Saturday, August 20, 2022

தினமொரு சிந்தனை by Veena Shankar

 


இன்றைய சிந்தனை

நினைவிலிருந்து நீங்காத எந்த செயலும் எவ்வளவு காலமானாலும் நம் நினைவிலிருக்கும்

இன்றைய சிந்தனை

தேவையில்லாத இடத்தில் இருக்கும் மனி தனும் பொருளும் அதன் எதிர்கால தேவையை உணராத அறிவும் பயனில்லை

காதலன்

தான் குருடியாய் இருந்திருக்கலாம் என்றாள் உன்னை காதலித்த கண்ணழகி ஒருத்தி

தான் ஊமையாய் இருந்திருக்கலாம் என்றாள் உன்னை காதலித்த பேச்சழகி ஒருத்தி

தான் ஊனமாய் இருந்திருக்கலாம் என்றாள் உன்னை காதலித்த பேரழகி ஒருத்தி

நானும் நானாகவே இருந்திருப்பேன் உன் பார்வை, பேச்சு, அழகு ஆகியவற்றை காதலிக்காத வரை

நான் கருமியானேன் மனதாலும் செயலாலும் உன்னை காதலித்த பெண்களிடம்

ஆனால் மௌனமானேன் உன்னிடம் என் காதலை சொல்ல வெட்கப்பட்டு

தேனீ! தேனும் நீ

பூவில் உள்ள தேனை தெரிந்து உணர்ந்து, இருந்து நுகர்ந்து, கவர்ந்து கொண ர்ந்து, தேனடையில் விழுந்து கிடக்கும் தேனை ரசிப்பதில் உள்ள ஆனந்தம் அமிர்தம்

 இன்றைய சிந்தனை

பிறக்கும் போது வரும் சிசுவின் அழுகைக்கும் மரணத்தின் போது துயரத்தில் மற்றவர்க்கு வரும் அழுகைக்கும் இடைபட்டது தான் மனிதனின் வாழ்க்கை

 இன்றைய சிந்தனை 

நம் மனதின் எதிர்ப்பை மீறி வரும் எதிர்பார்ப்பும் அதன் விளைவையும் நம் மனது ஏற்கத்தான் வேண்டும்

இன்றைய சிந்தனை 

தேவை என்ற ஒன்று தேவையில்லாமல் போயிருந்தால் மனிதநேயம் என்ற ஒன்று தேவைபட்டுருக்காது

இன்றைய சிந்தனை

தனிமையில் மட்டுமே சிந்திக்க முடியும். அப்படிப்பட்ட சிந்தனையானது கூர்மையான போர் வாளாகவும் இருக்கலாம்; குன்றி போகும் இளமையாகவும் மாறலாம்





No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...