Thursday, July 29, 2021

இந்த வாரத்தலைப்பு -"காகிதம்"

 



                     

                                      - Kiruthika 

மனதிலுள்ளதை கொட்ட முடியாது தவிக்கிறேன் உன்னிடம், ஏனெனில் நீரில் அழிவாய், மனிதனிடம் சிக்கினால் நான் அழிவேன் நான் சொல்லும் கருத்தால்.

 நீ வெள்ளையாய் இருப்பதால் உன்னை வண்ணம் கொண்டு தீட்டுகிறேன்

நீ இருபுறமும் ஒன்று போல் இருப்பதால் நிறைய நிறைய எழுதுகிறேன், வரைகிறேன்

கவிஞனுக்கு நீ ஒரு கவிதை உன்னை அவன் தீட்டுவதால்

மாணவனுக்கு நீ ஒரு புதையல் அவன் உன்னை கைபற்றுவதால்

சிறுவனுக்கு நீ ஒரு விளையாட்டு பொருள் அவன் உன்னை வைத்து கப்பல் விடுவதால்

இல்லத்தரசிக்கு நீ பொக்கிஷம் உன்னை கொண்டு பணத்தை ஒளித்து வைப்பதால்

அரசாங்கத்திற்கு நீ உரிமையானவன்

உன்னை அச்சிட்டு கொடுப்பதால்

நீயின்றி எழுத்தில்லை, பத்திரிக்கைகள் இல்லை, பத்திரங்கள் இல்லை, கணினி இருந்தாலும் அவசரத்திற்கு உன்னை தீண்டும் கைகளும் உண்டு

வெற்றிக்கும் தோல்விக்கும் சான்று நீ

 வெள்ளை மனசுக்கு சொந்தக்காரர்

பல விசயங்களை ஏந்தும் தபால்காரர்

முட்டி முட்டி எழுதினாலும் எல்லையை அளவிடும் கணக்காளர் கசக்கி பிழிந்து சிந்தனையை துளிர்விக்கும் விந்தையாளர் 

எந்த மை கொண்டு எழுதினாலும் கருத்தை ஏற்கும் பண்பாளர்

எல்லா உலக மொழிகளும் தெரிந்த கல்வியாளர் வடையை மடித்து கொடுத்தாலும் கோபம் கொள்ளா குணத்தாளர்

கிழித்து எரிந்தாலும் கருத்தை பகிரும் மனத்துக்காரர் 

பயன்படுத்தி எடைக்கு போட்டாலும் காசுக்கு விலை போகும் வர்த்தகர்

இனிமேலும் சொல்ல வேண்டுமோ இந்த நெரியாளரை பற்றி?

காகிதமும் கைக்குட்டையானது சில நேரங்களில்

காகிதமும் கரித்துணியானது அடுப்பங்கரையில்

காகிதமும்  தூது வந்தது இதயங்களிலிருந்து

காகிதமும் (பணம்)தவிக்க விட்டது மாதக்கடைசியில்


                          - Veena Shankar 

காதலன் காதலிக்கு.பெற்றோர் மகன்.மகளுக்கு.நண்பர்கள சக நண்பருக்கு.உடன் பிறந்தவர்கள்.கதாசிரியர்கள் இவர்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் வடிகால் நான்.காகிதமாக இருக்கிக்றேன்.

                             - Vedavalli Ramani 










                  - Akhiladevi Kumaran 





          - Vidhya Nivash 

Thursday, July 22, 2021

Weekly One-liners "Symbiotic love "

 


 Lessons from Elephant: 

#1

“Life is beautiful if you forget how big you are and get down to the level of who is in front of you”

 Lessons from Elephant:

#2

“All that is huge is not scary!”

Lessons from Elephant:

#

“Size does matter- yes size of the heart ❤️ !”

                             - Akhiladevi Kumaran 

இந்த வாரத்தலைப்பு -ஆனையும் அரும்பும்



பிஞ்சு கரம் ஸ்பரிசத்தால்..

