Sunday, October 31, 2021

ஐந்து முத்துக்கள் by Veena Shankar


 

மஞ்சள் கயிறு


வளையல் கொடுத்தாய் உன்னை  

நான் வளைந்து வருவதற்காக  

காதணி கொடுத்தாய் உன் 

காதலை காதில் ஓதுவதற்காக

சங்கிலி கொடுத்தாய் உன்னை 

நான் பிணைந்து இருப்பதற்காக 

கொலுசு  கொடுத்தாய்  உன்னை  

நான் கொஞ்சுவதற்காக

மோதிரம் கொடுத்தாய்  உன்னிடம்  

நான் மோதாமல் இருப்பதற்காக

நெற்றிசூட்டி கொடுத்தாய்  உன்னை

 நான்  முத்தமிடவதற்காக

ஆனால்  நீ என் கழுத்தில் மஞ்சள் கயிற்றை 

கட்டாமல் ஏமாற்றி விட்டாய்  என்பதால்  

நான் ஏற்றுக்கொண்டேன் 

தூக்குக் கயிறை  மௌனமாக


 நிதர்சனம்


நாட்கள் எண்ணப்படுகிறது மணநாளுக்கு 

மணமகன் வீட்டில்

தாள்கள் எண்ணப்படுகிறது வரதட்சணைக்கு 

மணமகள் வீட்டில்


 அன்புள்ள தோழிக்கு


தோழியே!

