லஞ்சம்
படித்து பட்டம் வாங்க நான் செலவழித்த காசை
எடுக்க நினைத்து நீட்டினேன் கையை
பணம் வந்ததோ இல்லையோ
கைவிலங்கு வந்தது லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து
கோடி கோடியாய் அரசியல் கட்சிகள்
லஞ்சம் வாங்கினாலும்
கோடியில் இருக்கும் நான் வாங்கும்
பணம் மட்டும் கருப்பு பணமாக மாறியது
சில நூறு வாங்கிய பணத்திற்கு
பலநூறு செலவழிக்கிறது அரசு
சட்டத்தின் ஓட்டைகளாலும் அதனை
பயன்படுத்தும் சக்திகளாலும்
லஞ்சம் வாங்கியதால் கஞ்சிக்கு
வழியில்லாமல் இருக்கும் நான்
கெஞ்சி பார்த்தும் கிடைக்கவில்லை என் வேலை
வேலையை வாங்க மறுபடியும் கொடுக்க
வேண்டுமே லஞ்சம்
இதுதான் லஞ்ச சுழற்சியோ இல்லை
என்னாலேயே உருவாக்கப்பட்ட அழற்சியோ
இல்லா நிலை
சொர்க்கம் என்ன நரகம் என்ன
உயிர் போனபின் தெரிவதில்லை
கிராமம் என்ன நகரம் என்ன
தாகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை
கோயில் என்ன வீடு என்ன
மனதுக்கு அமைதி வருவதில்லை
சாலை என்ன தெரு என்ன
மரங்கள் தென்படுவதில்லை
நீ என்ன நான் என்ன
ஆறடி இடமும் நிரந்தரம் இல்லை
இந்த கலியுகத்தில்
No comments:
Post a Comment