மதம் பிடிக்க மறந்து..

மென்மை தழுவ ..

மெய் உருகியதாய் மாயை -கொண்டு ..

மெய் சிலிர்த்த - கார்மேக யானை ..!!..

கன்னுக்குட்டியாய் மண்டி இட்டபடி.... சுட்டி பையனோடு..!!!..

                                     - Kiruthika 


 யானையின் தும்பிக்கை பையனின் நம்பிக்கை தன்னை அது ஒன்றும் செய்யாது என்று

வேற்று நிறத்தில் இருப்பதால் யானையை கவர்ந்தானோ இச்சிறுவன்

பைனாகுலரில் கறுப்பு தோற்றம் சூழ்நிலைக்கேற்ப

கண்களை சிறிதா க படைத்து மூக்கை பெரிதாக்கி விட்டேனே இறைவன் - சிறுவனின் நினைப்பு

தூளியில் ஆட நினைக்கிறேன். துயிலாமல் என்னை ஆட்டி விடு. நம்பிக்கை கொள்ள தும்பிக்கையை சரி பார்க்கிறேன்.

 உன் பற்களுக்கு (தந்தம்) எங்கே கிளிப் மாட்டுவது? இன்னும் நீண்டு கொண்டே போனால்...

மரம் இழுக்கும் உன் தும்பிக்கையையும் 

தரம் நிறைந்த உன் தந்தமும் சிரத்தை பதம் பார்க்கும் உன் கால்களும்

உயரம் குறைந்த உன் வாலும்

தேகத்திற்கு எதிரான உன் கண்களும்

ஊர்வலத்திற்கு ஏற்ற உன் உடலும்

இசையோடு ஒன்றி போகும் உன் நடையும்

உன்னை வளர்த்த சிறுவனின் பாசமும் 

பாசத்திற்கு அடி பணிந்த நீயும்

பச்சைபசேல் என்றுருக்கும் காட்டை கருமேகத்தால் மறைத்ததும்    

மீண்டும் கிடைக்குமா?

இதில் மீண்டு வர முடியாத தவிப்பில் நான்

கார்மேகக் கூட்டம் தயாராகிவிட்டது மழை பொழிய, விரைவாக ஏறிக் கொள், உன்னை என் நடையினால் வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்கிறேன்.

 ஃபோட்டோ காமிரா என்று தவறுதலாக நினைத்து புகைப்படம் எடுக்கிறானோ இச்சிறுவன்.

தாய் பாசம் என்பது குழந்தைகள் செய்யும் சேட்டகளை பொறுத்து கொள்ளும் உள்ளம். மண்டியிட்டு ரசிக்கிறது தாயுள்ளம்

                                   - Veena Shankar 


கரும்பும், அரும்பும்- கலந்துரையாடல்💗

மண்டியிட்டால் மட்டமே முத்தம் தருவேன் என்றது மழலை; மறுகணம் ஆனை ஐயா சரண்💖

ஆனைக்கும் அடி சறுக்கும்… மனம் உருகும்…கள்ளங்கபடமில்லா மனம் முன்💗

சின்னஞ்சிறு சிறுவன் கொஞ்சினான்… “என் செல்லக் குட்ட்ட்டி(🤪)…” பிரம்மாண்ட உருவம் கொண்ட யானையிடம்🤓

                                       - Akhiladevi Kumaran 

இது வழியா பார்த்தா யானையோட மூளை தெரியுமா? 🤔🤔

                                       - Divya 

குழந்தையின் விளையாட்டுதனத்தை ரசிக்கும் பெரிய குழந்தை-அழகு

உள்ளத்தை கவரும் அன்பின் வெளிப்பாடு ரம்மியமான சூழலுக்கேற்ப

முதல்ல நீ

பின்பு நான்

என்பதை போல 

பவ்யமாக மண்டியிட்டு 

சிரிக்கும் ஆனையார்

அரும்பின் ஆணைக்கு

அடிபணிந்த ஆனையார்🤩

                                    - Vidhya Nivash 

Saturday, July 17, 2021

வா!வா! by Veena Shankar


வா! வா! 



