Thursday, December 10, 2020

சிந்தனைக்குரிய பகுதி -"புன்னகை" by Kanchana

 


தான் சூடிய மலரை..... 

இறைவனின் திருமேனியில் அலங்கரித்து பார்த்து ரசித்த

சுடர்கொடியான *ஆண்டாளின் புன்னகை!*



காற்றினில் கலந்து வரும் 

மாயவனின் குழலோசையில்

தன்னையே மறந்து போகும் 

 *ராதேயின் புன்னகை* !



இகபர சுகங்களை மறந்து 

தம்பூராவை மீட்டு நாம சங்கீர்த்தனையில் 

தன்னையே மறந்த 

 *மீராவின் புன்னகை!* 



சுவற்றில் தான் ஒட்டிய ஒரு ஒரு வரட்டியிலிருந்து வரும்  

 *விட்டல்!விட்டல்!* என்ற மாயவனின் ஒலியினை கேட்டு ரசித்த

 *ஜனாபாயின் புன்னகை!*  



சுட்டித்தனமான குறும்புடன் 

மண்ணையும், வெண்ணையும் 

உண்ட மாயவனின்

புன்சிரிப்பினில் அண்டசராசரங்களை பார்த்து ரசித்த 

 *யசோதையின் புன்னகை!*  



மாயவனின் மீது கொண்ட 

அன்பினாலும்

காதலினாலும்

பக்தியினாலும்

பாசத்தினாலும்.....


மலர்ந்த பெரும் புண்ணியம் பெற்ற இப்பேர்புன்னகையில்......

ஒரு துளியினை அடையும் பாக்கியத்தினை.....

யாதுமாகி என் முன்னே.....

மந்தாரபுன்னகையுடன் நிற்க்கும் 

என் மாயவனே 

எனக்கருள்க🙏🏻🙏🏻





8 comments:

  1. கடவுளான புன்னகைகள் என்றும் வணங்க கூடியது,அருமை🙏

    ReplyDelete
  2. கடவுளின் புன்னகையும் கன்னி யின் புன்னகையும் அருமை தோழியே

    ReplyDelete
  3. Expression of God's smiles ... awesome.

    ReplyDelete
  4. Replies
    1. அற்புதமாக இருக்கிறது சாய் ராம்

      Delete
  5. Vaalthiya anaithu sagotharigalukum en manamarntha nandri🙏

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...