மனிதனை மனிதன்
நிறைய பேசினால் வாய்க்கொழுப்புக்காரன்
பேசாமல் இருந்தால் திமிர்பிடித்தவன்
மெதுவாகப் பேசினால் விஷமக்காரன்
அதிர்ந்து பேசினால் கோபக்காரன்
மெதுவாக நடந்தால் சோம்பல் கொண்டவன்
வேகமாக நடந்தால் கோட்டையை பிடிப்பவன்
கனவு கண்டால் கையில் ஆகாதவன்
காண்பதை சொன்னால் பிழைக்கத் தெரியாதவன்
தான் உண்டு என்று இருந்தால் சுயநலவாதி
அடுத்தவருக்கு உதவினால் டாம்பீகவாதி
ஆள நினைத்தால் அகங்காரக்காரன்
அடிபணிந்து இருந்தால் பைத்தியக்காரன்
பெண் வியாபாரி
எத்தனையோ பேர் வாழ்வில்
ஒளி ஏற்றுகிறேன் நான்
என் வாழ்க்கை இருட்டில் அரங்கேறுவதால்
விருந்தாளியாக வருபவர்களுக்கு
மகிச்சியை தருகிறேன் நான்
என் துக்கத்தை மனதிலே பூட்டி வைத்து
மனமே
வாழ்க்கையின் சிக்கலை தவிர்க்க நினைக்கும்
மனமே! நீ பின்னப்பட்ட வாழ்க்கை உறவுகளை அவிழ்க்காதே
வாழ்வின் தேவைக்கு செல்வத்தை அடைய நினைக்கும்
மனமே! நீ ஒருபோதும் அதன் ஆளுமைக்கு அடிமையாகதே
பசியை தோற்கடிப்பேன் என்று சொல்லும்
மனமே ! நீ என்றும் அடுத்தவர் வாழ்வை பறிக்காதே
உடலை வளர்க்கிறேன் என்று எண்ணும்
மனமே! நீ எப்போதும் நோய்க்கு வெற்றியை கொடுக்காதே
காதல் மனைவி
பொம்மை உடுத்திய சேலை வேண்டும்
என்று கேட்டாள் மனைவி
வாங்கிக் கொடுத்தேன்
பொம்மை போட்ட நகைகள் வேண்டும்
என்று கேட்டாள் மனைவி
வாங்கிக் கொடுத்தேன்
பொம்மையே வேண்டும் என்று கேட்டாள்
அதை வாங்கி கொடுக்க ஆயத்தமானேன்
பிறகுதான் உண்மை தெரிந்தது தற்போது
அவள் கேட்டது பொம்மை அல்ல
கடையில் வேலை செய்யும் பெண் என்று
தன்னால் வாரிசு கொடுக்க முடியாது என்பதால்
எனக்கு தேடினாள் இரண்டாவது மனைவியை
பெண்மையும் ஜெயிக்கும் ஆண்மையிடத்தில் அவள் அவனை ஸ்பரிசிப்பதால்
ஆண்மையும் ஜெயிக்கும் பெண்மையிடத்தில் அவன் அவளை ரசிப்பதால்