வகை வகையாய் எழுதி வாகை சூட வா

சில சில படைப்புகளை சிலாகித்து சொல்ல வா

கல கலவென பேசி காலனை வெல்ல வா

பல பல கருத்து கொண்டு பலா போல் இனிக்க வா

வள வளவென இல்லாமல் வாள் போல் பகிர வா

வலி மறந்து போக வழியுண்டு இங்கே

வெளியுலகம் கற்றுக் கொள்ள வேலியுடைத்து வா வா

 

Thursday, July 15, 2021

இந்த வாரத்தலைப்பு "சாலையை கடக்கும் வாண்டுகள்"

 


 வேகமான உலகத்தை சில நிமிடங்கள் மெய்மறக்க செய்த மழலையர் ஊர்வலம்.🥳

                                 - Jayanthi 

வெவ்வேறு கூட்டுக்களில் பிறந்தும்..

வேற்றுமை பாராது-

ஒரே கோட்டில் .. பயணிக்கும் தேனீக்கள்... 

நட்பு எனும் தித்திப்போடு..!!..

                                  - Kiruthika 

ஒற்றுமையும் ஒழுக்கமும் ஒரே கோட்டில் சீராக செல்ல காத்திருத்தல் அவசியம்!

                                  - Sowmya 

 ஒற்றுமையின் உதாரணம் பாலகர்கள்.எது செய்தாலும் பலர் கூடி செய்தால் வெற்றி உறுதி. ‌பொருமையின் உதாரணம் வாகனங்கள்.ஹைவே என்றாலும் அடித்து பிடித்து ஓடாமல் பாலகர்கள் கடக்கும் வரை பொருமையுடன் காத்து நிற்கும் வாகன ஓட்டுனர்கள் பொருமைதான்.

                                 - Vedavalli Ramani 


சிக்கு புக்கு ரயிலே!! கொஞ்சம் நில்லு… சீக்கிரம் வருகிறோம்… போலீஸ் மாமா உதவியுடன் 😍😎


சாமி(கள்) தரிசனம் காரில் இருந்தபடியே… உபயம்: போக்குவரத்து காவல்துறை🤓🙏


(ஆம்… குழந்தையும் தெய்வமும் ஒன்று தானே🙌)

On a lighter note😅

ஒரே கூட்டின் தேனீக்களாக கூட இருக்குமோ??!! 🤔 🤔 


பின்குறிப்பு😆:

கோவிட் சமயத்தில் எதுவும் சாத்தியம்😜😂🤣

                               - Akhiladevi Kumaran 


வண்டி, வாண்டுகளின் சங்கமம்

 எத்தனை கோடி இருந்தாலும் இந்த வெள்ளை கோடுக்கு தனி மரியாதை

 என்ன ஒரு ஒற்றுமை குழந்தைகளின் உடையும் கார்களின் நிறமும்

கார்களுக்கு நடுவே பிஞ்சுக் கால்கள்

 மழலை கூட்டத்தின் பவனி வண்டிகளுக்கு அறிவுரை நில் கவனி

டிஜிட்டல் மயமான உலகத்தில் சிக்னலில் பவர் கட் வந்ததால் வண்டியை நிறுத்தும் மழலையரின் இந்த காட்சி

பூக்களின் வரவு வண்டிக்காகவா? வண்டுக்காகவா?

