Thursday, January 6, 2022

ஆரம்பம் by Vidhya Nivash

 


ஆரம்பம் விடியலின் ஆரம்பம் சுதந்திரத்திற்காக காத்திருக்கும் விடியலின் ஆரம்பம் பலருக்கும் என்றுமே கையில் எட்டாக்கனி கனவுகளாக கலைந்துபோன ஆரவாரமற்ற ஆரம்பங்கள் இரவினிலே.. 



கனவுகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட வித்துக்கள் எல்லாம் விடாமுயற்சியால் வேரூன்றி படர்ந்து நின்றது ஆலமரமாக...

ஆலமரத்தின் ஆரம்பமாக ஆரம்பித்த விழுதுகளில் நிழல் காய்ந்து கொண்டு எதை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அத்தனை வாய்ப்புகளையும் கையில் வைத்துக்கொண்டு தான் உள்ளோமோ.. 

இன்று இருக்கும் தலைமுறையோ எதை விடுவது எதை தொடுவது என்று தெரியாத அளவிற்கு பல ஆரம்பங்கள் சிதறிக்கிடக்கின்றன எங்கும் அல்லவா.. 

ஆரம்பிக்கும் முன் பல முறை யோசிக்க வேண்டும் ஆனால் ஆரம்பித்ததை தோல்வி எனும் முற்றுப்புள்ளி கொண்டு முடித்து வைக்காமல் முடிவு என்ற வெற்றிக்காக காத்திருக்க வேண்டும் அல்லவா.. 

மனத்திற்கு பிடித்தத்தை ஆரம்பித்து தான் பாருங்களேன் தடையே வராது முடிவே இல்லா இனிமையின் தொடர்ச்சி...

கொடுத்தலின் ஆரம்பம் மகிழ்ச்சியின் ஆரம்பம்..

பல வருடங்களுக்குப் பிறகு குளிர்காலத்தில் தாய்நாட்டிற்கு சென்றேன்..

பசுமையின் ஆரம்பத்தை கண்டேன் !தூய்மையின் ஆரம்பத்தை கண்டேன் !

தாமிரபரணி 


தளதளவென்று தழைத்து நின்ற வாழை மரத்தோப்புகளும் சாலையில் எங்கும் வழிந்தோடும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் பல வருடங்கள் கழித்து விரைந்தோடும் வைகை ஆற்றையும் காணும் போதே இனிமையாக இருந்தது ..

வைகை


பல இடங்களில் இலவச கழிப்பறைக்கு சென்றேன். குறிப்பாக விமான நிலையத்தில் கூட அத்தனை தூய்மையாக இருந்தது தூய்மையின் ஆரம்பம் கண்டு வியந்தேன் . இந்த பசுமை மற்றும் தூய்மையின் ஆரம்பம் என்றும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.







2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...