Thursday, December 30, 2021

தினம் ஒரு சிந்தனை by Veena Shankar

 


[19/11, 11:06]

 இன்றைய துளி


கண்ணுக்கு தெரியாதவன் பரமன்

காசு பார்க்க தெரியாதவன் பாமரன்

[25/11, 10:53]

 காணாதவன் குருடன் காண்பதை காணாமல் செய்பவன் திருடன்

[27/11, 16:43] 

பிரசவித்து பார் பெண்மையின் இன்பமும் துன்பமும் புரியும்

எறும்பாய் மாறி பார் அதன் முயற்சியும் சுறுசுறுப்பும் புரியும்

புழுவாய் இருந்து பார் அதன் துடிப்பும் வாழ்வும் புரியும்

அடுத்தவர் சோகத்தில் பங்கெடுத்து பார் உண்மையும் வலியும் புரியும்

நீரில் மிதந்து பார் மனது இலகுவாவதும் குளிர்ச்சியாவதும் புரியும்

[27/11, 16:44] 

 சிறு உயிரினம் கொசுவிடம் நம் வீரத்தை காட்ட நம்மை நாம் காயப்படுத்திக் கொள்வதென்பது சிறு துயரத்திற்கும் நம்மை நாம் தேற்றிக்கொள்ளாமல் மனத்தால். மேலும் மேலும் துயரபடுவதற்கு சமம்

[29/11, 22:29]

 பல இளைஞர்களின் கனவுகளையும் கற்பனைகளையும் கஷ்டங்களையும் காட்சிகளாய் கண்ட யுத்த களம் மொட்டைமாடி

[12/12, 05:38]

  இன்றைய சிந்தனை


முயற்சி உழைப்பின் மூலதனம்

உழைப்பு முயற்சியின் வெற்றி

[13/12, 16:26]

  பெண்மையும் ஜெயிக்கும் ஆண்மையிடத்தில் அவள் அவனை ஸ்பரிசிப்பதால்

ஆண்மையும் ஜெயிக்கும் பெண்மையிடத்தில் அவன் அவளை ரசிப்பதால்

[14/12, 07:41]

  மலராய் இருந்தால் கொய்துவிடுவேன் உன்னை

மண்ணாய் இருந்தால் மிதித்துவிடுவேன் உன்னை

அராசனாய் இருந்தால் வென்று விடுவேன் உன்னை

மலையாய் இருந்தால் சிதற விடுவேன் உன்னை

ஆனால் நீ என் இதயமாய் இருப்பதால் மனதினுள் இருத்தி விடுவேன் உன்னை

[14/12, 07:43]

  பொறாமை கொண்டேன் உன்னை கண்டு

உன் குணத்தால், அறிவால், அழாகால் அல்ல. நீ நீயாக இருப்பதால்

எந்த தருணத்தி்லும்

[15/12, 13:55]

 வாருங்கள்

பெண்களை மாற்றும் ஆண் இனமே 

மென்மையாகவும் மாறிப் பாருங்கள் 

உங்கள் இடத்திலும் ஒளிந்துள்ளது 

பெண்மை அதுவும் மென்மையாய்

[18/12, 07:37]

 நெற்றி பொட்டு

வண்ண வண்ணமாய் வித விதமாய் நீ உருமாறினாலும் என் நெற்றியல்லாது மற்ற இடங்களில் சட்டென்று ஒட்டிகொள்கிறாயே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...