 வெள்ளைக் கோட்டில் பிள்ளை கூட்டம்

எறும்பின் வழியில் அரும்புகள்

 கண் சிமிட்டும் நேரத்தில் ஓடிவிட நாங்கள் தயார். ஆனால் சாலை விதிக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள்

மழலைகளுக்காக நின்ற வாகனங்கள் வெளிநாட்டில், அரசியல்வாதிகளுக்காக நிற்கும் வாகனங்கள் நம் நாட்டில்

பட்டமளிப்பு விழாவிற்கு விரையும் பட்டாம்பூச்சிகள்

பரிதவிக்கவிட்ட பெற்றோரால் பிணைந்திட்ட கைகள்

வேகமான உலகில் விவேகமான மணித்துளிகள் மனிதன் இளைப்பாற

தடைகள் உள்ள வாழ்க்கையில் தடம் மாறாமலிருக்க ஒரு சில மணித்துளிகள் தேவை இந்த பிஞ்சுக்களின் பயணங்கள்

                                 - Veena Shankar 

ஒன்றா இரண்டா எல்லா காரையும் வாங்கபோறேன் ராகுல்,

நான் ட்ராபிக் போலீஸ் ஆகி உன்னை கட்டுபடுத்துவேன்... 

நான் இந்த ரோட்டையே வாங்க போறேன் மழலையர் ஒரு பக்கம்😄

மறுபக்கம்

என்னையும் உங்களுடன் சேர்த்துக்கிறீங்களா??? இவங்கள கட்டுப்படுத்த முடியல...

இந்த வேலை,காரை விட்டுச்சென்று குழந்தையாக மாறினால் எப்படியிருக்கும்..

கைபேசியில் ஒருவர் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்துட்டாங்களா..

டேய் நண்பா உன்னையும் என்னையும் மாதிரி இரண்டு பசங்க ரீல் விட்டு போறாங்க..😄

சாலையை கடக்கும் குழந்தைகள் சொல்லாமல் சொல்லி செல்வது - பிடித்துக்கொள் 🤝 பிடித்ததை இறுக்கமாக பிடி.

                                   - Vidhya Nivash 

Weekly One-liners- Jingle bees

 

Lessons to the big bosses inside- from the discipline of the little champs outside!!!

Much needed “Traffic Jam” to keep calm.. stay patient🤓

                 - Akhiladevi Kumaran 

(பு ) (மு )துமை by Veena Shankar

 


(பு ) (மு )துமை

காட்சி இருந்தும் கண்களில் கருமை

பூரிப்பில் திளைத்தாலும் முகத்தில் வெறுமை

 கைப்பற்றிக் கொண்டாலும் நடையில் சிறுமை

பேச நா இருந்தும் வார்த்தையில் வறுமை

குடும்பங்கள் இருந்தும் 

தேடுவது தனிமை

தவிக்கவிட்டாலும் மற்றவரிடத்தில் பிள்ளைகளின் பெருமை 

இதுவே நாம் காணும் புதுமை முதுமையில்

Wednesday, July 14, 2021

பார்த்ததில் பிடித்தது "Thappad" by Vidhya Nivash



"Thappad "கடந்த வருடம் வந்த ஒரு ஹிந்தி திரைப்படம். பெண்ணுக்கான திரைப்படம் மட்டுமல்ல, ஒரு குடும்பத்திற்கான படம். ரொம்ப அருமையா எடுத்திருக்காங்க. இந்த படத்தில் எப்படி ஒரு பெண் வளர்க்கப்படுகிறாள் ,திருமணம் ஆனவுடன் எப்படி தன்னையே மறந்து குடும்பமே தானாக மாறுகிறாள் என்பதை அழகாக எடுத்திருக்காங்க. நிறைய பேர் பார்த்திருப்பீங்க ,இல்லனா இத பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க .


படத்துல தன்னுடைய மகள் என்ன தவறு செய்தாலும் மன்னிச்சுக்கோங்க அப்படின்னு ஒரு அப்பா கேக்குறாரு புதிதாக திருமணமாகிய மருமகனிடம்,கண்டிப்பாக எல்லா அப்பாவும் சொல்றதுதான் மாப்பிள ஆபீஸ்ல இருந்து கோபமா வந்தாலும் நீதான் பாத்து பொறுமையா நடந்துக்கணும் அப்படின்னு சொல்ற அன்பான அட்வைஸ்.