பரிவு உண்டு நம்மிடத்தில்

பிரிவு வேண்டாம் என்னிடத்தில்

அறிவு உண்டு நம்மிடத்தில்

சரிவு வேண்டாம் நம் எண்ணத்தில்

உன்னை

தெளிந்து கொள் உன்னிடவனித்தில்

உன் பார்வைக்கு சரி என்பவனிடத்தில்


 குடை வாழ்க்கை


குடைக்குள் நின்றபடி இருக்கிறான் இளைஞன்

ஓடாத இரு சக்கர வாகனத்தின் விளம்பரத்திற்காக

தன் வாழ்க்கையின் சக்கரத்தை நிஜமாக ஓட்டுவதற்காக


வாழ்க்கை


வாடாத முகத்தோடு வாடும் பூ தொடுத்தாள்

வாடிகொண்டிருக்கும் வாழ்க்கையில் விடாது ஜெயித்தாள்

ஆனால்

வாடியது அவள் முகம் அன்று மட்டும் தனக்கு வாராத வரனும் வந்ததாலும்

வாழாது நிற்கும் தன் சகோதரியின் வாழ்க்கை வாடி போனதாலும்

Thursday, October 28, 2021

சட்டென்று பட்டென்று புதுகவிதைகள் by Veena Shankar




  பொன்நகை   / புன்னகை  


பொன் நகை வேண்டும் என்றாய் 

புன்னகையோடு

 புன்னகை மாறாமல் வாங்கிக்கொடுத்தேன் 

பொன் நகையை 

பொன் நகையும் இருந்தது புன்னகை மாறாமல் 

அடகு கடையில்

புரிந்தது உன் ஆவேசம் 

பொன்நகை மற்றவர் புன்னகைக்கு 

ஆளானதால்

என் நிலையை நீ புரிந்திருந்தால் 

புன்னகையும் பொன்நகை ஆகி இருக்குமே


 தாய் 


தாயின் வயிற்றில் உருவாகி 

தாயின் மடியில் வளர்ந்து 

தாயோடு நடைபயின்று

 நீ தாயை எட்டி உதைக்கும் தருணத்தில்

 தந்தையானால் உன் தாயின்

 அவலம் புரியும் உனக்கு


தாயின் மனது


இன்று

எட்டி நின்றே நடந்தாய் என்னுடன்

நீ  என்னை பற்றிக் கொள்ளாமல் 

நாளை 

தொற்றிக்கொண்டு வருவேனோ 

என்று நீ எண்ணியதால்


                     புதுக்கவிதை  


சட்டென்று பிறந்தது புதுக்கவிதை 

பட்டென்று தொட்டது   படித்தவரை 

ஆனால்   

சிட்டென்று  பறந்தது  ஒரே நிமிடத்தில்

 படித்தவர் மனது

 அடுத்த புதுக்கவிதையை தேடி

Tuesday, October 26, 2021

அடுத்துஅடுத்து லஞ்சம், இல்லாநிலை by Veena Shankar



லஞ்சம் 


படித்து பட்டம் வாங்க நான் செலவழித்த காசை

எடுக்க நினைத்து நீட்டினேன் கையை 

பணம் வந்ததோ இல்லையோ 

கைவிலங்கு வந்தது லஞ்ச ஒழிப்புத்  துறையிலிருந்து 

கோடி கோடியாய் அரசியல் கட்சிகள் 

லஞ்சம் வாங்கினாலும் 

கோடியில் இருக்கும் நான் வாங்கும்

 பணம் மட்டும் கருப்பு பணமாக மாறியது 

சில நூறு வாங்கிய பணத்திற்கு 

பலநூறு செலவழிக்கிறது அரசு 

சட்டத்தின்  ஓட்டைகளாலும் அதனை 

பயன்படுத்தும் சக்திகளாலும்

லஞ்சம் வாங்கியதால் கஞ்சிக்கு 

வழியில்லாமல் இருக்கும் நான் 

கெஞ்சி பார்த்தும் கிடைக்கவில்லை  என் வேலை 

வேலையை வாங்க மறுபடியும் கொடுக்க 

வேண்டுமே லஞ்சம்  

இதுதான் லஞ்ச சுழற்சியோ இல்லை 

என்னாலேயே உருவாக்கப்பட்ட அழற்சியோ



 இல்லா நிலை 


சொர்க்கம் என்ன நரகம் என்ன 

உயிர் போனபின் தெரிவதில்லை 

கிராமம் என்ன நகரம் என்ன 

தாகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை 

கோயில் என்ன வீடு என்ன 

மனதுக்கு அமைதி வருவதில்லை 

சாலை என்ன தெரு என்ன 

மரங்கள் தென்படுவதில்லை 

நீ என்ன நான் என்ன 

ஆறடி இடமும் நிரந்தரம் இல்லை 

இந்த கலியுகத்தில்

Monday, October 25, 2021

சின்ன கவிதைகள் ஆழமான சிந்தனைகள் by Veena Shankar


  

