்திக்காக


 நானும் என் தோழியும் உருவ ஒற்றுமையால் மற்றவரை குழப்பிய காலம் எங்கே?

நடைபயிற்சி என்று கோயிலுக்கு சென்ற நடை எங்கே?

நவராத்திரி நேரத்தில் கொலுவிற்கு செல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சி எங்கே?

பள்ளியில் நமக்கென உருவாக்கிய "க " னா பாதை எங்கே?

கல்லூரியில் மதிப்பெண்களை வகுப்பறையில் சொல்லும் போது இருந்த தவிப்பு எங்கே?

தண்ணீர் லாரியை கண்டவுடன் குடத்துடன் ஓடி தண்ணீர் பிடிக்கும் காட்ச் எங்கே?

தனக்கென தனியாக வாகனம் இல்லாத பயணம் எங்கே?

இன்னும் பல எங்கேக்களை அரங்கேற்ற நினைத்தும் கேட்பவர்கள் எங்கே?

பிள்ளைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ எங்கே

விளையாட்டு விழா, ஆண்டு விழா எங்கே

குரூப் போட்டோ எங்கே

வகுப்பு போக மற்ற நேரங்களில் பிள்ளைகளின் அரட்டை எங்கே

பள்ளியில் நம் பிறந்த நாள் கொண்டாட்டம் எங்கே 

இப்படி பலவும் எங்கே தான் இந்த கொரானா காலத்தில்

                               - Veena Shankar 

வயதான காலத்தில் அமைதி.பொழுது போக்கு.ஊக்கம் எங்கே எங்கே என தேடும்போது ஆஹா கிடைத்ததே வின்.மீன்கள் துணை.

                                - Vedavalli Ramani 


தினமும் எங்கே எங்கே தேடும் முதல் புத்துணர்ச்சி coffee with mobile phone ☕😀


எங்கே என்று தேடும் TV remote control மற்றவர் வீட்டில் தூங்கும் போது, நம் நேரம் கிடைக்காது ...😃

Mobile app உதவி செய்து இப்ப🤝🏻


என் இளமை எங்கே

என் மகிழ்ச்சி எங்கே

என் கனவுகள் எங்கே

என் வெற்றி எங்கே

வேறெங்கும் இல்லை

உன்னில் தான் தூங்கி கொண்டிருக்கிறது..

உன் முயற்சி எங்கே என்று!!!


 வாழ்க்கை எங்கே ஆரம்பிக்கிறதோ..

அங்கே தான் முடிய காத்திருக்கின்றது...

இதற்கு இடையில் தான் எத்தனை எங்கே???? தினமும் துளைக்கிறது மனதை...


குருவி கூடுகள் எங்கே

மரங்கள் முதலில் எங்கே

அமைதியான சூழலில் காஞ்சனா வீட்டில் மட்டும் அல்ல...

பாலைவன வீட்டு பால்கனியில் கூட குஞ்சு பொறிக்க்கிறது பறவைகள்..

காட்டில் எங்கே மரங்கள்

ரோட்டில் எங்கே மரங்கள்

இதே இங்கே பலரின் வீட்டில் பாதுகாப்பாக வளர்க்கிறது...

நல்ல காற்று எங்கே

நல்ல மழை எங்கே

ஆறு எங்கே, குளம்,குட்டை எங்கே...

எப்பேர்பட்ட சூழ்நிலையும் மீண்டும் மாறும்

அனைத்து நீர்நிலைகளும் மாறும் என்பதற்கு சான்று இந்த வீட்டுத்தோட்டங்கள்..

எங்கே எங்கே என்று விடாமுயற்சியுடன் தேடினால் கண்டிப்பாக விடை அங்கே கிடைக்கும்


எங்கே எங்கே என்று தேடி பூத்து போனது கண்கள் 

பேரபிள்ளைகளின் தேகம் தொட ஆசை...

எங்கே இங்க கொஞ்சம் காட்டு பிள்ளைய..

எங்கே அப்பா...சரிய தெரியவில்லை

எங்கே எங்கே தேடியும் சரியா network கிடைக்கில..

எங்கே எங்கே ஆக்ஸிஜன் எங்கே கிடைக்குது...

எங்கே அம்மா ,அப்பா எங்கே..

இங்க தான் கடைத்தெருவிற்கு..

எங்கே அப்பா அது disposal mask துவைக்க கூடாது..

எங்கே அப்பா முகத்தைக்காட்டுங்க...


ரிப்பன் கட்டிய இரட்டை ஜடைகள் எங்கே

தாவணி போட்டவுடன் வரும் முதல் வெட்கம் எங்கே

நான் நடந்து சென்ற சாலைகள் எங்கே

நான் உல்லாசமாக உட்கார்ந்திருந்த ஜன்னல் எங்கே

அம்மா கையில் கிடைக்கும் முதல் தோசை ,காப்பி எங்கே

ஒர் வார்த்தைக்கூட தாங்காமல் வரும் முன் கோபம் எங்கே

ஓ அது கடந்தகாலமோ 🙄

அம்மா பசிக்குது தோசை எங்கே!!!