ஆம் ,இன்றும் பெண்ணுக்கு எல்லா சுதந்திரத்தையும் கொடுக்கும் அப்பாவும் பொம்பள பிள்ளை இப்படி பேசலாமா ?இப்படி கத்தலாமா ?இப்படிச் இருக்கலாமா ?என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.கண்டிப்பாக ஆண் பிள்ளைகளும் அழுக கூடாது, குடும்பப் பொறுப்பை பார்த்துக்கொள்ளனும் என பல இருக்கிறது.


பிறந்த வீட்டில் கிடைக்கிற மகிழ்ச்சி ,மரியாதை இது ரெண்டு மட்டும் தான் தன்னுடைய பெரிய சொத்து அந்த இரண்டும் திருமணமானவுடன் என்ன ஆகிறது.அதற்கு தான் போராடுகிறாள் கதாநாயகி.


கண்டிப்பா இப்ப இருக்கும் இல்லத்தரசிகள் அனைவரும் பல பட்டப் படிப்புகள் படித்தவர்கள் தான் ஆனால் அவர்களுக்கு ஆணிவேராக சொல்லிக் கொடுக்கப்படுவது என்ன ?

அவர்களுடைய கனவுகள் எங்கே செல்கிறது.அதற்கு வயது தடையில்லையே...


இரண்டாவது விஷயம் உணவு பற்றி சொல்லி இருப்பாங்க இந்த படத்துல , முதலில் ரொட்டி சுடக்கத்துக்கோ பின்பு கார் ஓட்ட கத்துக்கலாம். ஆம் இன்றும் நாம் சாலையில் செல்லும் பொழுது முன்னே செல்லும் வாகனத்தை ஓட்டுவதை வைத்தே பெண் என்று சொல்லி கேலி செய்வதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.


சில நாட்கள் சில தவறுகள் நடப்பது இயற்கையே .தினமும் ஒரே மாதிரியாக சமைப்பதற்கு இயந்திரம் அல்ல. நன்றாக தானே சமைப்பாள் ஏன் இப்படி இருக்கிறது என்று அவளுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தால் சண்டை இல்லயே??


தன்னுடைய வாழ்க்கையை ஒப்படைக்கும் பெண்ணை அடிக்கும் உரிமை மட்டும் எங்கிருந்து வந்தது . இன்னும் இந்த கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது பலரின் வாழ்க்கையில்... ஆம் இதில் படித்தவர் என்றும் படிக்காதவர் என்றும் விதிவிலக்கில்லை.


ஆம் இயற்கையாகவே பெண் பொறுமைசாலி தான் அதனால்தான் குடும்பம் எனும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவளுடைய உணர்வுகள் என்று வரும்பொழுது ????அம்மா, பாட்டி, மாமியார், நாத்தனார் அனைவரும் இதில் அடங்குவர்.


இதே போன்ற ஒரு கருத்தை தான் "கிரேட் இந்தியன் கிச்சன்" என்ற மலையாளம் திரைப்படமும் சொல்லியது..

இதற்கு விடை தான் என்ன???

நாளைய சமூகத்தை உருவாக்கும் பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது .பெண் குழந்தைகளை சொல்லி வளர்ப்பது போல் ,நாம் ஆண் குழந்தைகளையும் கண்டிப்பாக சொல்லி வளர்த்தால் தவிர இந்த நிலை மாறாது.

Thursday, July 8, 2021

இந்த வாரத் தலைப்பு -"மிதக்கும் சிறுமி"

 



மலர் மேல் பனித்துளி தவழ்ந்தது அன்று . 
அடடா! பனித்துளிக்குள் மலரொன்று தவழ்கிறதே இன்று......
                                - Ramalakshmi



உடைந்திடாத நீர் துழி தான் உண்டோ..?
எம் கனவுகளை சுமந்து செல்ல..

 வலி மறந்து -
விழி திறந்து -
வான் பறவைகள் 
கைக் கோர்த்து.. 
வட்டமிட்டு பறக்கும் ஆசை தான் கை கூடுமோ.. ??!!..
இல்லை ..