மாணவப்பருவம் 


நெளிவு கொண்ட பாதையிலே செல்லும்போதும் 

என் மனம் நெளியவில்லை 

நேரான பாதையிலே புத்தக சுமையினால் 

நெளிந்து நெளிந்து செல்லும் மாணவர்களை

காணும்போது நெளிவு கொண்டது என் மனம் 

அத்தனை புத்தகங்களையும் படிக்காவிட்டாலும் 

சுமந்து செல்வதே பெரிய தண்டனையா 

அதனால் என்னவோ இக்காலத்திலும் உருவாயினர் 

குழந்தை தொழிலாளர்கள்


சமாதி 


காதல் தோல்வியால் அமைதி விரும்பி 

சென்றேன் சமாதிக்குள் 

தொலைத்த என் காதலை கண்டெடுத்தேன் 

சமாதிக்குள் சமாதியாய் ஆக்கப்பட்ட

 என்  காதலியை


எது முடிவு 


ஆடி முடிந்ததும் திருமணம் என 

கூடிப் பேசி முடிக்கும் முன் 

ஓடிப்போய் திருமணம் செய்ததால் 

இடி விழுந்தது போலாயிற்று பெற்றோருக்கு

முடிவு மரணமே என்று எண்ணுவதால்  இதற்கு 

விடிவு ஏதும் இல்லையா


 மத்தள வாழ்க்கை


தெரு குப்பைகள் என்னை ப்பார்த்து 

சிரிக்கிறது  அள்ள ஆளில்லாமல் 

தெருவிளக்குகள் என்னைப்பார்த்து 

கண் சிமிட்டுகிறது சரி செய்ய 

ஆள் இல்லாமல் 

தெரு குழாய்கள் என்னைப்பார்த்து ஏங்குகிறது

உபயோகிக்க ஆளில்லாமல் 

தண்ணீர் வராத காரணத்தினால் 

தெரு மக்கள்    என்னை   ஏசுகின்றனர்

ஓட்டுப்போட்ட காரணத்தினால் 

காசு வாங்கி ஓட்டு போட்ட இவர்கள்

இப்படிப் பேசினால் 

சீட்டு வாங்க காசு கொடுத்த நான்

என்ன செய்ய?

விட்டதைப் பிடிக்க  எண்ணி நான் கையை நீட்ட 

சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டேன் 

மத்தளம் போல்  அல்லல்படுகிறேன்

Sunday, October 24, 2021

ஒரு பக்கத்தில்-யாசகம்,புகையின் பகை,வெற்றி,காதல் by Veena Shankar

 


யாசகம்


உன்னை கண்டதும் என் நடை, உடை, பாவனை 

எல்லாம் மாற்றினேன் என்னை கண்டதும் 

நீயும் உன் மனதை மாற்றினாய்

ஒரு ரூபாய்க்கு பதில் இரண்டு ரூபாய்

திணித்தாய் என் கைகளில் 

நான் பிச்சைக்காரன் என்று நீ

நினைத்துக் கொண்டதால் 

நான் பிச்சைக்காரன் தான் 

காசுக்காக அல்ல உன் காதலை 

யாசித்து நிற்கும் காதலனாய்


புகையின் பகை 


இல்லாதவனுக்கு இருப்பதை கொடுப்போம் 

என்று சொல்லி புகைக்கும்  மனிதர்கள்

பகை ஆயினர் அடுத்தவருக்கு 

காசநோய் வந்த பின்னும் 

காசு இல்லாமல் தவிக்கின்றனர் மருந்துக்காக 

தேவையா இந்த சுகம் 

மலர்ந்திடுங்கள்  அகம் 

மறந்திடுங்கள் பகையாகும் புகையை


 வெற்றி 


தேர்வில் தோற்ற  என்னை   தேற்றி  ஜெயிக்க  வைத்தாய்

என்னிடம் உனக்கு காதல் இல்லை என்று சொல்லி 

என்னை மீண்டும் தோற்க வைத்தாய் 

இம்முறை தேற்ற எவரும் இன்றி  விழுந்தேன் 

நான் வாழ்க்கையில் எழுந்தேன் 

மறுபடியும் இன்னொரு பெண்ணால் 

இப்போதும் மறுக்கவில்லை மறைக்கவில்லை  

என் காதலை  அவளிடம் ஏனென்றால் 

அவளும் வாழ்க்கையை தொலைத்தவள் தான்


 காதல்


நீ என்னோடு சேர்ந்து படிக்கும்போது என் 

மனதை உன்னிடம் சொன்னேன் நான் 

உன்னை விரும்பியதால்,  மெட்டல் டிடெக்டர்

கொண்டு உன் மனதை ஆராய நினைக்கையில் 

அது சத்தமிட்டது ; உறுதியானது ; உன் மனது 

இரும்பு தான் என்று

மணக்க விரும்பினேன் என்னை 

நினைக்கும் ஓர் கரும்பை

Friday, October 22, 2021

ஒன்றில் நான்கு கவிதைகள் by Veena Shankar

 


