அனைவருக்கும் வணக்கம்,
நெடு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புத்தகத்தை பற்றி பகிர்ந்து கொள்ள விரும்பினேன். சமீபத்தில் அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் நடத்திய விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பேச்சை கேட்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய வார்த்தைகள் மிகவும் உற்சாகம் தந்தது. பிறகுதான் அவர் எழுதிய கையருகே நிலா என்ற புத்தகத்தை படித்தேன் .
என்னவென்று சொல்வது 70 களிலும் , 80 களிலும் பிறந்தவர்களின் வாழ்க்கை ஏடு என்று சொல்வதா ?இனிவரும் வருங்காலத்திற்கு முன்னேற்ற பாதை என்று சொல்வதா? கவிதை நடையில் எழுதிய தமிழ் புலமையை கண்டு வியப்பதா?அதற்கு மேலும் காந்தி, விவேகானந்தர் மற்றும் ஜென் தத்துவத்தை சொல்லி அதற்கெல்லாம் மேலாக தன் அன்னையின் அறிவுரையும் கூறி வாழ்க்கை பாடத்தை கற்றுத் தரும் ஒரு புத்தகம் என்று சொல்வதா ? நம்முடைய சிந்தனைகளை வெளிப்படுத்த தாய்மொழி சிறந்தது என்பதை மேற்கோள் காட்டி இருக்கும் சிறப்பை சொல்வதா?தாய்நாட்டு பற்று மற்றும் அவருடைய சமுதாய சிந்தனையை சொல்வதா ? நிலவிலும் சாதித்து மீண்டும் இந்த மண்ணிலும் சாதிக்க அவர் முயற்சிக்கும் பாதையை சொல்வதா? எதை சொல்வது எதை விடுவது என்பதே தெரியவில்லை.
அவர் மேற்கோள் காட்டிய ஒரே ஒரு ஜென் கதையை சொல்லி நான் இங்கே முடிக்கிறேன். ஒரு காட்டில் மான், வெட்டுக்கிளி மற்றும் தேனீ இரைத்தேட சென்றதாம் .அதிலே மான் பசியாறி சென்ற பிறகு அடுத்த மான் அங்கே இரைத்தேட இலைகள் இருக்காது. வெட்டுக்கிளி கத்தரித்துச் சென்ற செடிகள் அப்படியே பட்டு போய்விடும். ஆனால் தேனீக்கள் தேனை மட்டும் எடுத்துச் சென்று அந்தச் செடி மீண்டும் காய் காய்ப்பதற்கு அடுத்த தலைமுறை உருவாகுவதற்கு அடி கோலிட்டு செல்கிறது. இதில் எப்படியாக இருக்க வேண்டும் நாமும் அடுத்த தலைமுறையை உருவாக்க நாம் பாதைகளை வகுத்து செல்ல வேண்டும் அல்லவா ? என்று அழகாக மேற்கோள் காட்டியுள்ளார்.
பல கருத்துக்கள் நிரம்பி வழியும் அற்புதமான புத்தகம் இது. படிப்படியாக தன்னுடைய வாழ்க்கையில் எப்படி முன்னேறி உள்ளார் என்பதை ,திறமைகளை உள்ளே வைத்து தேங்கி போகாமல் ,வாய்ப்புகள் இல்லை என்று சோம்பி போகாமல் ,இருப்பதை பயன்படுத்தி மேலே செல்வதற்கு, சிந்தனையை தூண்டும் பல கருத்துகளைக் கொண்ட ஒரு அழகான புத்தகம்.
விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்துவதை விட,கிடைத்ததை விரும்பு.
Super. Thanks for sharing
ReplyDelete.
Thank you Veena
DeleteSuperb n realistic words to follow n our life 👌
ReplyDeleteThank you Kiruthika
DeleteGood, thanks for sharing 👍
ReplyDeleteThank you Vishalakshi
ReplyDelete