Tuesday, September 21, 2021

மனதில் பதிந்தவை by Vidhya Nivash

 


மனதில் பதிந்தவை

முகநூலில் ஒருவருடைய பதிவை பார்த்து தான் இதை எழுதத் தோன்றியது. எங்களுடைய பெரிய பழைய வீட்டை ஐந்து பாகமாகப் பிரித்து அவர் அவர் விருப்பம்போல் அதை கட்டிக் கொண்டோம். நான்கு பெரியப்பாக்கள்,எங்களுக்கு வந்த பகுதில் சில இடங்கள் புதிதாக கட்டியது. அதனால் முன் பகுதியை மட்டும் இடித்துவிட்டு அஸ்திவாரம் போட்டு கட்டினோம். வீட்டைக் கட்டிக் கொடுத்தது என் தாய்வழி மாமா இன்னொரு முறைப்படி எனக்கு அக்கா வீட்டுக்காரர் கூட இப்போதெல்லாம் எளிதாக ஹவுசிங் லோன் போட்டு கட்டி விடுகிறார்கள். அப்பொழுது என் தாய் தந்தையுடைய சேமிப்பில்,சாமர்த்தியத்தால் கட்டினார்கள் என்று சொல்லலாம். ஒவ்வொரு செங்கலும் ஏறும் பொழுது நாங்கள் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை.ஆறு மாதங்கள் கட்டியிருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். என்னுடைய அம்மாவும் அப்பாவும் தூங்காமல் எந்நேரமும் அதே சிந்தனையில் இருந்ததை நான் இன்றும் எண்ணிப் பார்க்கிறேன் .பணம் பெரிய பிரச்சனை அல்ல எதிர்பார்க்காமல் வந்த சில சவால்களையும் அதையும் மன தைரியத்துல வென்றார்கள் என்றால் அது இன்றும் எங்களுக்கு ஒரு பெரிய வெற்றிதான். நான் இன்று இவ்வளவு சுகமாக இதை நான் உங்களிடம் ஒரு நினைவாக எழுதுகிறேன் என்றாலும் அதற்கு காரணமும் அவர்களே.


என்ன சொல்ல வந்தேனோ அதற்கு வருவோம். மாமாக்கு கீழ் வேலை பார்த்தவர் நல்லு எனும் ஒரு மேஸ்திரி.அவருடைய குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அதில் அந்த கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் மாமன் மச்சான் தங்கை அக்கா அண்ணன் என்று மொத்த குடும்பமே வேலைக்கு வருவார்கள் .தினமும் காலை 10 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். அவர்கள் வரும் அழகைப் பார்க்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் பிறக்கும் .அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அவர்கள் பார்க்கப் போவதோ பளுதூக்கும் வேலை. ஆனால் அவர்கள் காலையில் வரும் அழகு ஆபிஸ்க்கு செல்வதுபோல் நீட்டாக வருவாங்க.அது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அந்த உடையை கழட்டி விட்டு இதற்காக என்று வைத்திருக்கும் அதாவது சட்டையோ ஏதாவது ஒரு துணியை மேலே தலையில் கட்டிக்கொண்டு அவர்கள் வேலையில் இறங்குவார்கள். கொத்தனார் அதிகமாக பேச மாட்டார் அறிவுத் திறமை அதிகமாக இருக்கும் குறைவாக வேலை செய்தாலும் புத்தி கூர்மையாக இருப்பார் .அவருக்கு உதவியாக இருக்கும் சித்தாள் நிறைய பேசுவாங்க அவர்களுக்கு கீழாக இருப்பவர்கள் அதுமட்டுமில்லாமல் மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள் .அவர்கள் பேசிக்கொள்வதை பார்க்கும் பொழுது நமக்கே சில நேரம் பொறாமையாக இருக்கும் .அன்றாட வேலை முடிந்தாலும் வாரக்கடைசியில் கூலி ஆனால் அத்தனை சந்தோஷத்தை அவங்க மனசுல நம்ம பார்க்க முடியும் . ஒன்றரை வருடம் எங்க வீட்ல வேலை பண்ணி இருப்பாங்க அதுமட்டுமில்லாம அடுத்தடுத்து பெரியப்பா வீட்டிலும் அவங்களே தான் வேலை பண்ணாங்க . அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நாட்கள் மிக மிகக் குறைந்த நாட்களே என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் வேலைக்கு வருவார்கள் அவர்கள் வந்தவுடன் அங்கே அந்த இடமே ஒரே களைகட்டி விடும். சென்ட்ரிங் அடுத்து சீலிங் போடுறது அவங்களுக்கு கல்யாணம் மாதிரி . வேலை கம்மி பிரியாணியும் கிடைக்கும் . அதனால ரொம்ப சந்தோஷமா வருவாங்க .மதியம் சாப்பிட்டுட்டு அவங்களுக்கு ஒரு மணி நேரம் ஒன்றரை மணி நேரம் ஓய்வெடுக்கும் நேரம் கிடைக்கும். அந்த நேரத்தில் பார்த்தீங்கன்னா அக்கா ஊறுகாய் வச்சிருக்கீங்களா வந்து கேப்பாங்க அம்மாவும் வீட்டில் சமைக்கும் காய்கறிகளில் கொஞ்சம் அவர்களுக்கு கொடுப்பார்கள் .சிலநேரம் அவர்களுக்காகவே சமைத்து கொடுப்பதும் உண்டு .அப்ப டிவில பழைய படம் தான் போடுவாங்க . அந்த ஒரு மணி நேரத்திலேயே டிவியில் ஓடுகிற சினிமா பாத்து ரசிச்சு சந்தோஷமாக கொஞ்ச நேரம் பேசிட்டு சிலபேர் தான் படுத்து தூங்கு வாங்க முக்காவாசி பேரு ஜாலியா இந்த டிவி பாத்துட்டு பேசிட்டு போவாங்க .அதை என்னால மறக்கவே முடியாது .

உண்மையிலேயே அவங்களப் பாக்கறப்ப நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் .ரொம்ப நாள் எங்க கூட பழகுன மாதிரியே இருக்கும். குடும்பத்தில் ஒருதர் மாதிரி ஆயிடுவாங்க .அந்த மாதிரி வீடு முடிச்சு கிரகப்பிரவேசம் பண்றப்ப அக்கா உரிமையோட துணி கேட்பாங்க எனக்கு இது வாங்கிக் கொடுக்க அதை வாங்கி கொடுங்க என.கிரகப்பிரவேசம் விருந்து பயங்கரமா இருக்கணும் அப்படி தான் பேசுவாங்க .


ஒருத்தரோட பதிவின் மூலமாக இதை நான் எழுதுவதற்கு எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சது. புதுமனை கட்டின சிமின்ட் மண்ணோட ஓட வாசனை தண்ணீர் ஊற்றிய நினைவு இன்னும் மனசுல அப்படியே வந்துட்டு போகுது.செங்கலும் மண்ணும் மட்டும்தானா நம் உணர்வுகளோடு சேர்ந்து கட்டப்பட்ட வீடு அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள , தாய் தந்தையருடன் சொத்து மட்டுமல்ல அவங்க நமக்காக சேர்த்து வச்ச உணர்வுகளும் கூட ..அடுத்த தலைமுறைக்கு ???

3 comments:

  1. அருமையான இருக்கு. நாமும் இப்போதே விதைப்போம் நம் பிள்ளைகளின் மனதில்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...