Wednesday, July 14, 2021

பார்த்ததில் பிடித்தது "Thappad" by Vidhya Nivash



"Thappad "கடந்த வருடம் வந்த ஒரு ஹிந்தி திரைப்படம். பெண்ணுக்கான திரைப்படம் மட்டுமல்ல, ஒரு குடும்பத்திற்கான படம். ரொம்ப அருமையா எடுத்திருக்காங்க. இந்த படத்தில் எப்படி ஒரு பெண் வளர்க்கப்படுகிறாள் ,திருமணம் ஆனவுடன் எப்படி தன்னையே மறந்து குடும்பமே தானாக மாறுகிறாள் என்பதை அழகாக எடுத்திருக்காங்க. நிறைய பேர் பார்த்திருப்பீங்க ,இல்லனா இத பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க .


படத்துல தன்னுடைய மகள் என்ன தவறு செய்தாலும் மன்னிச்சுக்கோங்க அப்படின்னு ஒரு அப்பா கேக்குறாரு புதிதாக திருமணமாகிய மருமகனிடம்,கண்டிப்பாக எல்லா அப்பாவும் சொல்றதுதான் மாப்பிள ஆபீஸ்ல இருந்து கோபமா வந்தாலும் நீதான் பாத்து பொறுமையா நடந்துக்கணும் அப்படின்னு சொல்ற அன்பான அட்வைஸ்.


ஆம் ,இன்றும் பெண்ணுக்கு எல்லா சுதந்திரத்தையும் கொடுக்கும் அப்பாவும் பொம்பள பிள்ளை இப்படி பேசலாமா ?இப்படி கத்தலாமா ?இப்படிச் இருக்கலாமா ?என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.கண்டிப்பாக ஆண் பிள்ளைகளும் அழுக கூடாது, குடும்பப் பொறுப்பை பார்த்துக்கொள்ளனும் என பல இருக்கிறது.


பிறந்த வீட்டில் கிடைக்கிற மகிழ்ச்சி ,மரியாதை இது ரெண்டு மட்டும் தான் தன்னுடைய பெரிய சொத்து அந்த இரண்டும் திருமணமானவுடன் என்ன ஆகிறது.அதற்கு தான் போராடுகிறாள் கதாநாயகி.


கண்டிப்பா இப்ப இருக்கும் இல்லத்தரசிகள் அனைவரும் பல பட்டப் படிப்புகள் படித்தவர்கள் தான் ஆனால் அவர்களுக்கு ஆணிவேராக சொல்லிக் கொடுக்கப்படுவது என்ன ?

அவர்களுடைய கனவுகள் எங்கே செல்கிறது.அதற்கு வயது தடையில்லையே...


இரண்டாவது விஷயம் உணவு பற்றி சொல்லி இருப்பாங்க இந்த படத்துல , முதலில் ரொட்டி சுடக்கத்துக்கோ பின்பு கார் ஓட்ட கத்துக்கலாம். ஆம் இன்றும் நாம் சாலையில் செல்லும் பொழுது முன்னே செல்லும் வாகனத்தை ஓட்டுவதை வைத்தே பெண் என்று சொல்லி கேலி செய்வதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.


சில நாட்கள் சில தவறுகள் நடப்பது இயற்கையே .தினமும் ஒரே மாதிரியாக சமைப்பதற்கு இயந்திரம் அல்ல. நன்றாக தானே சமைப்பாள் ஏன் இப்படி இருக்கிறது என்று அவளுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தால் சண்டை இல்லயே??


தன்னுடைய வாழ்க்கையை ஒப்படைக்கும் பெண்ணை அடிக்கும் உரிமை மட்டும் எங்கிருந்து வந்தது . இன்னும் இந்த கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது பலரின் வாழ்க்கையில்... ஆம் இதில் படித்தவர் என்றும் படிக்காதவர் என்றும் விதிவிலக்கில்லை.


ஆம் இயற்கையாகவே பெண் பொறுமைசாலி தான் அதனால்தான் குடும்பம் எனும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவளுடைய உணர்வுகள் என்று வரும்பொழுது ????அம்மா, பாட்டி, மாமியார், நாத்தனார் அனைவரும் இதில் அடங்குவர்.


இதே போன்ற ஒரு கருத்தை தான் "கிரேட் இந்தியன் கிச்சன்" என்ற மலையாளம் திரைப்படமும் சொல்லியது..

இதற்கு விடை தான் என்ன???

நாளைய சமூகத்தை உருவாக்கும் பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது .பெண் குழந்தைகளை சொல்லி வளர்ப்பது போல் ,நாம் ஆண் குழந்தைகளையும் கண்டிப்பாக சொல்லி வளர்த்தால் தவிர இந்த நிலை மாறாது.

5 comments:

  1. படம் பார்க்கவில்லை. ஆனால் தங்களுடைய விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது. அருமை.

    ReplyDelete
  2. நன்றி வீணா😊

    ReplyDelete
  3. I could feel literally every emotion behind every sentence in your review...superb dear..your thought process and bold steps to share your views!

    ReplyDelete
  4. Thank you Akhila, என்னை ஊக்கப்படுத்தி இங்கே எழுத வைத்ததிற்கு🙏🙏

    ReplyDelete
  5. Vedavalli Ramani:.பார்க்கவிலை.ஆனால் என் கணவர் பெண் வேலைக்கே போகக்கூடாது என்று கொளகையில் நான் பார்த்த வேலையை திருமணமான மறுநாளே விடசொன்னார். ஆனால் எனக்கு வீட்டுவேலையில் பங்கு கொண்டு நிறைய உதவி செய்தார்.அதனால் நான் 3குழந்தைகள் ஆனதும் குடும்ப செலவு குறைக்க பகுதி நேர வேலை பார்த்து அவருக்கு உதவினேன். எங்கள் குழந்தைகள் அப்பா மாதிரி மனைவியின் வேலையில் எல்லாம் பங்கு கொள்கிறார்கள்.அதுபோல் மருமகள்களும் வெளி வேலையில் பங்கு கொள்கிக்றார்கள். இதில் என் கணவருக்கு 10 வயதிலேயே தாய்.தந்தை இருவரும் இறந்து யாரும் சொல்லி தரவில்லை.பலரை பார்த்து தானே வந்தது. சொல்லிதருவது விட உதாரணமாக நடந்தாலே போதும். தாயைப்போல் பெண்.தந்தை போல் மகன்.

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...