தாய் பாசம்


கருவில் சுமந்த உன்னை 

தெருவில் அலைய வைத்தேன் 

செருப்பு இல்லாமல் நடந்த உன் கால்களை 

நெருப்பின் மேல் நடக்க வைத்தேன் - என்னை

சீராட்டி வளர்த்த உனக்கு 

சீமாட்டியாய் வாய்த்தாள் என் மனைவி

எதிர்த்துப் பேச முடியாமல் நான் இருக்க 

மதித்து பேச தெரியாதவள் அவள் இருக்க 

மிதித்து விடும் அவள் பார்வையால்

கொதித்துப் போனேன் ஒருநாள் 

அதனால் நானும் திரும்பி விட்டேன்; 

தங்கிவிட்டேன் உன்னோடு இந்திய தெருவில்



 உண்மை நிலை


பக்தி அதிகமாகியது உண்மை குறைந்ததால்

உண்டியல் நிறைந்தது பாவமன்னிப்பு என்று கருதுவதால் 

உலகம் சுருங்கியது அலைபேசியின் வரவால் 

தண்டனையும் ரத்தானது சட்டத்தின் ஓட்டையால் 

தெய்வம் கலங்குகியது கோயிலில் இடப் பற்றாக்குறையால் உண்மை அழுதது பொய்யான சிரிப்பால்

காதல் கசந்தது பிரிவு  சாதாரணமானதால் 

ஆரோக்கியம் குறைந்தது அவசரகால அறுவடையால் 

பெண்களின் ஆடையும் குறைந்தது நாகரீகம் 

வளர்ச்சி அடைந்ததால் 




 இலவசம் 


இலவசமாக மிதிவண்டி கிடைத்தும் 

பயனில்லை மாணவனுக்கு பயன்பட்டது 

அவன் தந்தைக்கு டாஸ்மார்க் செலவிற்காக




 தகவல் பலகை 


தகவல் பலகை ஆனது என் மனம் 

பல   காதல்களை சேர்த்து வைத்ததால்

ஆனால் என்னவோ என் பெயர் மட்டும் 

அழிக்கப்பட்டது கல்லூரியின் பதிவேட்டிலிருந்தும்

தேர்வு முடிவின் பலகையில் இருந்தும்

Thursday, October 21, 2021

அழகு by Vedavalli Ramani



 குழந்தையின் பொக்கை வாய் சிரிப்பு அழகு.மழலை அழகு.எட்டடி எடுத்து வெய்ப்பது அழகு.குட்டி ரைம்ஸ் சொல்லுவது என்று வளரும் பருவம் எல்லாமே அழகோ அழகு.

இந்த வாரத்தலைப்பு "இயற்கை" by Vidhya Nivash

 

இயற்கை சொல்லிலே இனிமை நிறைந்து ததும்பும்..

அது ரம்மியமானது ரகசியமானது

எங்கோ பெய்யும் மழை நம்மை இழுக்கும் மண் வாசனை அதற்கு உண்டோ இணை..

கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் பவளப்பாறையும் பல வண்ண ஜீவ ராசிக்களும்..

எங்கும் பச்சை போர்த்திய பட்டாடை ,எத்தனை எத்தனை எண்ணில் அடங்காத வண்ண கலவைகள்....

கொஞ்சி குலாவும் ராகங்கள்..

மயக்கும் வாசனைகள்..

வானுயர மரங்கள்,மேகங்கள் தாவிச்செல்லும் மலைக்கூட்டங்கள்..

தேன் சொட்டும் பனித்துளிகள்,

கொதிக்கும் வெண்ணீர் ஊற்று,மெய் சிரிக்கும் ஈரக்காற்று..

மூடிய பெட்டிக்குள் உயிரின் பிறப்பு...அதே போல் பூவின் குவளையில் நுழைந்தால் உயிரின் பிரிவு..

இவை அனைத்தும் விட இதை ரசிக்க சரியான இடத்தில் இரண்டு கண்கள்,இரண்டு காதுகள்,ஒரு வாய், இரண்டு தூரங்களுடன் ஒரு மூக்கு,இரண்டு கைக்கள்,கால்கள்,நகம்,முடி,உள்ளுக்குள் பல இவை அனைத்தும் யோசித்து பாருங்கள் எவ்வளவு அருமையான படைப்பு...