எங்கே தேடினாலும் கிடைக்காத நேசம்

எங்கே தேடினாலும் கிடைக்காத பாசம் 

எங்கே தேடினாலும் கிடைக்காத அமைதி

எங்கே தேடினாலும் 

கிடைக்காத நம்பிக்கை

எங்கே தேடினாலும் 

கிடைக்காத தூக்கம்

எங்கே தேடினாலும்

கிடைக்காத மகிழ்ச்சி

எங்கே முதலில் உன்னில் தேடு வேறெங்கும் இல்லை

                              - Vidhya Nivash 

1 comment:

  1. Kiruthika: 🤣🤣😭😭
    This is corona’s long ‘ me time ‘😭😭
    Akhila: 😂👌
    Akhila: Idhu semma counter 🤣😂👌👌
    Akhila: அற்புதம்🌹🌹🌹

    எங்கே எங்கள் கிருத்திகா என்று தேடினோம்… இதோ வந்துட்டார்!!!!
    Veena: 👍👌🏻
    : 👍
    Kiruthika: Wow 😊😊
    Ssss
    இங்கே கிட்டியது ..
    மனதிற்கே விருந்து 😊😊ஷாந்தியின் சுவையோடு...!!!

    விரல் கோர்த்து .. வினவ.. விடையும் காண..!!!...
    Akhila: enna oru aazhndha sindhanai...super veena
    Akhila: 🤩
    Kiruthika: அழைத்தது யார்?!!..
    கரும்பு திண்ண கூலியா??..
    Veena: நன்றி சொல்ல எழுத்து எங்கே. எல்லாம் சுருங்கிவிட்டது
    Kiruthika: அருமை .. 👌👌Veena 😊
    தேடல் ஒரு தொடர்கதை 😊😊
    Veena: ஆம் அம்மா. உண்மையான பதிவு.
    Vedavalli: அருமை
    Vidhya Nivash: It's true 👌🏻
    Vidhya Nivash: Sema reply
    Vidhya Nivash: அருமை கிருத்திகா
    Vidhya Nivash: இது பலரின் எங்கே தேடல் அகிலா குறிப்பாக நகையில்😄
    Vidhya Nivash: அருமை வீணா
    Vidhya Nivash: கண்டிப்பாக 🙌🏻
    Vidhya Nivash: கிருத்திகா பதில்கள் அருமை
    Vidhya Nivash: வீணாவின் அனைத்து சிந்தனைத்துளிகளும் புதுமை அருமை👌🏻
    Vidhya Nivash: எங்களுக்கும் உங்களின் பதில்கள் ஊக்கம் தருகிறது அம்மா🙏🏻
    Akhila: எங்களின ஊக்க மருந்து -நீங்க அம்மா💖
    Veena: Exactly coffee தான்
    Kiruthika: முதல்ல Mobile next coffee 🤣
    Veena: வின்மீனுக்கு அடிமை
    : Oh. Thank God. Some more days to go for me, I think
    : இரண்டும் போதை தரும் விசயங்கள் என்னை பொறுத்தவரை. அப்படித்தானே?😂😂
    Kiruthika: வீணா எங்கே .. கவி மழையும் அங்கே 😍
    Veena: தனி மனித வெற்றி??😂😂
    Kiruthika: ஆம் அம்மா..
    நம் மனம் மேடை ஏறுவது-
    இளைப்பாறுவது ...
    இங்கேதான்!!!...
    Vidhya Nivash: கண்டிப்பாக,ஆனா பழகிவிட்டது
    Vidhya Nivash: கண்டிப்பாக one of my me time
    Veena: S dear. அதுவும் டென்ஷன் இல்லாமல் காலையில் அறுந்துவதென்பது சிறப்பு
    Kiruthika: 😊ssss விடாத போதை
    : Classic 👏👏👏
    Sakthi: 👌💐👏
    Veena: Arumai
    : 👍👌🏻
    Akhila: Nice vidhya 👍
    Akhila: வாழ்க mobile app 🙌
    Vidhya Nivash: அருமை அகிலா
    Veena: ஆம். எங்கே என்பதே ஆரம்பம்
    : 👍👌🏻👌🏻
    Kiruthika: அருமை Veena
    Vidhya Nivash: அழகான வரிகள்👌🏻
    Vidhya Nivash: இங்கே,அழகு வீணா👌🏻
    Akhila: 🥰👏👏👏
    Sakthi: 👏👌
    Sakthi: Nice
    Vidhya Nivash: Super Akhila
    Veena: கூகுள் கைக்குள்.
    : 👍👌🏻👏
    Ramalakshmi: Nice.
    You can still add
    Food
    Bank
    Shop
    Tickets
    Akhila: yess yess Ramalakshmi...akshaya paatram maadhiri....list is endless...anything and everything in smartphone nowadays!!
    Akhila: True....Mr.Google - all time solution
    Sakthi: 😍😍🥰👌vidya
    எங்கே எங்கே என்று கேட்க எங்களை எங்கோ அழைத்து சென்று விட்டாய்
    Veena: Super Vidhya 👍👏👏
    Vishalini: அனைத்து " எங்கே " கவிதைகளும் மிக மிக அருமை👏👏👏
    Vidhya Nivash: ஆம் வீணா நீண்டு கொண்டே போகும்
    Sakthi: Everyone can think everyone can't write super blending with words and heart.no words to express my feel that u expressed mine.🤝👏👏🌹
    Veena: மிகவும் சரி. முதலில் நம்மிடமே தேட வேண்டியது நிறைய இருக்கிறது. 👌🏻👏
    Akhila: 💖yes
    Akhila: Wowww such a great appreciation in our sweet language tamil ❤️thanks vidhya 😍
    Akhila: 😎💖yes valar
    Akhila: Arumai vidhya
    Akhila: Vidhya aruvi 🤩🥰🥰🥰 rasithen
    Akhila: Yes yes Veena
    Akhila: Power of “எங்கே” வரிகள் வியக்க வைக்கிறது
    Akhila: அருமையான தத்துவம்… போற போக்கில்அள்ளி தெளிச்சிட்டீங்க வித்யா🥰🥳🥳🥳
    Akhila: 😎🤩 valar..
    Vishalini: உண்மை வித்யா... எங்கள் பால்கனியில் கூட😊😊

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...