Sunday, November 6, 2022

இந்த வாரத்தலைப்பு " நன்றி" - Kiruthika

 


மறுநாள் உதிரும் -என

தெரிந்தும் மலரும் மலர்களுக்கு ...

மறுபடியும் வந்த வழி தான் -என

தெரிந்தும் கரை மோதும் அலைகளுக்கு ...

மாலையில் அந்தி சாயும்- என

தெரிந்தும் நேரம் தவறாது எழும் கதிரவனுக்கு...

மறுக்காமல் சில நிமிடங்களில் நீர் நிலை தான் -என

தெரிந்தும் விழும் பால் பனித்துளிக்கு...

மனித மனம் வெட்ட நினைத்தாலும் மீண்டும் துளிரும் இயற்கைக்கு ...

கோடான கோடி நன்றிகள் ....

இயற்கை இல்லையேல் ....

ரசனை எங்கே?

நம் முதல் கவிதை தான் எங்கே?

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...