இந்த வாரத்தலைப்பு "இயற்கை" by Akhiladevi Kumaran

 



இந்த வாரத்தலைப்பு "இயற்கை" by Veena Shankar

 


கள்ளம் கபடமற்ற மழலையின் புன்னகையும் 

நெற்றி வேர்வை சிந்தும் விவசாயியின் உழைப்பும்

இயற்கையின் கொடையே

இயற்கை

பூமியில் கொட்டிக்கிடக்கும் வளங்களும்

மனிதன் வெட்டி சாய்க்கும் மரங்களும்

காலையில் எட்டிப் பார்க்கும் சூரியனும்

இரவில் ஆட்டிவிக்கும் குளிரும்

வடிவம் கெட்டியாய் இருக்கும் பாறைகளும்

மலையிலிருந்து ஆர்ப்பரித்து விழும் நீர்வீழ்ச்சியும்

மனிதனுக்கு சவால் விடும் காட்டுத்தீயும்

வற்றாத நதியும்

வறுத்தெடுக்கும் கோடையும் 

உருகியோடும் எரிமலையும் உறவாடும் பனிபாறையும்

ஆழ்கடல் உயிரினங்களும் ஆளும் தங்க சுரங்கங்களும்

மணம் கமழும் மலர்களும்

மனம் மாறா குணமும்

பார்வையின் பசுமையும்

பாவையின் கருங்கூந்தலும்

மனிதனை இயக்கும் இதயமும்

இதயத்தை மாற்றும் மருத்துவரும் 

இயற்கையே , நாம் அடைந்த கொடையே

ஆதங்கம் by Veena Shankar


 

ஆதங்கம் 


காதல் கனவில் பயணிப்போம் என்றாய் 

ஆனால் திருமணம் நடைபெறும் முன்னே!

 நீ சென்றாயே!  மரண பயணத்திற்கு 

கடைசி வரை இருப்பேன் என்று முதலிலேயே

கை விட்டு விட்டாயே!  நான் 

சலனப் பட்டு போனேன் 

உன் பேச்சால் அனாதையான எனக்கு 

ஒரு துணை நீ என நினைத்ததால்

 முதல் கோணல் முற்றும் கோணல்  

ஆனதே என் வாழ்க்கை அப்போதும் 

 தூற்றியது ஊர் என்னை  மட்டும்

திருமணம் நடைபெறும் முன்னே  

விதவையானதால் 

என் வாழ்க்கை உன்னோடுதான் என்ற 

மகிழ்ச்சி பொய்யானது  

உன்  மெய்  பிடிக்கும் முன் 

என் தலையெழுத்து மாறியது 

இன்னும் மறுமணம் செய்ய என் மனம் 

இசையவில்லை ஓருயிர் போதும் என்னால் 

பலியானது;  மனித வடிவில் ஒரு முறை தான் 

மரணம் என்பதும் - ஆனால் 

நான் வாழும் வாழ்க்கையும் உயிருடன் உள்ள மரணமே!

அரட்டை by Veena Shankar



 அரட்டை


அன்பான கணவன் எங்கே என்று கேட்டால்

சாராயக் கடையில் சரிந்து கிடக்கிறார்  என்றீர்

அழகான மனைவி எங்கே என்று கேட்டால்

ஆன்லைன் ஷாப்பிங் - ல் ஆழ்ந்து கிடக்கிறார் என்றீர்

ஆற்றலான பையன் எங்கே என்று கேட்டால் 

வாட்ஸ் அப்பில் ஐக்கியமாகி விட்டான் என்றீர்

அறிவான மகள் எங்கே என்று கேட்டால்

ஃபேஸ் புக்கில் வளர்ந்து நிற்கிறாள் என்றீர்

ஆபத்தில் காக்கும் கடவுள் எங்கே என்று கேட்டால்

அனர்த்தம் 

பேசாதே

டிவிட்டரில் டிவீட் செய்து கொண்டிருக்கிறேன் ஏன்றீர்

இது நியாயமா என்று  கேட்டால் என்னை டெலீட் செய்து விட்டீர்

உயர்வு by Veena Shankar

 




Friday, October 15, 2021

அழகு by Vidhya Nivash

 



அழகிற்கே அழகு சேர்க்கும் அழகு தாயுக்கு மகளின் அழகு..

