Monday, December 27, 2021

கோலம் by Veena Shankar

 


 மார்கழியில் வண்ண கோலமிடும் பெண்டியரும் சிறுமியரையும் காணாது தவிக்கிறேனே 

அரிசிமாவினை கலந்து என் மேல் இவர்கள் இடும் கோலமும் அதனை உண்ண வரும் எறும்புகளையும் காணாது தவிக்கிறேனே

வாசற்படியின் ஏக்கம்

 புள்ளிகளின் கோர்வையே கோலம். புள்ளிகளினூடே வளைந்து செல்லும் கம்பியே நம் வாழ்க்கையும் நம் திறமையும்

ஓரிழை கோலம் சொல்லும் கவிதை

ஈரிழை கோலம் சொல்லும் காவியம் காவிப் பொடியை தரித்திருப்பதால்


கோலம் 


மார்கழி மாதத்தின் முந்தைய நாள் 

பயிற்சி ஆரம்பம் அடுத்தநாள் கோலத்திற்கு 

புத்தகத்தைப் பார்த்து தரையிலும் கரும்பலகையிலும் 


விடியும் முன் சாணி தெளித்து விமான ஓடுதளம் 

போல் வாசலை பளபளப்பாக்கி மெல்ல மெல்ல 

நான் பழகிய கம்பி கோலத்தால் நடனம் ஆடியது என் 

கைவிரல்கள் - இதழ்களை பிரித்து வண்ணங்கள் 

தீட்டினேன் பூ கோலத்தில் - முத்தமிட வைத்தது  


நடுவில் நேர்த்தியாக வைக்கப்பட்ட சாணியும் 

அதன் மேல் பள்ளி கொண்டிருக்கும் பூசணிப் பூவும் 


அழகாக இருக்கிறது என்று அடுத்தவர் கூறாமல் 

இருந்தாலும் நமக்கே நாம் போட்ட கோலம் அழகு தான்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...