Thursday, January 20, 2022

மனத்தில் பட்டது by Vidhya Nivash Nivash



  வேரூன்றி ஆலமரமாக நிற்க எண்ணி விடாமுயற்சி,கடின உழைப்பு,தன்னம்பிக்கை ,தங்களுடைய ஆசைகள் விடுத்து,வறுமையில் கடன் இன்றி,நேர்மையுடன்,கண்டிப்புடன் கூடிய கட்டுப்பாட்டில்,பேதமை பார்க்காமல்,சிக்கனத்தில் ஒரு குறையும் இல்லாமல் வளர்த்தீர்கள்!

கிடைத்ததே போதும் என்று எண்ணி பிறர் முன் நிற்க வேண்டுமென்ற கனவை மறந்து, பின் நின்று !

வளர்ந்த பாதை வடுவாக்கி,வந்த பாதை தடமாக்கி, புதிய பாதை தேடி..

தினமும் கோபம் கொண்டு,கோபத்திற்கு காரணம் இயலாமையோ! இல்லாமை போய் இது என்ன புதிது,என்று எண்ணி,

தன்னிலை மறந்து, பதில் தேடி, தினம் தன்னம்பிக்கை தரும் பிறர் வார்த்தை தேடி,பெற்றோர் சொன்னதை மறந்து...மீண்டும் அதை  திரும்பி பார்க்கும் போது..

வலிகளில் தான் படைப்புகள் பிறக்குமோ,

வறுமை,வருத்தம்,தனிமை,வளர்ந்த சூழ்நிலைகள், மனதை இறுக்கிய நிகழ்ச்சிகள் ...என்று செயல்களில் பிறர் சுட்டிக்காட்டும் போது....

ஆம் ,இவையே நேர்மை,காலம் தவறாமை, மனதிடத்தையும் கொடுத்தது அல்ல 

பல கலைஞனும் இந்த சுமைகளை சுமந்தே படைப்புகளை படைத்து பலரில் தன்னை காண நினைத்தானோ!

 என்றும் தோன்றுகிறது..




5 comments:

  1. கலைஞன் மனதின் பிரதிபலிக்கும் படைப்பு. அருமை வித்யா

    ReplyDelete
  2. நன்றி வீணா,பல நாட்களுக்கு பிறகு நிறைய எழுத தோன்றுகிறது

    ReplyDelete
  3. வலிகளில்தான் படைப்புகள் பிறக்குமோ?உண்மை வீணா ரொம்ப அழகாக இருக்கிறதுடா💖

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...