Sunday, October 31, 2021

ஐந்து முத்துக்கள் by Veena Shankar


 

மஞ்சள் கயிறு


வளையல் கொடுத்தாய் உன்னை  

நான் வளைந்து வருவதற்காக  

காதணி கொடுத்தாய் உன் 

காதலை காதில் ஓதுவதற்காக

சங்கிலி கொடுத்தாய் உன்னை 

நான் பிணைந்து இருப்பதற்காக 

கொலுசு  கொடுத்தாய்  உன்னை  

நான் கொஞ்சுவதற்காக

மோதிரம் கொடுத்தாய்  உன்னிடம்  

நான் மோதாமல் இருப்பதற்காக

நெற்றிசூட்டி கொடுத்தாய்  உன்னை

 நான்  முத்தமிடவதற்காக

ஆனால்  நீ என் கழுத்தில் மஞ்சள் கயிற்றை 

கட்டாமல் ஏமாற்றி விட்டாய்  என்பதால்  

நான் ஏற்றுக்கொண்டேன் 

தூக்குக் கயிறை  மௌனமாக


 நிதர்சனம்


நாட்கள் எண்ணப்படுகிறது மணநாளுக்கு 

மணமகன் வீட்டில்

தாள்கள் எண்ணப்படுகிறது வரதட்சணைக்கு 

மணமகள் வீட்டில்


 அன்புள்ள தோழிக்கு


தோழியே!

பரிவு உண்டு நம்மிடத்தில்

பிரிவு வேண்டாம் என்னிடத்தில்

அறிவு உண்டு நம்மிடத்தில்

சரிவு வேண்டாம் நம் எண்ணத்தில்

உன்னை

தெளிந்து கொள் உன்னிடவனித்தில்

உன் பார்வைக்கு சரி என்பவனிடத்தில்


 குடை வாழ்க்கை


குடைக்குள் நின்றபடி இருக்கிறான் இளைஞன்

ஓடாத இரு சக்கர வாகனத்தின் விளம்பரத்திற்காக

தன் வாழ்க்கையின் சக்கரத்தை நிஜமாக ஓட்டுவதற்காக


வாழ்க்கை


வாடாத முகத்தோடு வாடும் பூ தொடுத்தாள்

வாடிகொண்டிருக்கும் வாழ்க்கையில் விடாது ஜெயித்தாள்

ஆனால்

வாடியது அவள் முகம் அன்று மட்டும் தனக்கு வாராத வரனும் வந்ததாலும்

வாழாது நிற்கும் தன் சகோதரியின் வாழ்க்கை வாடி போனதாலும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...