Friday, June 3, 2022

இந்த வாரத்தலைப்பு"கண்ணாடி" by Veena Shankar

 


முகம், சிகை, நகை பொலிவு பெறுவது உன்னாலே, என் மன நிலையையும், முக தோற்றத்தையும் பிரதிபலிக்கும் மாயாவி உண்மையான நிழல் நீ

முடிவு தெரியா என் பயணத்தில் என்னை, முடிசூடா மன்னனாக்கியது என் முன் இருந்த பள பள கண்ணாடி

 என் பருவ மாற்றத்தையும் இயல்பாய் என்னிடம் சொல்ல துணிந்தவன், என் மனத்தையும் பக்குவமடைய துடித்தவன் என் தோழன் கண்ணாடி

தான் உடைந்தாலும் என்னை வெவ்வேறாக காட்ட தெரியாதவன்

என் தோற்றத்தின் முடிவு உன் கையில், நன்றாக பிரதிபலித்தால் சொற்ப நேரம் மிச்சமே

பாதரசம் தடவிய கண்ணாடியில் நான் அழகு, அது இல்லாத கண்ணாடியை நான் அணிந்தால் நான் காணும் பொருள் அழகு

என் பிரதிபலிப்பாக நீ இருந்தாலும் என் பேச்சை மட்டும் ஏன் நிராகிக்கிறாய் கண்ணாடியே?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...