Thursday, October 28, 2021

சட்டென்று பட்டென்று புதுகவிதைகள் by Veena Shankar




  பொன்நகை   / புன்னகை  


பொன் நகை வேண்டும் என்றாய் 

புன்னகையோடு

 புன்னகை மாறாமல் வாங்கிக்கொடுத்தேன் 

பொன் நகையை 

பொன் நகையும் இருந்தது புன்னகை மாறாமல் 

அடகு கடையில்

புரிந்தது உன் ஆவேசம் 

பொன்நகை மற்றவர் புன்னகைக்கு 

ஆளானதால்

என் நிலையை நீ புரிந்திருந்தால் 

புன்னகையும் பொன்நகை ஆகி இருக்குமே


 தாய் 


தாயின் வயிற்றில் உருவாகி 

தாயின் மடியில் வளர்ந்து 

தாயோடு நடைபயின்று

 நீ தாயை எட்டி உதைக்கும் தருணத்தில்

 தந்தையானால் உன் தாயின்

 அவலம் புரியும் உனக்கு


தாயின் மனது


இன்று

எட்டி நின்றே நடந்தாய் என்னுடன்

நீ  என்னை பற்றிக் கொள்ளாமல் 

நாளை 

தொற்றிக்கொண்டு வருவேனோ 

என்று நீ எண்ணியதால்


                     புதுக்கவிதை  


சட்டென்று பிறந்தது புதுக்கவிதை 

பட்டென்று தொட்டது   படித்தவரை 

ஆனால்   

சிட்டென்று  பறந்தது  ஒரே நிமிடத்தில்

 படித்தவர் மனது

 அடுத்த புதுக்கவிதையை தேடி

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...