Tuesday, January 4, 2022

கோலம் by Vidhya Nivash

மகளின் முதல் கோலம்

வெண் புகை போன்ற பனிக் காற்றில் வீட்டின் கதவைத் திறக்கும் போதே எங்கேயோ கேட்கும் கோயிலில் ஒலிக்கும் பாடலின் சத்தம், கூடவே சேர்ந்து விறகு புகையின் வாசம், சரக் சரக் என்ற ஓசையுடன் தூசியை கூட்டி தள்ளி, பன்னீரை தெளிப்பது போல வாலியிலிருந்து தண்ணீரை தெளிக்கும் போது ஒரு ஜில்லென்ற சந்தோஷம் பிறக்கும் மனதில்,வண்ணக் கோலமோ ,வட்ட கோலமோ புள்ளி கோலமோ, புள்ளியில்லா கோலமோ மனதிற்கு பிடித்தாற்போல போட்டுவிட்டு, திரும்பி பார்த்து வரும் பொழுது கிடைக்கும் நிறைவே கோலத்தின் வெற்றி அன்றைய நாளின் தொடக்கம்..

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...