Wednesday, October 13, 2021

பார்வை by Veena Shankar

 


பார்வை

 எத்தனை எத்தனை மாற்றங்கள்

 உயிரினங்களின் காட்சிகளில் உன்னாலே

பச்சைப்பசேல் வயல்களை காண்பதும் உன்னாலே

வாடிய பயிரை காண்பதும் உன்னாலே

அருள் தரும் கடவுளை தரிசிப்பதும் உன்னாலே

இருளால் உலகினை உணர்வதும் உன்னாலே

இரு விழி பார்வைகள் கொண்டாலும்

ஒரே ஒரு காட்சியும் உன்னாலே

உன் திறன் குறைந்தாலும்

என் ஆற்றலும் மடிவது உன்னாலே

ஒளிரும் பொருட்கள் யாவும் மிளிர்வதும் உன்னாலே

சாட்சியாய் இருக்கும் வழக்கு

மோட்சம் கொள்வதும் உன்னாலே

பணத்தை வாரி கொடுத்தாலும் - நீ

கடவுளின் பிச்சையே மனிதனுக்கு

மனத்தால் கடவுளை மறுத்தாலும்

உன்னால் காட்சியையும் நேசிக்கிறான்

ஒற்றுமைக்கு நீயே உதாரணம் - உன்னை

நினைக்கையில் நான் சாதாரணம்

நான் வளர்ந்து கொண்டே போனாலும்

நீ உன் அளவிலேயே இருக்கிறாய்

பல நோய்கள் மனிதனை ஆட்கொண்டாலும்

முதலில் வேண்டுகிறான் உன்னையே

இனிப்பால் கவரப்படும் மனிதனுக்கு

கசப்பானது உன் இழப்பு

இரத்த கொதிப்பு உள்ள மனிதனும்

இரத்தக் கசிவாலே உன்னை இழக்கிறான்

எத்தனை ஜென்மம் கொண்டாலும்

உனக்காகவே ஏங்கும் மானுடம் நான்

வருடம் தோறும் காத்திருக்கிறேன் - நான்

 உன் புகழ்பாட உலக பார்வை தினத்தன்று

சிந்திக்கவும் மாட்டேன் உன் இழப்பை - நான்

உன்னால் மட்டுமே வாழ்க்கையை ரசிப்பதால்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...