பிஞ்சு கரம் ஸ்பரிசத்தால்..
மதம் பிடிக்க மறந்து..
மென்மை தழுவ ..
மெய் உருகியதாய் மாயை -கொண்டு ..
மெய் சிலிர்த்த - கார்மேக யானை ..!!..
கன்னுக்குட்டியாய் மண்டி இட்டபடி.... சுட்டி பையனோடு..!!!..
- Kiruthika
வேற்று நிறத்தில் இருப்பதால் யானையை கவர்ந்தானோ இச்சிறுவன்
பைனாகுலரில் கறுப்பு தோற்றம் சூழ்நிலைக்கேற்ப
கண்களை சிறிதா க படைத்து மூக்கை பெரிதாக்கி விட்டேனே இறைவன் - சிறுவனின் நினைப்பு
தூளியில் ஆட நினைக்கிறேன். துயிலாமல் என்னை ஆட்டி விடு. நம்பிக்கை கொள்ள தும்பிக்கையை சரி பார்க்கிறேன்.
உன் பற்களுக்கு (தந்தம்) எங்கே கிளிப் மாட்டுவது? இன்னும் நீண்டு கொண்டே போனால்...
மரம் இழுக்கும் உன் தும்பிக்கையையும்
தரம் நிறைந்த உன் தந்தமும் சிரத்தை பதம் பார்க்கும் உன் கால்களும்
உயரம் குறைந்த உன் வாலும்
தேகத்திற்கு எதிரான உன் கண்களும்
ஊர்வலத்திற்கு ஏற்ற உன் உடலும்
இசையோடு ஒன்றி போகும் உன் நடையும்
உன்னை வளர்த்த சிறுவனின் பாசமும்
பாசத்திற்கு அடி பணிந்த நீயும்
பச்சைபசேல் என்றுருக்கும் காட்டை கருமேகத்தால் மறைத்ததும்
மீண்டும் கிடைக்குமா?
இதில் மீண்டு வர முடியாத தவிப்பில் நான்
கார்மேகக் கூட்டம் தயாராகிவிட்டது மழை பொழிய, விரைவாக ஏறிக் கொள், உன்னை என் நடையினால் வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்கிறேன்.
ஃபோட்டோ காமிரா என்று தவறுதலாக நினைத்து புகைப்படம் எடுக்கிறானோ இச்சிறுவன்.
தாய் பாசம் என்பது குழந்தைகள் செய்யும் சேட்டகளை பொறுத்து கொள்ளும் உள்ளம். மண்டியிட்டு ரசிக்கிறது தாயுள்ளம்
- Veena Shankar
கரும்பும், அரும்பும்- கலந்துரையாடல்💗
மண்டியிட்டால் மட்டமே முத்தம் தருவேன் என்றது மழலை; மறுகணம் ஆனை ஐயா சரண்💖
ஆனைக்கும் அடி சறுக்கும்… மனம் உருகும்…கள்ளங்கபடமில்லா மனம் முன்💗
சின்னஞ்சிறு சிறுவன் கொஞ்சினான்… “என் செல்லக் குட்ட்ட்டி(🤪)…” பிரம்மாண்ட உருவம் கொண்ட யானையிடம்🤓
- Akhiladevi Kumaran
இது வழியா பார்த்தா யானையோட மூளை தெரியுமா? 🤔🤔
- Divya
குழந்தையின் விளையாட்டுதனத்தை ரசிக்கும் பெரிய குழந்தை-அழகு
உள்ளத்தை கவரும் அன்பின் வெளிப்பாடு ரம்மியமான சூழலுக்கேற்ப
முதல்ல நீ
பின்பு நான்
என்பதை போல
பவ்யமாக மண்டியிட்டு
சிரிக்கும் ஆனையார்
அரும்பின் ஆணைக்கு
அடிபணிந்த ஆனையார்🤩
- Vidhya Nivash

VeenaShankar: 👍
ReplyDelete: 👍👌🏻👏
Kiruthika: 😍
Vidhya Nivash: அருமை வீணா
: அழகு கிருத்திகா 💗
: Lovely 💗
: அருமை அகிலா,ஆம் உருவம் கடந்த அன்பின் வெளிப்பாடு
VeenaShankar: Nice Akhila
: 👏👏👌🏻
Kiruthika: அருமை மா .. அன்புக்கு முன் அடங்கி விடும் -ஆத்மார்த்தமாய்..
அத்தனை உயிர் ஜீவன்களும்...
VeenaShankar: 👍👏👏
Akhila: 🤓🤓🤓👏👏👏👏Enna oru sindhanai
: Nice…illaatti serndhu nanaiyalaam 🤪
VeenaShankar: யானைக்கு ஒண்ணும் ஆகாது. பையனுக்கு சளி பிடிக்கும்😂😂
Vidhya Nivash: அனைத்தும் அருமை வீணா
: இதே தான் எனக்கும் தோன்றியது திவ்யா,ஆனா யானையின் உள் உறுப்புகளை படம் எடுக்கும் சிறுவன் 😄
Divya: 😄😄
Akhila: Superb
Vidhya Nivash: 👌🏻
kanchana: Akhila,Veena,Vidya,
Kiruthika......romba alaga iruku ellam👏💕
Vidhya Nivash: 😄👍🏻
Akhila: 😍👏👏👏Arumai veena
Akhila: haahaa...cute
Vidhya Nivash: அழகான வரிகள் வீணா
VeenaShankar: 👏arumai Vidhya