Friday, September 3, 2021

இந்த வாரத்தலைப்பு "தனிமை"

 



 தனிமை 


தனிமை என்றும் தனித்துவமானது


நமக்கு நாமே தரும் தனிமை இனிமை 

பிறர் நமக்கு கொடுக்கும்

தனிமை கொடுமை!!


பல உறவுகளால் தரமுடியாத

ஆறுதலையும் நிம்மதியையும்

சில நேரத்தில் 

தந்துவிடும் அருமருந்து

தனிமை!!!


பலருக்கு மிகவும்

பிடிக்க காரணம் அங்கு

நம்மை காயப்படுத்த

யாவரும் இருப்பதில்லை!!!

                             - ஜெயா


பொறுப்பினால் வரும் தனிமை சிந்தித்து செயல்படுவதற்காக

பூரிப்பினால் வேண்டும் தனிமை நினைத்து மகிழ்வதற்காக

விருப்பத்தால் தேடும் தனிமை புத்துணர்ச்சி பெறுவதற்காக

வெறுப்பினால் நாடும் தனிமை தன்னை ஆசுவாசப்படுத்துவதற்காக

கல்வியால் அடையும் தனிமை புதிய கண்டுபிடிப்பிற்காக

செல்வ வளத்தில் பிறக்கும் தனிமை தன் இன்பத்திற்காக

கருவறையில் கிடைக்கும் தனிமை வெளியுலக பிறப்பிற்காக

சிறையறையில் அனுபவிக்கும் தனிமை தன் தவறுக்காக

துக்கத்தால் காணும் தனிமை நடந்ததை மறப்பதற்காக

தூக்கத்தால் ஏற்படும் தனிமை எதிர்கால வளத்திற்காக

கொண்டவனோடு கொள்ளும் தனிமை புது வரவிற்காக

நேரத்தால் கிடைக்காது தனிமை நீ நினைக்காத வரை

தனிமை வேண்டும் இனிமைக்காக மட்டுமல்ல தன்னை ஆராய்ந்து பெறும் வெற்றிக்காகவும் தான்.

                                  - Veena Shankar 


தனிமையின் இனிமையிலே

பிறக்கும் புதுமை


காதலில் தனிமை இனிக்கும்

திருமணத்திற்கு பிறகு தனிமை சுடும்...

வீட்டில் பலர் இருக்கும்போது தேடும் தனிமை..

பிள்ளைகள் இல்லாத வீட்டில் தனிமை சுடும்..

மீனுக்கு நீரை வெற்றிபெற தனிமை தேவை..

குழப்பத்தில் நம்மை நாம் வெல்ல தனிமை ஓர் ஆயுதம்...

ஓர் அறையில் சென்று யாரும் இல்லா இடத்தில் தேடுவது தனிமையோ ???முன்பின் அறியாத கூட்டத்தில் நாம் உணர்வுமே அந்தத் தனிமையே கொடுமை..

இளமையில் நாம் இழந்த தனிமைக்கு முதுமை நம் உறங்கா மனதிற்கு தனிமையை தந்து பரிசளிக்க காத்திருக்கும்...

ஆம் கடந்து வந்த பாதைகளை ரசிக்கவும் விட்டதை தொடரவும் தனிமை ஒரு மாமருந்து...


மேக கூட்டங்கள் மிதந்து வர  

அலைகள் ஒன்றை ஒன்றை மோத 

மீன்கள் கூட்ட கூட்டமாய் இரை தேட 

கொட்டும் அருவி நீர் பாறைகளை தழுவி சிதறி நழுவி ஓட                  

காற்று வந்து மூங்கிலில் புகுந்து புல்லாங்குழலை போல் ஊத 

காக்கா கா கா வென்றுகரைந்து அதன் கூட்டத்தை கூட்ட 

யானைகள் கூட்டம் கூட்டமாய் உலாவி வர                                                                

மயில் ஒய்யாரமாக ஆட 

குயில் கூவ                                   

சூரியனும் சந்திரனும் மாறி மாறி வந்து காட்சி தர                       

குழந்தைகள் மழைசாரலில் நனைந்து துள்ள                                                    

நசுங்கும் திருவிழா கூட்டத்திலும் 

தாய் வீட்டில் அனைத்தும் நிரம்பிக்கிடக்க..                       

மனம்மட்டும் சொல்வும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்க ..             

ஓ இதற்கு பெயர்தான் காவியத்தில் வரும் தலைவனை பிரிந்த தனிமையோ??? 

                                       - Vidhya Nivash 

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...