Sunday, February 2, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena:

சொந்த பந்தங்கள் நிறைவாய் உறவாட சந்தர்ப்பமும் இதுவே!


பந்தியில் ஓர் அலப்பறையும் தொடர்கதை தானே!


தொந்தி நிறைய சிறப்பாய் அனைவரோடும் உண்டு களித்தே


சாந்தி கொள்வது 

மனமும் சுவையிலே!


மந்தி கூட்டத்தின் வழி இது என்பதாலே


சந்திப்பில் உண்டு ஓர் மகிழ்ச்சயே!


அந்தி வேளை சுருங்கி நின்றாலும் அடுத்தவர்


வம்பில் ஓர் புது ஆனந்தமே!


சிந்தி சிதறி கிடந்தாலும் எதற்கும்


சந்தியில் கூடும் பங்காளிகள் 


பிந்தி பிரிவால் சேர்ந்து கொண்டாலும்


தந்தி போல் விரைந்து சேர்ந்திடும் மனதின் எண்ணத்தாலே 


நீந்தி கற்கும் வாழ்க்கையில் யாவும்


நந்தி போல் நிற்கும் பகைக்கும்


முந்தி சென்று அணைக்கும் உறவுகள் 


ஏந்தி காக்கும் அதுவே என்றேன்றும்


நிந்தி எந்நாளும் குடும்ப ஒற்றுமை செழிக்க!

Vidhya:

அள்ளி அள்ளி வயிறார சாப்பிட்ட நமக்கு ..

கிள்ளி சாப்பிட, அரை வயிறு சாப்பிடக்கூட நேரமில்லை!

அத்தை வடைச்சுட

அம்மா பம்பரமாக சுத்த

ஆத்தா மேற்பார்வையிட 

வண்டுகள் போல் வாண்டுகள்

 தூணை சுற்றி வர..

தான் வாங்கிய அனைத்தும்

 சமைத்து விட்டாசா என அப்பா

 மோப்பம் விட,

கேலிக்கூத்தாக, கும்மாளமாக

 தயாராகும் விருந்து,

யாருக்கும் எந்த நோயும் இல்லை

இருந்தாலும் கவலையில்லை 

எந்த மாத்திரையும் முன்னும்

 பின்னும் உண்ண வேண்டாம்.

அண்டா அண்டாவாக காப்பி

 தண்ணியை தவிர...

நினைக்கும் போதே எச்சில் ஊர

தின்ன தின்ன திகட்டாத 

விருந்து எங்கும் கிடைக்காத

 உணவே மருந்து..




No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...