Monday, December 28, 2020
Saturday, December 26, 2020
சிந்தனைக்குரிய பகுதி -" இயற்கையின் நிறம்" by Vidhya Nivash
காலையில் உதிக்கும் சூரியனின் மஞ்சள் நிறமும்,
பச்சை நிறபட்டாடை உடுத்திய வயலின் அழகும்,
நமக்கு மேலே எங்கும் பரவி ஓடியிருக்கும் நீல நிற மேகமும்,
கீழே இருக்கும் செந்நிற மண்ணும்,
புகை போல படர்ந்திருக்கும் வெண்ணிற பனிமூட்டமும்,
கார்மேகமும் ,குயிலும் மட்டுமா கருமை நிறம் தங்கம் கூட கருமை தான்..
தண்ணீருக்கு நிறம் இல்லை என்பார்கள் ஆனால் அது தேசத்துக்கு தேசம், மண்ணிற்கு மண் மற்றும் அதில் இருக்கும் ஜீவராசிகளுக்கு ஏற்றார் போல் நீலம், பச்சை, இளஞ்சிவப்பு ,மஞ்சள் ,செம்மண் என பல வண்ண நிற ஆடைகளை அணிய..
வெயிலும், மழையும் கூடும் நேரம் தோன்றும் வானவில்லுக்கும், தோகை விரித்து ஆடும் மயிலுக்கும் ஏழு வண்ண நிறம் யார் கொடுத்ததோ..
வண்டுகள் மொய்க்கும் பல வண்ண மலர்களின் நிறமும் ,கொஞ்சும் கிளியும்,
பார்ப்போரை பரவசம் ஆக்கும் பால்வண்ண வெண்ணிலாவும்..எத்தனை எத்தனை நிறங்கள் அவற்றுடன் தன்னுடைய விஞ்ஞானத்தால் மரபணு மாற்றத்தை கொண்டு வந்தாய் மனிதா..அதன் வினையே இன்று !!!
இந்த இயற்கை அன்னையின் பல வண்ண நிற உயிருள்ள கோலங்கள் கம்பீரமாக இருக்கும்போது ... இந்த பூலோகத்தில் எத்தனை கொடிய கிருமி மரபணு மாற்றம் வந்தாலும்... மனிதா உன்னால் திடம்பட வாழமுடியும் என நம்பிக்கை கொடுக்கிறது!!!
Tuesday, December 22, 2020
Monday, December 21, 2020
சிந்தனைக்குரிய பகுதி -"முகமூடி" by Vidhya Nivash
முகமூடி என்ற உடனே ஞாபகம் வந்தது சிறு வயதில் பார்த்த முகமூடி திரைப்படம் தான்.முகமூடி என்ற தலைப்பிற்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். என்னை சிந்திக்க தூண்டிய அனைத்து தோழிகளுக்கும் நன்றி .
முகமூடிகள் பாதுகாப்புக்காக ,கலாச்சாரத்திற்காக, பண்பாட்டிற்காக ,மகிழ்ச்சிக்காக ,அழகிற்காக என பல வடிவங்களில் வழக்கத்தில் இருந்திருக்கிறது.
ஆனால் இன்று ஏராளமான வடிவமில்லாத முகமூடிகள் பழக்கத்தில் உள்ளது முதலில் இந்த முகமூடியை கழட்டி எறிந்து விட்டாலே மற்ற முகமூடிகள் தேவையே இல்லை.
பயம் என்னும் மாய முகமூடி
அகந்தை என்னும் மமதை முகமூடி
தாபம் என்னும் கோப முகமூடி
புத்திசாலி என்னும் கோமாளி முகமூடி
பொதுநலம் என்னும் சுயநல முகமூடி
என எண்ணிலடங்கா.. நொடிக்கு நொடி ஆளுக்கு ஆள் ஏற்றார் போல் மாறிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவுதான் பூசி மொழுகி அழகான மூடிகளை புற முகத்திற்கு போட்டாலும் அகமாகிய மனமென்னும் முகத்திற்கு எந்த மூடியை போட்டு மூடமுடியும்.
எந்த முகமூடிகளும் 😷 இல்லாமல் இப்பூவுலகில் எங்கும் சென்று சுதந்திரமாக சுவாசிக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏
Sunday, December 20, 2020
சிந்தனைக்குரிய பகுதி "முகமூடி" by Kiruthika
*முகமூடி *
சில நேரங்களில்...
*சில உறவுகள் உதிர்த்த
வார்த்தைகளை...
ஜீரணிக்கவோ மறக்கவோ-
முடியாதபோது..!!..
*இலவசம் தானே என..
வாய்க்கு வந்த விமர்சனங்கள்..