மீன் வியக்க..
மனம் இனிக்க ..
மிதந்து மிதந்து தான் பயணம் என வாய்த்திடுமோ..
- Kiruthika 




கப்பலில்.படகில் பயணம் இல்லை.அழகான நீர்க்குமிழியில் அமைதியான கடலில் பயணம் செய்யும் சிறுமி நான்.
    - Vedavalli Ramani
 

 ஹே!!!வந்தாச்சு…!! 
குட்டி பூமி அனைவருக்கும்… 
நான் மாறிட்டேன்.. அப்ப நீங்க??

 குட்டி புள்ள கையில் வட்டபுள்ள ⭕️ 😍

ஓடுகிறேன்… தேடுகிறேன்… நாடுகிறேன்..தடுப்பூசி இல்லா இயற்கை அன்னையின் பிரதேசம்.. கிடைக்குமா???

பிடித்து விட்டேன்.. வெண்ணிலவை! வாருங்கள் விண்மீன்களே… கதவை திறக்கிறேன்😊
- Akhiladevi Kumaran



 குமிழியை உடைத்து நீந்தி வா சிறுமியே! 

- Sowmya Kumar

 

காற்று குமிழியோ நீர் பந்தோ, என் ஆனந்தம் உடைவதில்லை - சிறுமி

போக்குவரத்து இல்லாத இந்நேரத்தில் என்னை என் ஊருக்கு செல்ல உதவிடுவாய் நீர்க்குமிழியே

 தத்தி செல்லும் மழலையல்ல 

தாவி செல்லும் பறவையல்ல தடைபடாமல் செல்லும் வாழ்க்கையல்ல நான் - நீர்குமிழி

 நீர் குமிழிக்குள்ளும் அடைந்து கிடைக்காமல் வெளி வர துடிக்கும் சிறுமியின் எண்ணம் கலைஞனின் கை வண்ணம்

 கூண்டில் அடைபட கிள்ளையல்ல நான் கூண்டை தகர்க்க நினைக்கும் பெண் பிள்ளை

பாதையை கடக்கும் எண்ணம் வந்து விட்டால் பாறையை உடைக்கும் எண்ணம் வரும்

 எனக்கே எனக்கு உருவாக்கப்பட்ட வெண்மை நிறக் கப்பல், ஒருபோதும் கவிழாது

 கோவிட் பாதுகாப்பு வளையம்😉

வளியின் வழியில் வலியில்லா பயணம்

விழி விளிக்கிறது விளையாட

மன பாரமில்லா இருவர் பயணம் மணக்கிறது, மிதக்கிறது

ஓட்டுநர் இல்லா அமைதி பயணம், நடத்துநர் இல்லா ஆசை பயணம்

குதிக்காமல் என்னை கரை சேர்ப்பாய் சிறுமியே ! என் வரவுக்கு காத்திருக்கிறது பால் அருந்த வழியில்லா ஒர் மழலை

ஆனந்த நடனம் நீர்க்

கோ (ள)லத்தில் கிடைக்காத ஏக்கம் நம்மில் பலருக்கு

வட்டத்துக்குள் வாட்டமில்லை

வானத்தின் நீலம் நிலத்திலில்லை

வருகைக்கான நேரம் வரையப்படவில்லை

சுட்டெரிக்கும் சூரியனே சுளீரென தீண்டாதே என்னை

வாயுவினால் நிறைந்திருக்கும் என் ஆவி வலுவிழக்கும்

 வழியில்லாத வாழ்க்கையில்லை

கதவை திறந்து செல்கிறேன் வாருங்கள் என்னோடு கதை சொல்லி பாதை காட்டுகிறேன் என்கிறாள் சிறுமி

                               - Veena Shankar 


 தாயின் கருவறையில் விளையாடிய ஞாபகம்

எவ்வளவு நேரம் மிதந்தாலும் சளிபிடிக்காது

 தண்ணீரில் மிதந்தாலும் நனைய ,தொட முடியாது
தண்ணீரோ தொட்டு கொண்டே இருக்கும்..

