Saturday, September 25, 2021

இந்த வாரத்தலைப்பு "கதை எழுதுவோம்" by Kiruthika

 


 *புதிய பாதை *



ஒரு மாலைப்பொழுதில் சங்கீதா கதவைத் திறந்து வேகமாக தெருவில் சென்றாள்...

திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே தெரு முனை ஆட்டோ ஸ்டேன்டிற்கு சென்று அவசரமாய் ஆட்டோ ஏறினாள்..!!

“ரெயில்வே ஸ்டேஷனிற்கு வேகமாக போப்பா”என்றாள் ஆட்டோகாரன் எங்கே போகனும் என்று கேட்கும்

முன்பே..!!

எந்த எக்ஸ்பிரஸ் பிடிக்கனும்மா? .. ஆட்டோக்காரன் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பாமல் திரும்பிக் கொண்டாள்..!..


அதே நேரம் அவள் கணவன் ராகேஷிற்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது .,..

அலுவலகம் முடிந்து வீடு வந்தவுடன் சங்கீதா போய் விட்டாள்.. என்பது புரிந்தது!..

உடனே கைப்பேசி எடுத்து சங்கீதா அம்மாவிடம் கத்தினான்.. “உங்க பொண்ணு எவன் கூடவோ ஓடி விட்டாள்..!!..”என்று ..



அடுத்த முப்பது நிமிடத்தில் ரயில்வே நிலையத்தில் இறங்கியதும் சூர்யாவை தேட ஆரம்பித்தன அவள் விழிகள்..

  அதோ .. அங்கே சூர்யா..!..

சங்கீதாவை பார்த்தவுடன்,ஓடி வந்தான்.. பதற்றமாய்!!

   அக்கா..சங்கிக்கா..!.. 

“நான் என் ஊட்டி கான்வென்ட் சிஸ்டரிடம் பேசி விட்டேன்..

நீ தாராளமாய் அங்கேயே தங்கி பிள்ளைகளுக்கு பரத நாட்டியம் கற்று தரலாம்..!”..என்று சொல்லிவிட்டு கோவை

எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான டிக்கெட்டை அவள் கையில் திணித்தான்..

  தேங்க்ஸ்டா .. ஆனால் உன் பெரியம்மா பெரியப்பாவை எப்படி சமாளிப்பே .. ?..என்றாள்..

   தங்கைகள். ...கலா மாலா கல்யாணம்

முடியட்டும்.. பிறகு உன் ஆன்டி ஹீரோவிடம் நீ அனுபவித்த கசப்பான உண்மைகளை கூறுகிறேன்.. பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும்...

உன் முடிவு சரியென அப்போது புரியும் என சமாதானம் செய்து முடித்தபோது ..

ரயில் புறப்பட்டது புதிய பாதை நோக்கி..!!

அதே நேரம் அங்கே சங்கீதாவின் அம்மா.. பூஜை அறையில் கண் கலம்பியபடி புலம்பி கொண்டிருந்தாள்..எதிரே சிலையாய் நின்று கொண்டிருந்த முருகனிடம்..

“ என் மகள் -தவறு செய்ய அல்ல .. தனக்கு அமைந்த தவறான வாழ்க்கையை திறுத்திக் கொள்ளவே போயிருப்பாள்...” என்று..!!!!....

   எத்தனையோ முறை சங்கீ அந்த கயவனின் முகத்திரையை கிழிக்க முற்பட்டும் தான் தானே சமாதானம் செய்தோம் .. தங்கைகளின் கல்யாணத்தை காரணம் காட்டியென ...கண் கலங்கியபடி தன் மகளுக்கு மட்டும் சரியான தீர்ப்பு வழங்காத அவளது சராசரி *ரிட்டயர்டு நீதிபதி * அப்பா..!!!...ஈஸிச்சேரில் மனம் வருந்தி கொண்டிருந்தார்....

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...