Thursday, November 10, 2022

இந்த வாரத்தலைப்பு விடுதலை by Veena Shankar

 


தலைவர் என்பதை விடுத்து அனைவரும் சமம் என்ற உணர்வே அனைவருக்குமான விடுதலை.

 மனித கூண்டிலிருந்து வெளிவருவது மட்டும் விடுதலை ஆகாது. மனகூண்டிலிருந்து வெளிப்பட்டு திறமையை செயல்படுத்துவது விடுதலை

விடுகதையுலிருந்து அடைந்த விடுதலை

தாயின் பிரசவத்தில் சிசுவிற்கு விடுதலை

வார்த்தையின் கோர்வையில் மௌனத்திற்கு விடுதலை

போராட்டத்தின் ஓட்டத்தில் வறுமைக்கு விடுதலை

புன்னகை பூப்பதால் சோகத்திற்கு விடுதலை

உண்மைத் தன்மையால் போலிகளுக்கு விடுதலை

வான் மழையினால் நதிகளுக்கு விடுதலை

வயோதிகம் கொள்வதால் கடமையிலிருந்து விடுதலை

எல்லை மீறாத வரை கட்டுப்பாட்டிற்கு விடுதலை

அறிவியலின் விந்தையால் அரிச்சுவடிக்கு விடுதலை

இறுதியில் இதயத்தின் துடிப்பிலிருந்து உடலுக்கு விடுதலை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...