Tuesday, December 8, 2020

சிந்தனைக்குரிய பகுதி - "புன்னகை" by Jaya

 


ஹைக்கூ கவிதை.......


புன்னகை 

இதயத்தின் 

அழகான

திரவுகோல்!!!!


வகை வகையாய் புன்னகை (சிரிப்பு)


உதடுகள் பிரியா குறுஞ்சிரிப்பும்

பல் வரிசை தெரியப்பூக்கும் முல்லைச்

 சிரிப்பும்

 கன்னங்குழி கவரும் காந்தச் சிரிப்பும்

அரவணைக்கும் அன்புச்சிரிப்பும்

இறையருள் பாலிக்கும் குமிண் சிரிப்பும்

மனதை கொள்ளையிடும் மழலையின் 

சிரிப்பும்

சந்தோஷம் பூக்கும் மத்தாப்பூ சிரிப்பும் 

மாட்டிக்கொண்டு முழிக்கும் அசட்டுச் 

சிரிப்பும் 

சமயோசிதமாய் கை கொடுக்கும் சமாளிப்பு 

சிரிப்பும்

சண்டையின் பின் நிகழும் சமாதான 

சிரிப்பும் 

சாந்தம் மிளிரும் வயோதிகச் சிரிப்பும்

அல்லல் கடந்த நிம்மதி சிரிப்பும்

வெற்றியைக் கொண்டாடும் உவகை

 சிரிப்பும்

ஓவ்வொரு சிரிப்பும் ஓவ்வொரு வகை

அனைவருக்கும் அது பொது வகை

சிரிப்பும் ஒரு வகையில் கலையே

வாழ்வினை இலகுவாக்கும் நம் 

நிலையே!!!!!


ஓங்கி உயர்ந்த மலைகள்

அதில் ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள்

சலசலக்கும் ஆறுகள்

வலைந்து நெளிந்த நீரோடுகள்

வானுயர்ந்த மரங்கள் 

பசுமை மீட்கும் சோலைகள்

அனைத்தும் 

அள்ளக் குறையா பொக்கிஷங்கள்

மனித வாழ்க்கையின் வரம்

இயற்கை அன்னையின் 

புன்னகை சிதறல்கள்!!!


கொடுப்போரை வள்ளலாக்கி

பெறுபவரை

செல்வந்தராக்கி

இருகை ஓசைப்போல்

இருவரின் மனவோசயை 

மகிழ்வால் மகிழ்வாக்கி 

மகிழ்வது ஓவ்வொருவரின்

புன்ன(ந)கை😊😊


3 comments:

  1. முத்துகளை எடுத்து கோர்த்தது போன்ற புன்ன(நகை)கைகள்..அருமை

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...