உழவனுக்கு நெல்லின் அழகு உழைப்பின் அழகு..

கண்ணுக்கு தெரியாத அழகு பசித்தவனுக்கு உணவிட்டு (செவிக்கும்/ வயிற்றுக்கும் )ரசிக்கும் அழகு...

அழகு எது அழகு

கொலுவில் அமர்ந்திருக்கும் பொம்மைகளா??

அம்மா போட்டுவிட்ட பாவடையும் பூவும் கலையாமல் பொம்மை போல..

உள்ளிருந்து சாப்பிட என்ன தருவார்கள் என எட்டிப்பார்க்கும் குழந்தைகள் அழகா??

அழகு எது??

கண்ணில் காண்பவை யாவும் அழகு

அழகு என்ற மூன்றெழுத்து பேரழகு..

நேற்று பார்த்த புதுமையான சரஸ்வதி தின வாழ்த்து,ஏன் கடவுள் எல்லாம் வெண்ணிறமாக தான் இருக்க வேண்டுமா???

நிறத்தில் எல்லா நிறமும் அழகே,கருமை அனைத்திலும்  தெளிந்த அழகு

அகிலா வரைந்த படமும் அதையே சொன்னது?

நிறம்,ஒல்லி,குண்டு,நெட்டை,குட்டை??? 

சிந்தனையால்,ஞானத்தில் உயர்ந்தவருக்கும் வருவது ஏன்??

கண்ணால் பார்பவருக்கு மட்டுமே!!!

பார்வை தினம் சொன்னது 

கையால் தொடும் போது உணர்வதே அழகு..

ஞானத்தால் உணர்வதே அழகு .

எங்கும் அழகு எதிலும் அழகு.

அழகு by Veena Shankar


அழகு


அனுபவத்தில் முதுமை அழகு


ஆக்கத்தில் புதுமை அழகு

ஆளுமையில் ஆண்மை அழகு

ஆனந்ததில் அழுகை அழகு


உறக்கத்தில் கனவு அழகு

உணர்வில் மென்மை அழகு

ஊடலில் பொறுமை அழகு


எண்ணத்தில் மனம் அழகு


ஓட்டத்தில் வெற்றி அழகு


காதலில் புரிதல் அழகு

காத்தலில் வீரம் அழகு

கூடலில் தனிமை அழகு

கேள்வியில் பதில் அழகு

கொடுப்பதில் கருணை அழகு


சிரித்தலில் பாவம் அழகு

சிந்திப்பதில் அறிவு  அழகு

செழிப்பில் வயல் அழகு 

சோகத்தில் கருணை அழகு


தவிப்பில் செயல் அழகு

தனிமையில் அமைதி அழகு

தடுத்தலில் வாய்மை அழகு

தாய்மையில் பெண்மை அழகு

தாய்மடியில் சேய்மை அழகு

தேடலில் வேகம் அழகு

தொட்டிலில் பாட்டு அழகு


பகைமையில் மறதி அழகு

பார்வையில் காட்சி அழகு

புன்முறுவலில் முகம் அழகு

பெறுவதில் மேன்மை அழகு 

பேச்சில் வறுமை அழகு


வலிமையிடத்து தோல்வி அழகு

வளர்ப்பில் பாசம் அழகு

வழக்கில் வாதம் அழகு

வாழ்வில் சுகம் அழகு


தாயின் ஆனந்த கண்ணீருக்கும் அழுகைக்கும் வேறுபாடு அறியா மழலையின் புன்னகை பார்வை அழகு








