Thursday, August 19, 2021

இந்த வாரத்தலைப்பு "திருக்குறள்" by Vidhya Nivash

 


நட்பும், நன்றிக்கடனும்


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

என்ற திருக்குறளுக்கு ஏற்றாற்போல வாழ்க்கையில் பல விதங்களில் அனுபவித்திருக்கிறேன். மொழிதெரியாத ஊரில் சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு வயிற்று உபாதைகளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தேன் என்றால்?? நான் கேட்கும் முன் வந்து நின்றார்கள் , எந்த வித முன் அறிமுகமும் இல்லாத நண்பர்கள் .மிக நெருக்கமான அம்மா,அக்கா போல் பல உறவுகளில்..🙏🙏 அந்த ஊருக்கு சென்று இறங்கியபோது யாரையும் தெரியாது, ஆனால் அங்கிருந்து வரும் பொழுது சொந்தங்கள் போல் தோழிகள் வந்து வழி அனுப்பினார்கள் (ஜகார்த்தா தோழிகள்).


அபுதாபியில் காலில் பட்ட சிறு அடியின் போது 40 நாட்கள் படுக்கையிலே இருந்தேன். விழுந்த அன்றுமுதல் தாய் நாட்டிற்கு செல்லும்வரை ஒரு கை போலே கூட இருந்த தோழிகள். அந்த 40 நாட்களும் வீடு திருவிழா போல இருந்தது .எங்கிருந்து அவ்வளவு புத்துணர்ச்சி வந்தது என்றே தெரியவில்லை. தோழிகள் மட்டுமல்ல அவர்களது கணவரும் கிடைக்கும் நேரத்துல வந்து உற்சாகப் படுத்தினார்கள்.அகிலாவையும் மறக்க முடியாது வீடு தேடி வந்து உற்சாக படுத்தினார்.


கணவரும் ,தங்கையும் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது.விழுந்த மறுநாளே என் தங்கை வந்து விட்டாள்.இன்னொரு தாய், அவள் ஒரு வாரம் தங்கி இருந்தாள். அவள் கூறிச் சென்ற வார்த்தை இவ்வளவு தான் உனக்கு நண்பர்களா?? இன்னும் இருக்கிறார்களா?? என்று கேட்டாள். கணவர் உனக்கு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு தான் என்னால் கைலாய மலைக்கு எளிதாக சென்று வர முடிந்தது என்று கூறினார்.அவரும் தோள்கொடுத்து தாங்கினார் .


சமையல் புரிவதற்கு நியமிக்கப்பட்ட சகோதரியும் பலநாட்கள் சமைக்கவே இல்லை எங்கள் வீட்டில் உங்களுடைய நண்பர்கள் மிக அருமை என்று கூறினார். 


நான்கூட இப்படி உதவி செய்து இருப்பேனா ??என்று தெரியவில்லை.

வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது, என்றும் நன்றிக்கடன் பட்டவள் .


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


சிறுவயதிலிருந்து இக்கட்டான சூழலிலும் ‌கைப்போல் வந்த அனைத்து நண்பர்களுக்கும் பல கோடி நன்றிகள்🙏🙏🙏.

 விடாமுயற்சி மந்திரம்

அடிக்கடி ஒரு வேலையில் சோர்வு ஏற்படும் போது,எடுத்த காரியத்தில் குழப்பம் வரும்போது ஞாபகத்துக்கு வரும் திருக்குறள்   

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

1 comment:

  1. Sakthi: வணக்கம் தோழி அழகான அனுபவம்😍🥰
    நன்றி ❤
    சுசீலா: 👏👏உண்மையான நட்பு கடவுளின் வரம்.. you are gifted..God bless you pa 🙏
    ஆமாம் சுசீலா, மிக்க நன்றி🙏🙏
    VeenaShankar: 👍thikkatrorukku theivam thunai irrukkum.
    : Vadivam veranaalum theivam ondrey
    கண்டிப்பாக உண்மை வீணா🙏
    Vedavalli Ramani: வெளிநாட்டில் வசிக்க வந்தவர்களுக்கு நண்பர்கள் உறவினர்க்கு மேல் உதவுகிறார்கள்.நான் நேரில் பார்த்து வியந்து இருக்கிறேன்.அதுபோல் தங்களுக்கு கிடைத்தது கடவுள்.உங்கள் பெற்றோர் ஆசிதான்.
    ஆமாம் அம்மா,மிக்க நன்றி

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...