Saturday, December 26, 2020

சிந்தனைக்குரிய பகுதி -" இயற்கையின் நிறம்" by Vidhya Nivash

 


காலையில் உதிக்கும் சூரியனின் மஞ்சள் நிறமும்,

பச்சை நிறபட்டாடை உடுத்திய வயலின் அழகும்,

நமக்கு மேலே எங்கும் பரவி ஓடியிருக்கும் நீல நிற மேகமும்,

கீழே இருக்கும் செந்நிற மண்ணும்,

புகை போல படர்ந்திருக்கும் வெண்ணிற பனிமூட்டமும்,

கார்மேகமும் ,குயிலும் மட்டுமா கருமை நிறம் தங்கம் கூட கருமை தான்..



தண்ணீருக்கு நிறம் இல்லை என்பார்கள் ஆனால் அது தேசத்துக்கு தேசம், மண்ணிற்கு மண்  மற்றும் அதில் இருக்கும் ஜீவராசிகளுக்கு ஏற்றார் போல் நீலம், பச்சை, இளஞ்சிவப்பு ,மஞ்சள் ,செம்மண் என பல வண்ண நிற ஆடைகளை அணிய..


வெயிலும், மழையும் கூடும் நேரம் தோன்றும் வானவில்லுக்கும், தோகை விரித்து ஆடும் மயிலுக்கும் ஏழு வண்ண நிறம் யார் கொடுத்ததோ..




வண்டுகள் மொய்க்கும் பல வண்ண மலர்களின் நிறமும் ,கொஞ்சும் கிளியும்,

பார்ப்போரை பரவசம் ஆக்கும் பால்வண்ண வெண்ணிலாவும்..எத்தனை எத்தனை நிறங்கள் அவற்றுடன் தன்னுடைய விஞ்ஞானத்தால் மரபணு மாற்றத்தை கொண்டு வந்தாய் மனிதா..அதன் வினையே இன்று !!!



இந்த இயற்கை அன்னையின் பல வண்ண நிற உயிருள்ள கோலங்கள் கம்பீரமாக இருக்கும்போது ... இந்த பூலோகத்தில் எத்தனை கொடிய கிருமி மரபணு மாற்றம் வந்தாலும்... மனிதா உன்னால் திடம்பட வாழமுடியும் என நம்பிக்கை கொடுக்கிறது!!!




4 comments:

  1. Wow 😊 வண்ண மயமான சிந்தனை பதிவு

    ReplyDelete
  2. அருமை வித்யா 👌🧡👌

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...