எதில் அழகு

சந்திப்பதில் இல்லை அழகு
சிந்திப்பதில் உண்டு அழகு
பேசுவதில் இல்லை அழகு
புரிவதில் உண்டு அழகு
வெல்வதில் இல்லை அழகு
மீள்வதில் உண்டு அழகு
தாகத்தில் இல்லை அழகு
தண்ணீரில் உண்டு அழகு
சாடுவதில் இல்லை அழகு
சமாளிப்பதில் உண்டு அழகு
பார்ப்பதில் இல்லை அழகு
பார்வையில் உண்டு அழகு
கொல்வதில் இல்லை அழகு
காப்பதில் உண்டு அழகு
முகத்தில் இல்லை அழகு
அகத்தில் உண்டு அழகு
நிறத்தில் இல்லை அழகு
நிஜத்தில் உண்டு அழகு
உறுப்பில் இல்லை அழகு
உயிரில் உண்டு அழகு
இறப்பில் இல்லை அழகு
பிறப்பில் உண்டு அழகு
சுடுவதில் இல்லை அழகு
குளிர்ச்சியில் உண்டு அழகு
பணத்தில் இல்லை அழகு
உதவுவதில் உண்டு அழகு
வெறுப்பில் இல்லை அழகு
பொறுப்பில் உண்டு அழகு
பிரிவதில் இல்லை அழகு
சேர்வதில் உண்டு அழகு

அழகு by Akhiladevi Kumaran

 








Wednesday, October 13, 2021

ஆசிரியை திலகா(ம்) by Veena Shankar

 




பார்வை by Veena Shankar

 


பார்வை

 எத்தனை எத்தனை மாற்றங்கள்

 உயிரினங்களின் காட்சிகளில் உன்னாலே

பச்சைப்பசேல் வயல்களை காண்பதும் உன்னாலே

வாடிய பயிரை காண்பதும் உன்னாலே

அருள் தரும் கடவுளை தரிசிப்பதும் உன்னாலே

இருளால் உலகினை உணர்வதும் உன்னாலே

இரு விழி பார்வைகள் கொண்டாலும்

ஒரே ஒரு காட்சியும் உன்னாலே

உன் திறன் குறைந்தாலும்

என் ஆற்றலும் மடிவது உன்னாலே

ஒளிரும் பொருட்கள் யாவும் மிளிர்வதும் உன்னாலே

சாட்சியாய் இருக்கும் வழக்கு

மோட்சம் கொள்வதும் உன்னாலே

பணத்தை வாரி கொடுத்தாலும் - நீ

கடவுளின் பிச்சையே மனிதனுக்கு

மனத்தால் கடவுளை மறுத்தாலும்

உன்னால் காட்சியையும் நேசிக்கிறான்

ஒற்றுமைக்கு நீயே உதாரணம் - உன்னை

நினைக்கையில் நான் சாதாரணம்

நான் வளர்ந்து கொண்டே போனாலும்

நீ உன் அளவிலேயே இருக்கிறாய்

பல நோய்கள் மனிதனை ஆட்கொண்டாலும்

முதலில் வேண்டுகிறான் உன்னையே

இனிப்பால் கவரப்படும் மனிதனுக்கு

கசப்பானது உன் இழப்பு

இரத்த கொதிப்பு உள்ள மனிதனும்

இரத்தக் கசிவாலே உன்னை இழக்கிறான்

எத்தனை ஜென்மம் கொண்டாலும்

உனக்காகவே ஏங்கும் மானுடம் நான்

வருடம் தோறும் காத்திருக்கிறேன் - நான்

 உன் புகழ்பாட உலக பார்வை தினத்தன்று

சிந்திக்கவும் மாட்டேன் உன் இழப்பை - நான்

உன்னால் மட்டுமே வாழ்க்கையை ரசிப்பதால்

Friday, October 1, 2021

இந்த வாரம் "கேள்விக் கணைகள்" by Vidhya Nivash


 

இயற்கையிலேயே பெண்கள் அதிகம் கேள்வி கேட்பார்கள் ...ஏன் கேள்வி கேட்க கூடாதா??


