Monday, November 7, 2022

இனம்புரியாத இன்பம் by Vidhya Nivash

 


தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்..நான் செல்லும் பாதையில் தினமும் ஒரு தாய் தன்னுடைய மகனை ஸ்டாலரில் வைத்து தள்ளிக்கொண்டே என்னை கடந்து செல்வாள். ஒரு சில நாட்கள் நான் கவனிக்கவில்லை .அதன்பின் தான் நான் கவனித்தேன் சிரித்த முகத்துடன் எப்போதும் அவள் தன்னுடைய மகனை தள்ளிக்கொண்டே செல்வாள் .

ஒரு நாள் என்னை பார்த்து சிரித்தாள் .மறுநாள் சிரித்துக்கொண்டே காலை வணக்கம் சொன்னாள். நான் முதலில் சிரிக்கும் பொழுதே அவள் என்னை பார்த்து தான் சிரிக்கிறாளா என்று சந்தேகம். மறுநாள் காலை வணக்கம் சொல்லும் பொழுதும் அதே சந்தேகம். அவளுடைய குழந்தையும் ஒரு சராசரியான குழந்தை இல்லை என்பதை அதற்கு பிறகு தான் கவனித்தேன் . பின் மனதுக்குள்ளே ஒரு சந்தோஷம் சிரித்த முகத்துடன் காலை அவசரத்தில் பல வாகனங்கள் செல்லும் பாதையில் தைரியமாக புன்னகையுடன் அவள் அந்த குழந்தையை ஆனந்தமாக அழைத்துச் செல்வதைப் பார்க்கும் பொழுது எவ்வளவு ஒரு இனிமையான உள்ளம் அவளுக்கு என்று உணர்ந்தேன் .

 இன்று ஒரு ஆச்சரியம் வார விடுமுறை கழித்து இன்று நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தேன். தூரத்தில் இருந்து வரும் பொழுதே அவள் கை அசைக்கிறார். எனக்கு தானே என்ற சந்தேகத்துடன் அருகில் செல்ல மீண்டும் கையை காட்டுகிறார் அது எனக்கு தான் என்று புரிந்து கொண்டேன். நானும் சிரிப்புடன் கையசைத்து புன்னகைத்தேன் . 

நன்கு பேசி பழகினார்கள் கூட தூரத்தில் வரும் பொழுதே சிரிப்போமா? வேண்டாமா ?பேசுவோமா? வேண்டாமா? என்று இருக்க முன்பின் தெரியாத பேர் கூட அறியாத எந்த தேசம் என்று தெரியாத ஒரு தோழியைப் போல் உற்சாகமாக அவள் எனக்கு கையசைத்து புன்னகை புரிந்ததும் ஒரு மனம் புரியாத இன்பத்தை தந்தது ஒரு பாடத்தை புகட்டியது அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...