இதயத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலவா?
இல்லை
வானின் ஊடே அதன்
வெண்ணிற உயிரா?
இல்லை
என் காதலியின் மனதில்
எனக்கான இடமா?
இல்லை
வண்ணம் இழக்கா அவள் மனமா?
இல்லை
கலையா மேகக் கூட்டத்தின் நிலையா?
இல்லை
வான் வரைந்த ஓவியத்திற்கு
கண் பட்டுவிடக்கூடாது
என்று அச்சத்தில் மறைக்கும் மரக்கிளையின் செயலா?
வானில் அகப்பட்டது
அகன்றுவிடும்
சிலமணித் துளிகளில்
நிஜத்தில் வசப்பட்ட
இதயம் பரிமாறுமே ஒழிய
அழியாது உடலில் ரணத்தால் கொள்ளும் வடு போல
மனதில் தங்கிவிடும்
நினைவால் என்றும்
தாங்கும் யாவும்
பலமே மனதால்
அதுவே நமக்கு பயனே
நம் சக்தி அறிவதால்
- Veena
நிலவிற்கும் மேகத்திற்கும்
இடையே உறவாடும் கிளைகள்
முதலில் அந்த மேகத்தை
இரண்டாவதாக அந்த நிலவை
தொட்டு விட வேண்டும்..
பூமியிலிருந்து நிலவுக்கு அம்பு
எய்தும் மனுட கூட்டம் அதை
கலைக்கும் எறும்பு கூட்டம்
அதை விட்டு வைக்காத மேக
கூட்டம் தரும் மழைத்துளி
ஒவ்வொன்றாக ஒன்றை
தொடரும் விதியின் வழி மதி!
Vidhya

No comments:
Post a Comment