அதில் என்ன தவறு இருக்கிறது?? வீட்டில் வாண்டுகள் கூட அம்மா கொஞ்ச நேரம் வாயை மூடுங்க என்ற அளவிற்கு வந்துவிட்டது நம் நிலைமை???

எப்படி ஒன்றுமே கேட்காமல் ஜடம் போல் இருப்பது ??எதற்கு நாங்கள் படித்தோம் ??கடவுள் எங்களுக்கும் ஏன் அறிவைக் கொடுத்திருக்கிறார்??


புரியவில்லை என்றால் அதைப் புரிய வைக்க வேண்டியதும் உங்கள் கடமை தானே அதை விட்டு வாயை மூடு என்று சொல்வதில் என்ன இருக்கிறது ??

உடன்இருப்பவருக்கு ஒரு பதில் கூட கூற முடியாத உங்களால் எப்படி மற்றவரிடம் பேச முடிகிறது??

யார் கொண்டு வந்தது ஆண் பெண் என்ற வேற்றுமைகளை அங்கிருந்துதான் இத்தனை கேள்விகளும் வந்தன ??


பெண்களுக்கு மட்டும் ஏகப்பட்ட விதிமுறைகள் அதை மீறினாலும் அதற்கு பெயர் வேறு ஒன்று ,இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க நாங்கள் கத்துக்க வேண்டும் எங்களுக்கு பிடித்தவற்றை எங்கள் மனதை நாங்கள் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் சொற்பொழிவுகளை கேட்டு ,திரைப்படங்களைப் பார்த்து மனத்திற்கு பிடித்தவற்றை செய்து எங்களை நாங்களே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா???


காரில் கொஞ்ச நேரம் ஏசி வேலை செய்யவில்லை நம்மால் இருக்க முடியவில்லை ???

ஆனால் ஒருவர் கொளுத்தும் வெயிலில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ஏன் இந்த வேற்றுமை ???


எங்கிருந்து வந்தது இந்த வேற்றுமை வெளியில் இருக்கும் கழிவறைகள் எப்படி இருக்குமோ என்ற சந்தேகத்தில் நாம் போய் வந்தவுடன் அதை சுத்தம் செய்வதற்காக காத்திருக்கும் பெண் ஏன் இந்த வேற்றுமை ???


யார் உரிமை கொடுத்தது பெண்களைப் பற்றி அவதூறாக பாடல் எழுதுவதற்கு அதையும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தி தானே??? 70 வயது ஆகியும் இன்னும் கதாநாயகன் , கூட நடிக்கும் கதாநாயகிக்கும் மட்டும் ஏன் 70 வயதில்லை???


மரம் நட வேண்டாம் ,நீ காடுகளை பாதுகாக்க வேண்டாம் ,சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டாம் ,ஆனால் சின்ன குழந்தைகள் என்ன செய்தன ???


கேள்விகள் பல நூறு தீ போல் இருக்கிறது உள்ளே .. ஏன் இந்த எண்ணங்கள் வருகிறது உலகில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறது அல்லவா??? ரசிக்க எவ்வளவோ இருக்கிறது அல்லவா???


நான் ரசிக்கும் அதே உலகத்தில் தானே இத்தனை கஷ்டங்களும் நிறைந்திருக்கிறது. தினமும் தேவையில்லாத பல செய்திகள் வருகின்றன ,தேவையான பலவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஏன் ???கோவை சரளாவும் ,வடிவேலும் வரும் காமெடியை பார்த்து ரசித்துக் கொண்டே இருப்போம் நடப்பது என்ன???


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...