தண்ணீரில் நடை பழகும் தத்தையோ

அப்படி தான் மெதுவாக நடந்து வா,கரையிலிருந்து தவிக்கும் அம்மா

ஆற்றில் இரண்டு மீன்கள், இது என்ன புது விளையாட்டோ ,நமக்கு தெரியாம போச்சு பாறேன்

 மீன்வலை இல்லாமல் நடந்து வந்து நம்மை பிடிக்க போறாங்க டா

- Vidhya Nivash 

Wednesday, July 7, 2021

தவிப்பு by Veena Shankar



ஏழை கிழவியின் கிளவி

நடை தளர்ந்து

இடை சுருங்கி

குடை ஊன்றும் வயதில்

கூடை சுமக்கிறேன் இந்த கோடையில்

கிடையில் இருக்கும் ஆடு

கடை பக்கம் போகிறது கசாப்பிற்காக

விடை கிடைக்காமல் தவிக்கிறேன் நான்

பீடை ஒழியுமோ?

தேடல் by Veena Shankar

 


காகிதப் பூவில் இயற்கையின் மணம்

காகித தட்டில் வாழையின் குணம்

காட்டுத்தீயில்லா வனம்

நிறம் மாறாத வானம்

ஏழைகளுக்கு

கிடைக்கா பணம்

கலப்படமில்லா பானம்

 உழைப்பை உறிஞ்சா மனம்

எந்நிலையிலும் இழக்கா மானம்

இவையனைத்தையும் தேடுகிறேன் தினம்

மன்னிப்பு by Veena Shankar

மன்னிப்பு


மண் மன்னிக்குமா மனிதனை - தோண்டுவதால்

மண்வெட்டி மன்னிக்குமா உன் மனிதனை - சேதப்படுத்துவதால்

விதை மன்னிக்குமா மனிதனை - தாயிடமிருந்து பிரிப்பதால்

மலர் மன்னிக்குமா மனிதனை - தீண்டுவதால்

காய் மன்னிக்குமா மனிதனை - பறிப்பதால்

கனி மன்னிக்குமா மனிதனை - சுவைக்கு அடிமையானதால்

மரம் மன்னிக்குமா மனிதனை - வெட்டி சாய்ப்பதால்

இலை மன்னிக்குமா மனிதனை - சறுகாவதால்

வேர் மன்னிக்குமா மனிதனை - பூமியிலிருந்து அகற்றுவதால்

Weekly One-liners " Bubble "

 


Bubbly inside a bubble ❤️ 

Play ground with PPE for a pretty girl🌸

Catch me if you can… 🏃🏿‍♂️ 🏃‍♀️ 🏃 

Oh… so you people thought there’s a grandma inside moon making vada??.. no it’s me… princess dancing 💃 🤪

                       - Akhiladevi Kumaran 

Weekly One-liners -"Soloist"

 


Hey you gifted man, 

who hanged you in this precious prison gifting priceless moments?!!


"14 days - travelled 40 different worlds - with my 40 books!! Thanks to this different quarantine from my office!' - Happy words from the guy😂

                  - Akhiladevi Kumaran 

Thursday, July 1, 2021

படத்தை பாருங்க கருத்தை பதிவிடுங்க

 


தூக்கணாங்குருவி கூட்டில் இங்கேயும் குருவியை காணோம்

மனிதன் இயற்கையோடு வாழ்கிறான் என்பதற்கு உதாரணமா இது?

