Friday, September 24, 2021

இந்த வாரத்தலைப்பு "கதை எழுதுவோம்" by Vidhya Nivash

 


ஒரு மாலைப்பொழுதில் சங்கீதா கதவைத் திறந்து வேகமாக தெருவில் சென்றாள். இந்த நாளுக்காக தான் இத்தனை நாள் காத்திருந்தோம். நம்முடைய கனவு அரங்கேறப் போகிற நாள் இன்று. இந்த உடையை அணிந்து நடக்கும் பொழுதே மனதில் பிறக்கிறதே ஒரு கம்பீரம் எனப்பல எண்ணங்களை அசைபோட்டு வீரநடை நடந்தாள் சங்கீதா.


அதன் முந்தைய நாள் அம்மா ஆசையாக ஜடை பின்னி பூ வைத்து, தாவணி உடுத்தி வந்த சங்கீதாவை உற்றுப்பார்க்க... இந்த ட்ரெஸ் எல்லாம் எப்படி தான் போடுகிறார்கள். ஒரே புழுக்கம் இந்த ஹேர்பின் வேற குத்துது தலையில இந்த குஞ்சத்தை வைத்துதான் ஜடை பின்ன வேண்டுமா அது வேற ஒருபக்கம் இழுக்குது .ஏம்மா இப்படி என்ன பாடா படுத்துறியே . எப்பொழுதும் போல பாட்டு பாட ஆரம்பித்து விட்டாள் சங்கீதா.


மறுபக்கம் சங்கு எவ்வளவு மென்மையான ஆடை உடுத்தும் பொழுது எவ்வளவு பஞ்சு போல இருக்கும் இந்த சேலை .கண்ணாடி வளையல் ஓசை கேட்கும் பொழுது யாரோ சிரிப்பது போல இருக்கிறதல்லவா என்று பல கனவுகளுடன் சங்கு ஒரு பக்கமிருக்க... சங்கு இத்தனை அழகான ஆடை அணிகலன்கள் இருக்கும்பொழுது இதையெல்லாம் விடுத்து ஏன் இப்படி மாடன் டிரஸ் மட்டுமே எல்லா பெண்களும் ஆசைப்படுறாங்க .


அம்மாவின் ஒரு புறம் சங்கும் மறுபுறம் சங்கீதாவும் நாளைக்கு எங்களோட கனவுகள் நிறைவேற போற நாள். உங்களுடைய தைரியமும்,அன்பும் அரவணைப்பும் தான் எங்களை இவ்வளவு தூரம் ஆளாக்கியிருக்கு அம்மா. அம்மாவும் அப்பாவும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் நாங்கள் இருவரும் எங்கள் இலட்சியத்தை அடைந்திருக்க முடியாது இல்ல. நாங்க ஒன்னும் செய்யல உங்களோட விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான் நீங்க இதை அடைவதற்கு காரணம் அப்படின்னு அம்மா சொல்லி .தூங்குங்க தங்கமே நாளைக்கு நீங்க காத்திருந்த நாள் அந்த நாளுக்காகத்தான் நாங்கள் இத்தனை நாள் காத்து இருந்தோம்.


கூட்டுக்குள்ளே போராடி வெளியே வந்த பட்டாம்பூச்சி போல தன்னுடைய உள்உணர்வுகளிலிருந்து விடுதலை பெற்று வெளியே செல்லும் சங்கீதா பிறப்பால் சங்கு பாண்டியாக பிறந்து இன்று சங்கீயாக மறுபிறவி எடுத்து பறந்து செல்கிறாள். மறுபுறமோ சங்கீதா இந்த நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்து ராணுவ படையில் சேர துள்ளல் வேகத்துடன் ஆசையை நிறைவேற்ற வீரநடை நடக்க... 


மாலைப்பொழுதில் வீட்டிலிருந்து வெளியே வேகமாக சென்ற சங்கீதா மற்றும் சங்கு பாண்டி இருவரும் இரட்டையர்கள்.சங்கீ நாளைய சமுதாயத்தை உருவாக்க போகிற பெண் ஆசிரியராக மறுபுறம் இளமைத் துடிப்புடன் செல்லும் ராணுவ வீரமகளாக சங்கீதா கண்கொள்ளா காட்சியை கண்டு கண் கலங்கி நிற்கும் அவருடைய பெற்றோர்கள்... வீட்டில் இருப்பவர் உடைய ஆதரவு இருந்தால் போதும் பிள்ளைகள் எதையும் அடைய முடியும் இல்ல...

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...