அழையா விருந்தாளியாய்
நம்முள் நுழையும்போது...!!..
*கேட்காமலே நம்மை
தராசில் நிறுத்தி-
கீழே தள்ளும்போது...!!...
கோபம்.. மனஉளைச்சல்..
எரிச்சல்.. என எந்த -
உணர்ச்சிகளையும்..
வெளிக் கொட்டாமல்...
மண்ணுக்குள் விழும்-
மழைத் துளிப்போல்..
குளியலில் கரையும்
கண்ணீர் துளியாய்..
மன பாரம்- இறக்கி வைத்து விட்டு !!..
மௌனம் எனும் * முகமூடி* அணிந்து ..
புன்னகை எனும் பூநகை
அணிந்தால் தான்..
சில உறவுகளில்-
விரிசல் விழாது...
வாழ்க்கை யதார்த்தமாய்..
பயணிக்க எத்தனிக்கிறது...!!...
சாந்தியோடு...!!!...
Saturday, December 19, 2020
சிந்தனைக்குரிய பகுதி -"முகமூடி" by Kanchana
*பல மேசைகளில்....
சில இலைகளில்....
வீணான பற்பல பருக்கைகளை பார்க்கும்போது.....அதற்கு பின்னால் இருக்கும் *முகமூடியை நாம் அறியவில்லை.....*
நட்டநடு வெயிலில்
இடுப்பில் கோவணத்துடன் உழைத்த உழவனின் வியர்வையில் உதித்த நெல் மணிகள்....... பருக்கைகளாக குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன.......!
பல பல குடுவைகளில்..... அடைக்கப்பட்ட நீர்துளிகளை கடற்கரை மணலில்
பார்க்கும்போது....
அதற்கு பின்னால் இருக்கும் *முகமூடியை நாம் அறியவில்லை....*
அளபற்கரியா உப்பளங்களை தன்னில் ஆர்ப்பரித்து.... ஆவியாகி.... விண்ணையடைந்து....... மேகங்களுடன் ஊடலிட்டு..... தூய்மையான
மழைத்துளிகளாய் இம்மண்ணில் விழும் நீர்துளிகள்.... எச்சில்நீராக கடற்கரை மணலில் கிடக்கின்றன......!
Friday, December 18, 2020
சிந்தனைக்குரிய பகுதி-"மறதி" by Kiruthika
*மறதி *
தன்-
பசி மறந்து ..
தூக்கம் மறந்து ..
வலிகள் மறந்து..
அலங்காரம் மறந்து..
தேவைகள் மறந்து..என-
தன்னை மட்டும் மறந்து போகும் தாய்க்கு மட்டும் செலக்டிவ் அம்னீஷ்யாவா ..!!??..
தன் -பிள்ளைகள்பால் துணைவன்பால் ...
கொண்ட பேரன்பால்!!!..
Tuesday, December 15, 2020
சிந்தனைக்குரிய பகுதி -"மறதி" by Vidhya Nivash
மறதி இருப்பதால்தான் பழையதை மறந்து புதியதை நோக்கி நாட்கள் நகர்கின்றன...
மனித மனம் குரங்கு போல....
குரங்கு மரத்திற்கு மரம் தாவுவது போல தாவும்...
அற்பமான விஷயங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டே இருக்கும். அற்புதமான ஆசிர்வாதங்களை மறந்து விடும் ....
இழந்தவற்றை சிலநேரம் மறக்க முடியாது... பலநேரம் இருப்பவற்றை மறந்து விடுவோம் .
மறதி இருப்பதால்தான் மனிதன் மனிதனாக இருக்கிறான் இல்லை என்றால் அவனும் மிருகமே .
புகழ்ச்சியில் தன்னிலை மறப்பதும் ....
பிறர் இகழ்ச்சியில் உன்னிலை மறப்பதும் சாபமே!!!
எந்நிலையிலும் தன்னிலை மறக்காமல் இருப்பதே மகத்துவம்.
Monday, December 14, 2020
சிந்தனைக்குரிய பகுதி -"மறதி" by Jaya
மறதி பல சமயம்
பலருக்கு
வாழ்வின் வரமே....
இல்லையெனில்
நிகழ்கால வாழ்வினையும்
பாழ் செய்யும்!!!!
மனமற்ற தோன்றல்களை மனதினில் இருந்து களைவது மறதி
Sunday, December 13, 2020
சிந்தனைக்குரிய பகுதி - " மறதி" by Kanchana
சில நேரங்களில்.....
சில சனங்களை நான் கடக்க விரும்பும் போது .....
என் கால்கள் தேடிப்போகும் இடம்......
என் வீட்டு மாடி தோட்டம்......
என் வீட்டு மாடி தோட்டத்தின் கர்ப்ப குடியில்......