 தொட்டில் குழந்தை இயற்கை அன்னையின் வரவிற்கு

கீழே நீர் (பூமி), மேலே மரம் (வானம்), இடையில் மனிதன் ஆடுகிறான்

குழந்தை துயிலும் தொட்டிலில்லை இது, உடலை பதமாக்கும் தட்டிலில்லம்.(தட்டி+இல்லம்) 

படத்தைப் பார்த்து ஆனந்தபட்டேன், கையில் கைபேசி இல்லையென்று 

அமைதி படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் சொந்தமாக வேண்டும்

 இது குடிலைப் போன்ற ஈபிள் டவர்

  நாட்டில் குருவி கூட்ட,lத்தை அழித்து காட்டில் குருவி கூட்டின் தேவை என்ன? 

இலைப்பாறும் மனம் தேடுது வனம் 

முதலையில்லா ஆற்றில் நான் முதலாளி 

 ஏழைகளுக்கு துணியில் தூளி, பணக்காரனுக்கு பணியே தூளியில்

 தூக்கத்தின் தாக்கத்திலும் புத்தகத்தின் பக்கத்தை புரட்ட மறுப்பதில்லை நாம்

 இதிலுள்ள பஞ்சனையை தவிர்த்து வெறும் கூட்டை கட்டி கொடுத்தாலும் ஒரு கோடிக்கு மேல் தேவைப்படும் நம் நாட்டில் வீடில்லா ஏழைகளுக்கு

ஏசியில் ஒரு இன்குபேட்டர்

தாலாட்ட என் தாயில்லை

 வாலாட்ட என் மகனில்லை

 சீராட்ட என் தாரமில்லை

 பாராட்ட என் மகளில்லை 

ஆக தனிமையில்

 நான் நானாகவில்லை

                                           - Veena Shankar 



இப்படி ஒரு இடத்தில் தூக்கம் தான் வருமோ ?.. இல்லை கவிதை மட்டும் கொட்டுமோ?...

                                           - Kiruthika



பல கோடி மதிப்புள்ள பங்களாவில் பஞ்சு மெத்தையில் படுத்தாலும் கடவுள் படைத்த காற்று ஆகாயம் மரம் குருவிக்கூட்டம் படுக்கும் இடத்தில் படுத்துக்கொண்டே படிக்கும்சுகம் வருமோ வராது.

                                           - Vedavalli Ramani 



பாவம் இந்த ஏழை! TV, cinema, Facebook, instagram, WhatsApp, friends, family என்று எந்த கேளிக்கையும் இல்லை- ஆயினும் ….அனைத்தும் பருகும் ஆனந்தத்துடன் இருக்கிறானே!!! காரணம் சர்வலோக நிவாரணி- புத்தகமோ?! 

மேலே வானம்; ‍ கீழே பூமி; ‍ இடையில் சொர்க்கம்‍ என் கைகளில்!! 

 இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா....!!", பாடியது மரத்தில் குயில்!

                                             -AkhiladeviKumaran


 ஏன் மானிடா ?? தூக்கணாங்குருவி போல் தொங்கி பார்க்க நினைத்தாயோ... 

புத்தக உலகில் மூழ்கி இருப்பவருக்கு சுற்றியிருக்கும் எதுவும் தெரியாது... 

சுற்றி இருக்கும் ரம்மியமான இயற்கை அழகை ரசிக்காமல்... புத்தக உலகில் மூழ்கிக் கிடக்க இங்கே எதற்கு வந்து இப்படி தொங்கிக் கொண்டு இருக்கிறாய்... 

பறவை ஒன்று இவன் யாரடா புது தொல்லை நான் அல்லவா கூடுகட்ட இடம் வாங்கி இருந்தேன். இவன் வந்து தொங்கிய கொண்டிருக்கிறான் இவனை எப்படி காலிசெய்ய செய்வது...

                                                 - Vidhya Nivash



 வீட்டில் கூடு கட்டினேன

                         - கலைத்தார்கள்

காட்டில் கூடு கட்டினேன்

                         -அழித்தார்கள்

தொங்கி கொண்டு இருந்தா என்னை

                          - அகழற்றி விட்டு

நீ மட்டும் அமைதியாக புத்தகம் படிக்கிறாயே

மானிடா இது நியாயமா!!!

                                                  - Valarmathy 



இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...