Sunday, November 6, 2022

இந்த வாரத்தலைப்பு " நன்றி" -ரிஷி

 

நன்றி!!!

இடமறிந்து என்னை 

பயன்படுத்துபவர்களுக்கு...

நன்றி!!!

ஒருவர் எதிர்பாராமல்

செய்யும் உதவிக்கு

மனமுவந்து கூறியதற்கு...

நன்றி!!!

ஒருவர் வெறுப்பை

அளித்தும் சிரித்து நகரும் தருணத்திற்கு...

நன்றி!!!

தவறை அறியாமல்

தவறு செய்பவர்க்கு

நல்லதை உணர்த்தியவர்களுக்கு...

நன்றி!!!

கரையில் இருப்பவர்களுக்கும்

கடலில் நீந்த

ஏதோஓர் விதம்

உதவியதற்கு...

நன்றி!!!

நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை

மழையாக பொழிபவர்களுக்கு...

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...