எத்தனை விதமான பிரசவங்கள்....... ஒவ்வொரு குழந்தைகளின் (காய்களின்) ஜனனத்திலும்..... ஒவ்வொரு ஞாபகங்கள்....... அஞ்ஞாபகங்களில் சில....
ஆழிலையில் கண்ணன் இருப்பது போன்று ஞாபகபடுத்தும் என் வீட்டு பிஞ்சு கத்திரிக்காயின் *அழகில் என்னை மறந்தேன்......*
கிணற்றில் சுரைகூடு கட்டி குதித்ததை ஞாபகபடுத்தும் சுரைக்காயின் *அழகில் என்னை மறந்தேன்...... *
என் குழந்தைகளின் பிஞ்சுவிரல்களை ஞாபகபடுத்தும் வெண்டைகாயின் *அழகில் என்னை மறந்தேன்....... *
தொங்கும் பூங்காவினை ஞாபகபடுத்தும் என் வீட்டு மணிபிளான்ட்டின் *அழகில் என்னை மறந்தேன்.......*
பச்சை பசேலென்ற புல்வெளியினை ஞாபகபடுத்தும் என் வீட்டு கீரைகளின் செழுமையான *அழகில் என்னை மறந்தேன்....*
சிவனின் கழுத்தில் அலங்கரிக்கும் வாசுகியைப்போல......என் தந்தையின் கழுத்தினை அலங்கரித்த நல்லபாம்பினை பார்த்து பயந்த நாட்களையும்....... அறியா வயதில் சாரைபாம்பினை மிதித்த பயத்தில் என் தாயினைவிட்டு பிரியாமல் இருந்த நாட்களை ஞாபகபடுத்தும்......
கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் புடலையின் *அழகில் என்னை மறந்தேன்.......*
கைகளில் பூக்களை கட்ட தெரியாத வயதில் கால்கட்டு போட்டு கதம்பங்களை கோர்த்து பெருமாளுக்கு சூட்டியதை ஞாபகபடுத்தும்.....
துளசிகளின் *அழகில் என்னை மறந்தேன்........*
சில சனங்களை மறக்க நினைத்து எனக்கு.....
மறக்க முடியாத மலரும் நினைவுகளில் *என்னையே நான் மறந்தேன்* .......!
படித்ததில் பிடித்தது by Divya
*இந்த 26 வார்த்தைகள்!*
🌸 *எவ்வளவு அழகு*🌸
*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.
*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.
*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.
*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.
*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.
*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
I am proud of my சாதி ...என்பது முட்டாள்தனம்.
*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.
*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.
Saturday, December 12, 2020
Friday, December 11, 2020
சிந்தனைக்குரிய பகுதி -"புன்னகை" by Vidhya Nivash
எந்த பேதமும் இல்லாமல் அனைவரும் அணியக்கூடிய நகை,
ஒவ்வொருடைய நகையும் தனித்தன்மை உடையது,
எளிதில் மொழி தெரியாதவரிடம் கூட பரிமாறிக்கொள்ளக் கூடிய நகை
பெண்ணுக்கும்,மனப்புண்ணுக்கும் அன்பானவருடைய புன்னகை இருந்தால் மட்டும் போதும்,
எந்த விலைக்கொடுத்தும் வாங்க முடியாது மழலை செல்வத்தின் புன்னகையை..
புன்னகைக்கு உண்டோ அடைக்கும் தாழ்,அதை அனைவரிடம் பரிமாறிக்கொண்டு வாழ்வோம் இனிமையாக 😊😊😊
இயற்கை அன்னை அள்ளித் தெளித்த கண்கொள்ளா அழகிய வண்ணங்கள் பல அதை காணும் போது மனத்திலிருந்து ஊற்றெடக்கும் புன்னகைகள்..
மனிதர்கள் மட்டுமா?? உணர்ச்சி வசப்படுவார்கள் ,இங்கு சில செல்லக்குட்டிகளும் புன்னகையை சிதறுகின்றன ...
Thursday, December 10, 2020
சிந்தனைக்குரிய பகுதி -"புன்னகை" by Kanchana
விடிந்தும்,விடியா காலை பொழுது.... மேனியை தழுவிக் கொண்டுஇருக்கும் பனிகாற்று..... ஜன்னலோர இருக்கை...... இனிதாய் தொடங்கிய என் இரயில் பயணம்..... பச்சைகொடியின் அசைவுக்காக காத்துக்கொண்டிருந்தன........
ஏதோ என் கால்கள் சீண்டப்படுகின்றன கோபத்துடன் குனிந்து பார்த்தால்..... கால்கள் இல்லாமல் நான்கு சக்கர வண்டியில் அமர்ந்து ஏக்கத்துடன்..... சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் தெய்வங்களின் படங்களை வாங்க கேட்கும் சிறுவனின் *ஏக்கமான புன்னகை*......
