பச்சை பொன்னாடை
போர்த்திய மலை குன்றுகள் ....
பன்னீர் குளியல் போட்ட பளிச் புல்வெளிகள்...
வானவில் கூட பொறாமை கொள்ளும் வர்ணபூக்கள் ...
வானம் தொடும் முயற்சியில் நெட்டை மரங்கள்...
புத்துயிர் பரவசம் கொள்ள தேகம் முழுதும் வருட - பனி காற்று.....
என....
இத்தனை அழகை காட்டியும் ..
இன்றேன்னவோ ..
இந்த மலைகளின் ராணியால்..
இவளை கவர முடியவில்லை..!?..
இவள் தான் ஓவியா..!..
ரவி வர்மன் ஒவியமே
புருவம் உயர்த்தும் இவள் அழகு கண்டு ..!..
என்ன சொல்ல..?
இவள் மனம் தான் -
துடிக்கிறது..தாங்க முடியா துயரத்தால்..இன்று!..
தன்னையே மூச்சென்றவன்..
இன்று- தன்னை உதறி விட்டு போய் விட்டான்..
தன்னை வரைந்த தாய்
ஓர் தாசி என்று...!!...காரணம் சொல்லி...
தாசியானாலும் தன் தாயாயிற்றே ..
அவள் பாதை அவளை சிதைத்தது.. வழி மாற செய்தது..அதில் தன் பிழை என்னவோ?..
மலை உச்சியில் நின்று
முடிந்தவரை அழுதாள் ..
தன் தாயின் அடையாளம் மறக்க ..
தான் வாழ..
தன் தாய் மறு வாழ்வு பெற ..மாற்று வழி தேட ..
விடை அறியாது -
இரண்டடி முன்னெடுத்து வைத்தாள் - பைத்தியிகாரி !!
நெஞ்சடைத்தது
விழி வியர்த்தது ..
அவ்வளவுதான் -
மூடிய இமைக்குள் கும்மிருட்டு ..!!
இறநூறு அடி மலை ஆழம் அறிந்தால் - கீழே
விழும் போது தான்..!!!
இவள் தவிப்பரிந்தோ என்னவோ
மலை ராணி மனமுவந்து -
கரம் விரித்தாள்
மரக்கிளையாய்..!..
உயிர் பிழைத்து
ஞானம் பெற்றால்
இத்தனை அடி உயரம் குதிக்க தான் கொண்ட
துணிச்சல் -
வாழவும் உதவும் தானே ?--.என்று...
வழி கண்டதும் -
விழி திறந்து ..
அழைக்க ஆரம்பித்தாள்
உதவிக்கு யாரேனும் வாருங்கள் என்று ...!....

No comments:
Post a Comment