Tuesday, March 22, 2022

தூக்கம் by Veena Shankar



 தூக்கம்


பசித்தாலும் வாராது தூக்கம் - அதிகம்

புசித்தாலும் வாராது தூக்கம்

அழிற்சியினால் வாராது தூக்கம் - பெரும்

முயற்சி எடுத்தாலும் வாராது தூக்கம்

தனித்து இருந்தாலும் வாராது தூக்கம் - நெஞ்சம் 

கொதித்தாலும் வாராது தூக்கம்

துன்பத்திலும் வாராது தூக்கம் - சில நேரம்

இன்பத்திலும் வாராது தூக்கம்

மெத்தை கொண்டாலும் வாராது தூக்கம் - கடும்

சிரத்தை எடுத்தாலும் வாராது தூக்கம்

சினத்தாலும் வாராது தூக்கம் - கட்டி

அணைத்தாலும் வாராது தூக்கம்

குழப்பங்கள் உதித்தாலும் வாராது தூக்கம் - சிறு

குழந்தையின் சிணுங்களால் வாராது தூக்கம்

தாலாட்டு பாடினாலும் வாராது தூக்கம் - பிறரின் 

பாராட்டு கொண்டாலும் வாராது தூக்கம்

எதிர்பார்த்தாலும் வாராது தூக்கம் - மற்றவர்

மதிக்காததாலும் வாராது தூக்கம்

வயதானாலும் வாராது தூக்கம் - காதல்

வயப்பாட்டாலும் வாராது தூக்கம்

வஞ்சகம் குடிகொண்டாலும் வாராது தூக்கம் - கையினால்

லஞ்சம் வாங்கினாலும் வாராது தூக்கம்

துக்கம் அடைத்தாலும் வாராது தூக்கம் - பிறர்

குறட்டையினாலும் வாராது தூக்கம்

இரவு வந்தாலும் வாராது தூக்கம் - அதிக

பணசெலவு ஆனாலும் வாராது தூக்கம்

எப்போது வரும் தூக்கம்?

இப்போதே என்று சொல்ல முடியாத தூக்கம் வர பிரார்த்திப்போம்.

4 comments:

  1. அருமை வீணா 💐❤️💐

    ReplyDelete
  2. வார்த்தையில் எளிமை.கருத்தில் வலிமை. மொத்தத்தில் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வார்த்தையால் எனக்கு பெருமை. நன்றி.

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...