தன் தேகத்தினை மறைக்க கிழிந்த ஆடையை அணிந்து, எத்தனையோ விதமான காலடிகளின் தூசுகளை சுத்தமாக்கி கையேந்தி சில்லறை கேட்டுகும் ஏழை சகோதரியின் *ஏக்கமான புன்னகை*......
தன் கூடையில் மணிமணியாய் இருக்கும் கடலையை யாரும் வாங்க மாட்டார்களா என்று தாங்கொனா பாரத்தை சுமக்கும் பொக்கைவாய் பாட்டியின் *ஏக்கமான புன்னகை* ......
ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல், இரயிலில் அர்த்தநாரிஸ்வரராக ஆசிர்வாதங்களை அள்ளிக் கொடுக்கும் திருநங்கைகளின் *ஏக்கமான புன்னகை* ......
இறைவனுக்கு தன் கண்களை கொடுத்த கண்ணப்பரைப்போல..... ஏதேதோ காரணங்களுக்காக தன் கண்களை இழந்த கண்ணப்பர்களின் வாழ்வாதாரத்திற்காக சிந்தும் *ஏக்கமான புன்னகை* ......,
இத்தனை புன்னகைகளை தாண்டி......என் இருப்பிடம் நோக்கி செல்ல முற்படும் போது..... நள்ளிரவில் தன் தூக்கத்தினை மறந்து, தன் குடும்பத்திற்காக உழைக்க காத்து தனக்கு சவாரி கிடைக்காத என்று காத்திருக்கும் சகோதரர்களின் *ஏக்கமான புன்னகை*.....
ஓர் நாள் பயணத்தில் எத்தனை புன்னகைகள்....
ஆனாலும் மனது ஏனோ பாரத்துடன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன்...... புன்னகையுடன் கதவை திறந்தார் என் அன்பு அம்மா..... மீண்டும் மீண்டும் வாஞ்சையுடன் பார்க்கிறேன் என் தாயின் முகத்தை...... அறுபதை நெறுங்கி கொண்டிருந்தாலும் நேர்த்தியான அழகுடன் இருக்கும் என் அன்னையை பார்த்து புன்னகைக்கிறேன்...... எத்தனையோவிதமான
*ஏக்கமான புன்னகைகளை* உதிர்க்கவிடாமல்....
பிரசவம் எனும் தாங்கொனா வலியிலும் என்னை இப்புவியில் பிரசவித்து...... வலியினை மறந்து என் பிஞ்சு விரலை கைப்பற்றி சிரித்த என் தாயின்
*புன்னகையை* விட சிறந்தது ஏதும் உண்டா?
சிந்தனைக்குரிய பகுதி -"புன்னகை" by Kanchana
தான் சூடிய மலரை.....
இறைவனின் திருமேனியில் அலங்கரித்து பார்த்து ரசித்த
சுடர்கொடியான *ஆண்டாளின் புன்னகை!*
காற்றினில் கலந்து வரும்
மாயவனின் குழலோசையில்
தன்னையே மறந்து போகும்
*ராதேயின் புன்னகை* !
இகபர சுகங்களை மறந்து
தம்பூராவை மீட்டு நாம சங்கீர்த்தனையில்
தன்னையே மறந்த
*மீராவின் புன்னகை!*
சுவற்றில் தான் ஒட்டிய ஒரு ஒரு வரட்டியிலிருந்து வரும்
*விட்டல்!விட்டல்!* என்ற மாயவனின் ஒலியினை கேட்டு ரசித்த
*ஜனாபாயின் புன்னகை!*
சுட்டித்தனமான குறும்புடன்
மண்ணையும், வெண்ணையும்
உண்ட மாயவனின்
புன்சிரிப்பினில் அண்டசராசரங்களை பார்த்து ரசித்த
*யசோதையின் புன்னகை!*
மாயவனின் மீது கொண்ட
அன்பினாலும்
காதலினாலும்
பக்தியினாலும்
பாசத்தினாலும்.....
மலர்ந்த பெரும் புண்ணியம் பெற்ற இப்பேர்புன்னகையில்......
ஒரு துளியினை அடையும் பாக்கியத்தினை.....
யாதுமாகி என் முன்னே.....
மந்தாரபுன்னகையுடன் நிற்க்கும்
என் மாயவனே
எனக்கருள்க🙏🏻🙏🏻
இன்றைய சம்பவம் by Veena Shankar
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...


















































